யுஏஇ வரை பிஸ்னஸில் கால்பதித்த இந்திய தொழிலதிபர் வாங்கிய கார்! மனைவி, மகள் செம்ம ஹாப்பி
அல் சஃபினா (Al Safina), இந்தியர் ஒருவரின் கட்டுப்பாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் சுற்றுலா நிறுவனம். அந்த இந்தியரின் பெயர், ஜாலி ஆண்டனி (Jolly Antony) ஆகும். அல் சஃபினா ஆனது ஜாலி ஆண்டனியின் முக்கியமான பிஸ்னஸ்களுள் ஒன்றாகும். இது இல்லாமல், நம் அண்டை மாநிலமான கேரளாவில் இன்னும் பல்வேறு வணிகங்களை ஜாலி ஆண்டனி கவனித்து வருகிறார். இத்தகைய கேரளாவின் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவராக விளங்கும் இவர், புதியதாக விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பிரிட்டிஷ் நாட்டில் இருந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடந்த காலங்களில் தோன்றியுள்ளன. அவற்றுள் கடைக்குட்டியாக ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) நிறுவனத்தை சொல்லலாம். ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் என தனித்தனியாக இருந்த நிறுவனங்கள் 2013இல் ஒன்றாக இணைந்தன.

இந்த பிரிட்டிஷ் கார் நிறுவனத்தில் இருந்து பல்வேறு கார்கள் உலகம் முழுக்க விற்பனை செய்யப்படுகின்றன. நம் இந்தியாவிலும் தான். அவற்றுள் பிரபலமானவைகளாக, ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் (Defender) கார்களை சொல்லலாம். நம் நாட்டிலும் இவை இரண்டிற்கும் தான் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்களை இந்தியாவில் பணக்காரர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வாங்கி வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது ரேஞ்ச் ரோவர் காரை அல் சஃபினா டிராவல் நிறுவனத்தின் நிறுவனரும், தற்போதைய சிஇஓ-வுமான ஜாலி ஆண்டனி வாங்கியுள்ளார்.

ஏற்கனவே கூறியதுபோல், ஜாலி ஆண்டனியின் கட்டுப்பாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கேரளாவில் செயல்படுகின்றன. உதாரணத்திற்கு, கேரளாவின் மூணாரில் இரு சுற்றுலா விடுதிகள், கொச்சியில் பெரிய மால் உள்பட பெரிய அளவிலான விவசாய நிலங்களையும் ஜாலி ஆண்டனி சொந்தமாக கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, அல் சஃபினா டிராவல் நிறுவனத்தை இந்தியாவிலும் இவர் நடத்தி வருகிறார்.
இத்தகையவர் பிராண்ட்-நியூ ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கி இருப்பதை சம்பந்தப்பட்ட லேண்ட் ரோவர் டீலர்ஷிப் ஷோரூம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வீடியோ உடன் தெரிவித்துள்ளது. ரேஞ்ச் ரோவர் கார்களில் ஜாலி ஆண்டனி புதியதாக வாங்கியிருப்பது, ரேஞ்ச் ரோவர் வேலர் (Velar) கார் ஆகும். இந்த காரை அடர் கருப்பு நிறத்தில் ஜாலி ஆண்டனி வாங்கியுள்ளார்.

இந்த கருப்பு நிறத்தை 'சாண்டோரினி பிளாக் மெட்டாலிக்' என லேண்ட் ரோவர் நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், வரேசைன் ப்ளூ மெட்டாலிக், சாடார் கிரே மெட்டாலிக் மற்றும் ஃபுஜி வெள்ளை கலர் ஆப்ஷன்களிலும் வேலர் கார் கிடைக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் ரேஞ்ச் ரோவர் வேலர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.87.90 லட்சமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இருந்து யுஏஇ வரையில் வணிகத்தை விரிவுப்படுத்தி உள்ளவருக்கு ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது. இத்தனைக்கும் காரின் விலையாக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்சங்கள் அதிகமாக வரலாம்.


Click it and Unblock the Notifications









