23 லட்ச ரூபா காரை 1.31 கோடி ரூபா கொடுத்து வாங்கியது இவருதானா?.. ஏலத்துல சண்டை போட்டு இத வாங்க காரணம் என்ன?
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தார் ராக்ஸ் (Thar Roxx) கார் மாடலை சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தைத் தொடர்ந்து விற்பனைக்காக இந்த காரின் உற்பத்தி பணிகளையும் அது நாட்டில் தொடங்கியது. இதன்படி, முதன் முதலில் விற்பனைக்காக உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட தார் ராக்ஸ் (VIN No: 001) காரை ஏலத்தில் விற்கவும் திட்டமிட்டது. இதனடிப்படையில் ஏல பணிகளும் நாட்டில் தொடங்கின. அந்த முதல் யூனிட்டின் விற்பனைக்கான ஏலம் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளிலேயே ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் பங்கேற்க சுமார் 10,980 பேர் பதிவு செய்தனர். இந்த முதல் யூனிட் தார் ராக்ஸ் காரை வாங்க பலரும் கடுமையாக போட்டியிட்டனர். ஆனால், கடைசி வரையில் 20 நபர்களால் மட்டுமே மிகவும் ஆக்டீவாக இருக்க முடிந்தது. அந்த அளவிற்கே ஏல களம் சூடுபிடித்துக் காணப்பட்டது.

இந்த நிலையிலேயே ரூ. 1 கோடியே 31 லட்சத்திற்கு ஓர் நபர் இந்த காரை வாங்கிவிட்டதாக ஏலத்தின் இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரூ. 25 லட்சத்திற்கு தொடங்கப்பட்ட ஏலமானது இறுதியாக ஒன்றரை கோடி ரூபாக்கு இணையான விலையில் முடிவுற்றது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
மேலும், இவ்வளவு தொகைக் கொடுத்து வாங்கிய அந்த நபர் யார் என்கிற கேள்வியே அனைவருக்கும் எழும்பியது. இந்த நிலையிலேயே தார் ராக்ஸ் கார் மாடலின் முதல் யூனிட்டின் உரிமையாளர் யார் என்கிற விபரம் வெளியாகி இருக்கின்றது. ஆகாஷ் மிண்டா, இவரே ரூ. 23 மதிப்புள்ள தார் ராக்ஸ் கார் மாடலை ரூ. 1.31 கோடிக்கு ஏலத்தில் பெரும் போராட்டம் செய்து வாங்கியவர் ஆவார்.
மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் இவரே ஆவார். இவருக்கு அந்த கார் தற்போது டெலிவரியும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. காரின் சாவியை மஹிந்திரா ஆட்டோமோட்டிவ்-இன் சிஎம்ஓ-வான மஞ்சரி உபத்யே-வே ஆகாஷ் மிண்டாவின் கைகளில் ஒப்படைத்தார். ஆகாஷ் மிண்டா முதலில் தயாரிக்கப்படும் கார் யூனிட்டை வாங்குவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என தெரிகின்றது.
ஏனெனில் இதற்கு முன்னதாகவும் தார் கார் மாடலின் முதல் யூனிட்டையும் இவரே வாங்கி இருக்கின்றார். அதை அவர் ரூ. 1.11 கோடிக்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் கிடைக்கும் கூடுதல் வருவாய்களை மஹிந்திரா நிறுவனம் நன்கொடையாக வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

மஹிந்திரா தார் 3 டோர் கார் மாடலின் 5 டோர் வெர்ஷனே இந்த தார் ராக்ஸ் ஆகும். தார் 3 டோருக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே தரமான வரவேற்பு தார் ராக்ஸ் 5 டோருக்கும் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு சான்றாகவே அக்காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் புக்கிங் விபரம் உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ் காருக்கான புக்கிங் பணிகளை அக்போடர் 3 ஆம் தேதி அன்றே தொடங்கியது. இந்த பணிகள் தொடங்கிய முதல் 60 நிமிடங்களிலேயே, அதாவது, ஒரு மணி நேரத்திலேயே 1.76 லட்சம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கை அது பெற்றது. நிறுவனத்தின் வசம் 30 ஆயிரம் யூனிட்டுகள் டெலிவரி கொடுக்க தயாராக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
தொடர்ந்து, நிறுவனத்தின் தார் ராக்ஸ் கார் மாடலின் உற்பத்தி திறனும் மாதம் ஒன்றிற்கு 6,500 ஆக மட்டுமே இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் 1.76 லட்சம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கை தார் ராக்ஸ் பெற்றிருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது.
இந்தியாவில் மஹிந்திரா தார் ராக்ஸ் கார் மாடல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், 4x4 தொழில்நுட்ப வசதியுடனும் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கிறது. ரூ. 12.99 லட்சம் தொடங்கி ரூ. 22.49 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
2.0 லிட்டர் எம்-ஸ்டால்லியன் டர்போ பெட்ரோல் - டைரக்ட் இன்ஜெக்சன் மற்றும் 2.2 லிட்டர் எம்-ஹாவ்க் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களிலேயே தார் ராக்ஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் பெட்ரோல் மோட்டாரில் ரியர் வீல் டிரைவ் வசதியும், டீசல் மோட்டாரில் ரியர் வீல் டிரைவ் மற்றும் 4X4 வசதியும் வழங்கப்படுகின்றது. பிரீமியம் அம்சங்களையும் இந்த கார் மிக தாராளமாக தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா தார் ராக்ஸ் காருக்கும் மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. ஆகையால், இதுவும் விற்பனையில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாகவே தற்போதைய புக்கிங் விபரங்கள் உள்ளன. ஆஃப்-ரோடு மற்றும் லைஃப்-ஸ்டைல் வாகனமாக தார் ராக்ஸ் காட்சியளிப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








