பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வான 20 வயது பெங்களூரு மாணவர்

பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேர்வாகியுள்ளார்.அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டி என்பது இங்கிலாந்தில் நடந்து வரும் மதிப்புமிக்க பிரபல கார் பந்தய தொடராகும். 1993ஆம் ஆண்டு முதல் இது நடத்தப்பட்டு வருகிறது. இந்தப்போட்டியில் கலந்து கொள்ள இந்திய மாணவர் ஒருவரை தேர்வு செய்துள்ளது 'மெக்லாரன் ஜிடி டிரைவர் அகாடமி'.

பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய மாணவர் தேர்வு

இந்த பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியும், டிரைவர்கள் குழு கொண்டதாக இருக்கும். இது 7 சுற்றுக்களாக நடைபெறும் போட்டியாகும்.

பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய மாணவர் தேர்வு

மெக்லாரன் ஜிடி டிரைவர் அகாடமி என்பது உலகம் முழுவதிலும் வளர்ந்து வரும் இளம் டிரைவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து அவர்களை பந்தயங்களில் கலந்துகொள்ளச் செய்யும் அமைப்பாகும்.

பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய மாணவர் தேர்வு

தற்போது இந்த அமைப்பு, பெங்களூரைச் சேர்ந்த 20 வயதே ஆன அகில் ரபிந்திரா என்னும் மாணவரை பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் கலந்துகொள்வதற்காக தேர்வு செய்துள்ளது.

பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய மாணவர் தேர்வு

இதில் அகிலுடன் மேலும் 7 இளம் டிரைவர்கள் தேர்வாகியுள்ளனர். அகில், ‘பிளாக் புல் கேரேஜ் 59' என்ற அணிக்காக களமிறங்குவார், இவருடன் இதே அகடமியை சேர்ந்த சாண்டி மிட்செல், சியாரன் ஹேகர்டி மற்றும் டீன் மெக்டொனால்ட் ஆகியோரும் அந்த அணியில் கலந்து கொள்வர்.

பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய மாணவர் தேர்வு

ஜிடி சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக பங்கேற்க வாய்ப்பு பெற்றுள்ள அகில், 2011ஆம் ஆண்டு தனது கார் பந்தய வாழ்க்கையை தொடங்கினார். இதுவரை 60 பந்தயங்களில் கலந்துகொண்டுள்ளார்.

பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய மாணவர் தேர்வு

ஜிடி 4 கார் பந்தய பிரிவில், மெக்டொனால்ட் என்ற 16 வயது இளம் டிரைவருடன் சேர்ந்து 570 எஸ் காரை இயக்க போகிறார் அகில். இவர் பிஆர்டிசி எஃப்4 மற்றும் பிரிட்டிஷ் எஃப்3 பந்தயங்களில் கலந்து கொண்ட அனுபவம் பெற்றவர் ஆவார்.

பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய மாணவர் தேர்வு

போட்டித் தொடர் குறித்து, மெக்லாரன் ஜிடியின் நிர்வாக இயக்குனர், ஆண்ட்ரியூ கிர்கல்டி கூறுகையில், "2015ஆம் இரண்டு இளம் டிரைவர்களுடன் இந்த அகடமியை துவங்கினோம், இது ஸ்போர்ட்ஸ் கார்களை நோக்கிய இளைஞர்களுக்கு உதவி புரிந்து வருகிறது" என்றார்.

பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய மாணவர் தேர்வு

அகில் தேர்வானது குறித்து பிளாக் புக் காரேஜ் 59 அணியின் மேலாளர் கூறுகையில், "அகில் எங்களுடன் இணைந்துள்ளதால் மகிழ்ச்சி அடைகிறோம். அவருக்கு கார் பந்தயங்களில் போதிய அனுபவமும், இங்கிலாந்து கார் பந்தய திடல்கள் பற்றிய நல்ல அறிவும் இருக்கிறது. "

பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய மாணவர் தேர்வு

"இது அவருடைய சக வீரர்களுக்கு உதவியாகவும், மற்ற டிரைவர்களிடமிருந்து கார்கள் பற்றிய அறிவை இவரும் தெரிந்துகொள்ள உதவியாகவும் இருக்கும். அகில் மூலம் இந்த சீசனில் எங்கள் அணி நல்ல நிலையை அடையும் என நம்ப்புவதாகவும் இளம் டிரைவர்களுக்கு வளமையான எதிர்காலம் காத்திருக்கிறது" என்றும் கூறினார்.

பிரிட்டிஷ் ஜிடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய மாணவர் தேர்வு

அகில் ரபிந்திரா தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் எடின்பர்க் எனும் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்போர்ட்ஸ் மாடாலான மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரின் படங்கள்:

Most Read Articles
English summary
The 20-year-old from Bengaluru will share the #59 570S GT4 car with 16-year-old Macdonald as they make their debuts in the seven-round championships.
Story first published: Thursday, March 9, 2017, 15:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X