கடைசியா 15 வருஷம் முன்னாடி படத்துல பாத்தது! இன்னும் அப்படியே இருக்காங்க! 1.50 கோடி ரூபா கார்ல வந்தது அவங்களா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா வெல்ஃபையர் கார் மிகவும் விலை உயர்ந்தது. தற்போதைய நிலையில் டொயோட்டா வெல்ஃபையர் கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. இதில், Vellfire Hi வேரியண்ட்டின் விலை 1.22 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் Vellfire VIP Executive Lounge வேரியண்ட்டின் விலை 1.32 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே!

ஆன்-ரோடு விலை (On-road Price) முறையே 1.51 கோடி ரூபாய் மற்றும் 1.66 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இவ்வளவு விலை உயர்ந்த டொயோட்டா வெல்ஃபையர் சொகுசு எம்பிவி கார், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்றவர்களின் விருப்பமான தேர்வாக உள்ளது.

Akshay Kumar s Wife Twinkle Khanna Spotted In Toyota Vellfire

எனவே திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்றவர்களை டொயோட்டா வெல்ஃபையர் காரில் அடிக்க காண முடியும். இந்த வரிசையில் பிரபலமான நடிகை ஒருவர் டொயோட்டா வெல்ஃபையர் காரில் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் காணும் நடிகை ட்விங்கிள் கண்ணா (Twinkle Khanna) ஆவார். இவர் கடந்த 1995ம் ஆண்டில் இருந்து 2010ம் ஆண்டு வரை திரைப்படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.

Twinkle Khanna

தற்போது எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் ட்விங்கிள் கண்ணா இயங்கி வருகிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகரான அக்ஸய் குமாரின் (Akshay Kumar) மனைவி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அக்ஸய் குமார் 2.0 திரைப்படத்தில் ரஜினிகாந்த் (Rajinikanth) உடன் இணைந்து நடித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அக்ஸய் குமார்-டிம்பிள் கண்ணா தம்பதியினர், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர்கள். இதற்கு டிம்பிள் கண்ணா தற்போது பயன்படுத்திய டொயோட்டா வெல்ஃபையர் ஒரு உதாரணம் மட்டுமே. அவர்களிடம் இன்னும் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன.

அவர்களது கார் கலெக்ஸனில் (Car Collection), ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS), ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) மற்றும் போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) போன்ற கார்கள் எல்லாம் இருக்கின்றன.

இந்த வரிசையில் கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில்தான் டொயோட்டா வெல்ஃபையர் காரை அக்ஸய் குமார்-டிம்பிள் கண்ணா தம்பதியினர் வாங்கினர். தற்போது அவர்களை இந்த டொயோட்டா வெல்ஃபையர் காரில் அடிக்கடி காண முடிகிறது. அக்ஸய் குமார் திரைப்படங்களில் நடிப்பதுடன் மட்டுமல்லாது, பல்வேறு தொழில்களில் முதலீடும் செய்துள்ளார்.

எனவே அவரது சொத்து மதிப்பு (Net Worth) சுமார் 2,500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மிகப்பெரிய செல்வந்தர் என்பதால், அக்ஸய் குமாரிடம் ஹாவ்க்ர் 800 (Hawker 800) ப்ரைவேட் ஜெட் (Private Jet) ஒன்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் மதிப்பு சுமார் 260 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இதில், ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், சுமார் 4,600 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும். இது 8 பேர் வரை சௌகரியமாக பயணம் செய்ய கூடிய ப்ரைவேட் ஜெட் ஆகும். ஆனால் சமூக வலை தளங்களில்தான் இது அக்ஸய் குமாரின் ப்ரைவேட் ஜெட் என தகவல்கள் வெளியாகி வந்தது. எனினும் ப்ரைவேட் ஜெட் எதுவும் சொந்தமாக இல்லை என அக்ஸய் குமார் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ட்விங்கிள் கண்ணா பயன்படுத்திய டொயோட்டா வெல்ஃபையர், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலமான ஒரு காராக திகழ்கிறது. மோகன்லால் (Mohanlal) மற்றும் ஜூனியர் என்டிஆர் (Jr NTR) போன்ற தென் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கூட இந்த காரை வைத்திருக்கின்றனர். டொயோட்டா வெல்ஃபையர் கார், சொகுசு, சௌகரியம் மற்றும் செயல்திறன் ஆகிய அனைத்து அம்சங்களிலும் தலைசிறந்து விளங்குவதுதான் இதற்கு காரணம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 11, 2025, 17:54 [IST]
English summary
Akshay kumar s wife twinkle khanna spotted in toyota vellfire viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+