வேற லெவலுக்கு போன கேரளா... சாலையில் ஓடும் டாக்ஸியை போல் இனி வாட்டர் டாக்ஸியில் ஜம்முனு போகலாம்...

கேரளாவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து வாட்டர் டாக்ஸி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேற லெவலுக்கு போன கேரளா... சாலையில் ஓடும் டாக்ஸியை போல் இனி வாட்டர் டாக்ஸியில் ஜம்முனு போகலாம்...

கொரோனா வைரஸ் ஊரடங்கால் இந்தியாவில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், டாக்ஸி ஓட்டுனர்கள் மிகவும் முக்கியமானவர்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனே டாக்ஸிகளை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. எனவே டாக்ஸி ஓட்டுனர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது.

வேற லெவலுக்கு போன கேரளா... சாலையில் ஓடும் டாக்ஸியை போல் இனி வாட்டர் டாக்ஸியில் ஜம்முனு போகலாம்...

ஆனால் ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக டாக்ஸிகளை மீண்டும் இயக்குவதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு விட்டது. இருந்தாலும் கொரோனா அச்சம் காரணமாக டாக்ஸிகளில் பயணம் செய்வதற்கு மக்கள் தயங்குகின்றனர். அதற்கு பதிலாக சொந்த கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்பதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

வேற லெவலுக்கு போன கேரளா... சாலையில் ஓடும் டாக்ஸியை போல் இனி வாட்டர் டாக்ஸியில் ஜம்முனு போகலாம்...

இதன் காரணமாக டாக்ஸி ஓட்டுனர்கள் பலர் தற்போதும் வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் இந்த பிரச்னைகள் எல்லாம் சாலையில் ஓடும் வழக்கமான டாக்ஸிகளுக்கு மட்டும்தான். தண்ணீரில் இயங்கும் வாட்டர் டாக்ஸிகளுக்கு (Water Taxis) கிடையாது.

வேற லெவலுக்கு போன கேரளா... சாலையில் ஓடும் டாக்ஸியை போல் இனி வாட்டர் டாக்ஸியில் ஜம்முனு போகலாம்...

இந்த நம்பிக்கையில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து 10 இருக்கைகள் கொண்ட வாட்டர் டாக்ஸிகளை இயக்குவதற்கு கேரள அரசு தயாராகி வருகிறது. கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில்தான் இந்த வாட்டர் டாக்ஸிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. கேரள மாநிலத்தில் அதிக சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட பகுதிகளில் ஆலப்புழா முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

வேற லெவலுக்கு போன கேரளா... சாலையில் ஓடும் டாக்ஸியை போல் இனி வாட்டர் டாக்ஸியில் ஜம்முனு போகலாம்...

வாட்டர் டாக்ஸிகளை இயக்குவது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர் 4 படகுகளுக்கு மாநில நீர் போக்குவரத்து துறை (State Water Transport Department - SWTD) ஆர்டர் கொடுத்தது. இந்த 4 படகுகள்தான் பொது மக்களின் பயன்பாட்டிற்காக வாட்டர் டாக்ஸிகளாக பயன்படுத்தப்படவுள்ளன.

வேற லெவலுக்கு போன கேரளா... சாலையில் ஓடும் டாக்ஸியை போல் இனி வாட்டர் டாக்ஸியில் ஜம்முனு போகலாம்...

இதுகுறித்து கேரள மாநில நீர் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''சாலையில் ஓடும் சாதாரண டாக்ஸிகளை போன்று, இந்த படகுகளும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கும். இந்த வாட்டர் டாக்ஸிகளுக்கு என குறிப்பிட்ட போன் எண் வழங்கப்படும். அந்த எண்ணில் மக்கள் அழைக்கலாம். அவர்களை இந்த படகுகள் 'பிக்அப்' செய்து கொள்ளும்.

வேற லெவலுக்கு போன கேரளா... சாலையில் ஓடும் டாக்ஸியை போல் இனி வாட்டர் டாக்ஸியில் ஜம்முனு போகலாம்...

அத்துடன் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தில் 'டிராப்' செய்தும் விடும். ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அந்த கட்டணம் நியாயமானதாக இருக்கும். இது டீசலில் இயங்க கூடிய படகு ஆகும். இந்த படகில் 10 பேர் வரை சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். மணிக்கு 15 நாட்டிகல் மைல்கள் என்ற வேகத்தில் இந்த படகுகள் பயணிக்கும்.

வேற லெவலுக்கு போன கேரளா... சாலையில் ஓடும் டாக்ஸியை போல் இனி வாட்டர் டாக்ஸியில் ஜம்முனு போகலாம்...

எனவே பயணிகளை அவர்களின் இடத்திற்கு வேகமாக கொண்டு சென்று சேர்க்க முடியும்'' என்றனர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த நவ்கதி (Navgathi) என்னும் நிறுவனம் இந்த படகுகளை கட்டமைத்துள்ளது. குறைவான எரிபொருளை நுகரும் வகையில், ஃபைபர் மூலம் திறன்மிக்க வடிவமைப்பில் இந்த படகுகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Alappuzha To Get 10 Seater 'Water Taxis' - Details. Read in Tamil
Story first published: Wednesday, September 16, 2020, 22:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X