ஆள் அடையாமே தெரியாமல் மாறிய ரஜினி பட வில்லன்! இவர் ஏறி போன கார் இவ்வளவு காஸ்ட்லியா?
நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் தனது ரூ3 கோடி மதிப்பிலான லெக்ஸஸ் காரில் வந்திறங்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கார் குறித்து பலர் பேசி வருகின்றனர். தமிழ் சினிமாவில் ரஜினிக்கு வில்லான நடித்தவர் தற்போது அடையாளமே தெரியாத அளவிற்குமாறிவிட்டதாக பலர் பேசி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் 2.0 திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இவர் அந்த திரைப்படத்தில் வித்தியாசமான கெட்டப் அணிந்து நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் ரசிகர்கள் பலர் இந்த நடிகரின் தோற்றமே இப்படி தான் இருக்கும் என நினைத்துவிட்டனர். வயதான நடிகர் தான் ரஜினி படத்தில் வில்லனாக நடித்தார் என நினைத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நடிகர் அக்ஷய்குமார் சமீபத்தில் சாதாரண உடையில் தனது காஸ்ட்லியான ரூ3 கோடி மதிப்பிலான லெக்ஸஸ் காரில் ஏற்றி சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதை பாரத்த தமிழ் சினிமா ரசிகர்கள் பலர் ரஜினி படத்தில் வில்லனாக நடித்தவரா இவர் ஆள் ஆடையாளமே தெரியாமல் மாறிபோய்விட்டாரே என பேசி வருகின்றனர். ஆவர் ஏறி சென்ற கார் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவின்படி நடிகர் அக்ஷய் குமார் லெக்ஸஸ் நிறுவனத்தின் எல்எம் 350 எச் என்ற காரில் ஏறிச்சென்றார். இந்த கார் தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் காஸ்ட்லியான கார்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன. இந்த கார் மொத்தம் 2விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 7 சீட்டர் விஐபி மற்றம் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி ஆகிய கார்களாக விற்பனையாகி வருகிறது.

இந்த காரின் விலையை பொருத்தவரை 7 சீட்டர் விஐபி வேரியன்ட் ரூ2.42 கோடி என்ற எக்ஸ் ஷோரூம் விலையிலும் 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி கார் ரூ3.02 கோடி என்ற என்ற எக்ஸ் ஷோரூம் விலையிலும் விற்பனையாகி வருகிறது. இதில் அக்ஷய் குமார் பயன்படுத்தி வருவது 4 சீட்டர் அல்ட்ரா லக்ஸரி கார் என தெரிகிறது. இந்தியாவில் வெகு சிலர் மட்டுமே இந்த காரை வைத்திருக்கிறார்கள்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தான் இந்த காருக்கான புக்கிங் துவங்கியது. அதனால் இந்த காரை சமீபத்தில் தான் நடிகர் அக்ஷய்குமார் வாங்கியிருக்க முடியும் என தெரிகிறது. இந்த கார் ஒரு ஹைபிரிட் ரக காராகும். இது ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் பவரில் இயங்கும் திறன் கொண்டது. இந்த காரில் 2487 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 190 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆல் வீல் டிரைவ் காராகும்.
மார்கெட்டில் விற்பனையாகி வரும் டொயோட்டா வில் ஃபயர் காருக்க நேரடி போட்டியாக இந்த கார் இருக்கிறது. விலையை ஒப்பிடும் போது டொயோட்டா லேண்ட் க்ரூஸர், மற்றும் மெர்சிடீஸ் மேபேக் இக்யூஎஸ் எஸ்யூவி ஆகிய கார்களுக்கும் இந்த கார் போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காஸ்ட்லியான கார்களை பிரபலங்கள் பயன்படுத்துவது வழக்கம் தான். இந்நிலையில் இந்த காரை நடிகர் அக்ஷய் குமார் பயன்படுத்துவது நிச்சயம் ஆச்சரியமான விஷயம் அல்ல. அதே நேரம் இந்த காரை வெகு சிலரே பயன்படுத்துவதால் அதிகமாக சாலைகளில் இந்த காரை பார்க்க முடியாது.


Click it and Unblock the Notifications









