மொத்த கூட்டமும் ஆடி போயிருச்சு! சாதா பைக்கை ஓட்டீட்டு வந்தது அவரா! எல்லாரும் சொல்ற மாரி அரசியலுக்கு வரப்போறாரா

பாலிவுட் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஸய் குமார் (Akshay Kumar). இவர் வட இந்திய பகுதிகள் மட்டுமல்லாது, நாடு முழுவதும் அறியப்படும் நபராக உள்ளார். இயக்குனர் ஷங்கர் (Shankar) இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் வெளிவந்த 2.0 திரைப்படத்தில் அக்ஸய் குமார் நடித்திருந்தார்.

2.0 திரைப்படத்தில் அக்ஸய் குமாரின் பட்சிராஜன் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பறவைகளின் அழிவுற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை, அதிக அளவில் பயன்படுத்தும் மனிதர்களை பழிவாங்கும் அந்த கதாபாத்திரம் உண்மையிலேயே மிரட்டலாக வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே ரஜினிக்கு நிகராக அக்ஸய் குமாரும் பேசப்பட்டார்.

Akshay Kumar Spotted Riding TVS Raider 125

இந்த சூழலில் அக்ஸய் குமார் மீண்டும் ஒரு முறை அனைவர் மத்தியிலும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளார். அவரது எளிமையான ஒரு நடவடிக்கைதான் இதற்கு காரணம். அக்ஸய் குமார் நடிப்பில் ஸ்கை ஃபோர்ஸ் (Sky Force) என்ற திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வரவுள்ளது. தற்போது அதன் படப்பிடிப்பு பணிகள், உத்தர பிரதேச மாநிலம் சீத்தாபூர் பகுதியில் நடைபெற்று கொண்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட அக்ஸய் குமார், திடீரென பைக் ஓட்டி, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் காவல் துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. அக்ஸய் குமார் ஓட்டியது, டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125) பைக் ஆகும்.

இது டிவிஎஸ் நிறுவனத்தின் கவர்ச்சிகரமான மற்றும் அதிநவீன பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக்கில், 124.8 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 11.22 பிஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 11.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜன் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. கருப்பு, சிகப்பு, மஞ்சள் மற்றும் நீலம் என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில், டிவிஎஸ் ரைடர் 125 பைக் கிடைக்கும். ரைடர் 125 பைக் ஒரு லிட்டருக்கு 67 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என டிவிஎஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எஸ்பி 125 (Honda SP 125), பஜாஜ் பல்சர் என்எஸ் 125 (Bajaj Pulsar NS 125), ஹீரோ க்ளாமர் எக்ஸ்டெக் (Hero Glamour Xtec) உள்ளிட்ட பைக்குகளுடன், டிவிஎஸ் ரைடர் 125 போட்டியிட்டு வருகிறது. எஸ்எக்ஸ் (SX), எஸ்எஸ்இ (SSE), சிங்கிள் சீட் (Single Seat) மற்றும் ஸ்பிளிட் சீட் (Split Seat) என 4 வேரியண்ட்களில் (Variants), டிவிஎஸ் ரைடர் 125 பைக் விற்பனையாகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) 95,219 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 1,01,570 ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கை ஃபோர்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், டிவிஎஸ் ரைடர் 125 பைக்கை அக்ஸய் குமார் ஓட்டியுள்ளதால், அந்த பைக்கின் காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இடம்பெற்றால், ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள டிவிஎஸ் ரைடர் 125 பைக், மேலும் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அக்ஸய் குமாரை பார்த்த உற்சாகத்தில், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர்கள் ஒரு சிலரே செல்பி எடுக்க முயற்சி செய்வதை இந்த வீடியோவில் காண முடிகிறது. அத்துடன் அவரை காண பிரம்மாண்ட கூட்டமும் கூடியிருந்தது. இதை எல்லாம் வைத்து பார்க்கையில், அக்ஸய் குமார் அரசியலுக்கு வரலாம் என நெட்டிசன்கள் ஒரு சிலர் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Article Published On: Wednesday, August 30, 2023, 17:25 [IST]
English summary
Akshay kumar spotted riding tvs raider 125 viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+