இப்படி தோளுல கை போட்டு போட்டோ எடுத்த கிரிக்கெட் வீரருக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆர்டிஓ
இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சமீபத்தில் சொந்தமாக கார் ஒன்றை வாங்கனார். இந்த காரை அவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலான நிலையில் தற்போது அப்பகுதியில் உள்ள ஆர்டிஓ அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது? நடந்தது என்ன விரிவாக காணலாம் வாருங்கள்.
சமீபத்தில் இங்கிலாந்து - இந்தியா இடையே டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் வேகபந்து வச்சாளராக பங்கேற்ற வீரர் ஆகாஷ் தீப். இவர் இந்தியா முழுவதும் இந்த டெஸ்ட் தொடர் மூலம் பிரபலமானார். இந்நிலையில் தொடரை முடிந்து இந்தியா திரும்பிய இவர் சமீபத்தில் சொகுசு எஸ்யூவி கார் ஒன்றை வாங்கியுள்ளார். லக்னோ பகுதியில் இந்த காரை வாங்கி அது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் லக்னோ ஆர்டிஓவில் இருந்து இவருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. அதன் படி இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி காரை வாங்கியுள்ளார். இதற்கு இன்சூரன்ஸ் 8ம் தேதி பெறப்பட்டுள்ளது. இவருக்கு 9ம் தேதி தான் காருக்கான நம்பராக UP32 QW 0041 என்ற நம்பர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோட்டார் வாகன சட்டம் பிரிவு 39 மற்றும் 41(6) பிரிவின் கீழ் வாகனங்களில் கட்டாயம் எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட் மற்றும் டிஆர்எம் பொருத்தப்பட்ட பிறகு தான் பொது சாலையில் ஓட்ட வேண்டும்.
இது இல்லாமல் சாலையில் வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனபடி விதிமுறை மீறல் ஆகும். இது வாகனத்தை பறிமுதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என குறிப்பிட்டிருந்தது. இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 72 மணி நேரத்திற்குள் ஆகாஷ் தீப் நேரிலோ அல்லது அவரது ஒப்புதல் பெற்ற ஒர ரெப்ரசென்டேட்டிவ் ஒருவர் ஆர்டிஓ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.
அப்பொழுது வாகனத்தின் பதிவெண் சான்று, அதற்காக வரி செலுத்திய சான்று ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் எனவம் தெரவித்துள்ளுது. இமேம் இவருக்க வாகனத்தை விற்பனை செய்து டீலரையும் நேரில் ஆஜராக நோட்டீஸை அனுப்பியுள்ளனர். இது குறித்த விளக்கத்தையும் நேரில் வந்து அளிக்கும் படி தெரிவித்துள்ளனர். தவறும் பட்சத்தில் டீலர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மோட்டார் வாகன சட்டப்படி ஒரு வாகனம் பதிவெண் பெற்ற பிறகு மட்டுமே சாலையில் இயங்க அனுமதிக்கப்படும். அதற்கு முன்னர் சாலையில் அந்த காரை ஓட்டினால் அது சட்ட விதிமுறை மீறல் ஆகும். அதற்காக தான் தற்போது ஆகாஷ் தீப்பிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை அறித்தால் அதற்கு தகுந்தார் போல நடவடிக்கை எடுக்கப்படும்.
வாகனம் பதிவு செய்ப்பட்ட பிறகு எடுத்த இவர் ஓட்டினாரா, அல்லது சட்ட விதிமுறையை மீறி வாகனம் ஓட்டினாரா என்பது விசாரணையில் தெரியவரும். இவர் தவறு செய்தது தெரியவந்தது. அதற்காக அபராதம் விதிக்கப்படும். இது மட்டுமல்லாமல் வாகனத்தை பறிமுதல் செய்யக்கூட வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் மிக கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் முக்கியமாக பிரமுகர்கள், பிரபலங்கள் இதை பின்பற்றினால் தான் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கும். மேலும் அரசும் மக்களுக்கு இது குறித்த போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








