இந்த சின்ன போல்டு தான் இவ்வளவு பெரிய விபத்திற்கு காரணம்! விமான விபத்தின் மர்மம் விலகியது!

ஆலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பிறந்த போது அதன் கதவு மற்றும் சீட்டுகள் திடீரென கழுன்று வெளியே பறந்த நிலையில் இ துகுறித்து போயிங் நிறுவனம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் குறிப்பிட்ட விமானத்தில் உள்ள ஒரு போல்ட் சரியாக இல்லாத காரணமாக தான் இந்த விபத்து நடந்து இருக்கும் என தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் போர்ட்லாந்து பகுதியில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் சுமார் 121 பயணிகள் அமர்ந்திருந்தார்கள். விமானம் சரியாக டேக் ஆஃப் ஆனபோது விமானத்தில் உள்ள கதவு மற்றும் கதவு அருகே இருந்த இரண்டு சீட்டுகள் கழன்று வெளியே விழுந்தது. இதனால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் எல்லாம் பதறினார்கள்.

alaska airline window blowout reason

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக கதவு கழன்று விழுந்த பகுதிக்கு அருகே இருந்த 2சீட்டிலும் எந்த நபர்களும் இல்லை. அதனால் எந்தவித உயிர் சேதமும் மிகப்பெரிய அளவிலான காயங்களும் இல்லாமல் அனைவரும் உயிர் தப்பினார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள ஏர்லைன்ஸ் துறையை உலுக்கி போட்டது. குறிப்பிட்ட விமானத்தில் ஏதோ பிரச்சனை இருப்பது காரணமாக தான் இந்த விபத்து நடந்திருக்கும் என பேசப்பட்டது.

விபத்தில் சிக்கிய இந்த விமானம் போயிங் நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ்9 என்ற விமானம் தான். இந்த விமானத்தை உலகில் பல்வேறு விமான நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவசரமாக போயிங் நிறுவனம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் அனைத்து மேக்ஸ் 9 விமானங்களையும் பறக்க அனுமதி வழங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டு அனைத்திலும் இன்ஸ்பெக்ஷனை துவங்கினார்கள். இது மட்டுமல்லாமல் போயிங் 737 என்று விமானங்களும் ஒருநாள் தரை இறக்கப்பட்டன.

alaska airline window blowout reason

இந்நிலையில் மற்ற வேறு விமானங்களில் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிந்த பின்பு மேக்ஸ் 9 விமானங்கள் மட்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் தற்போது ஒரு முக்கியமான ஆதாரம் கிடைத்துள்ளதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி விமானத்தின் கதவில் உள்ள ஒரு போல்ட் பகுதி மற்றும் சரியாக லாக் ஆகாமல் லூசாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பிரச்சனையின் காரணமாக தான் விமானத்தின் கதவு கழன்று விழுந்திருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. விபத்தில் கழன்று விழுந்த விமானத்தின் கேட்டை போர்ட்லாண்ட் பேக் யார்டு பகுதியில் விமான நிலைய ஊழியர்கள் கண்டுபிடித்தார்கள். அதை கொண்டு வந்து அதில் ஆய்வு நடத்திய போது தான் இந்த உண்மை தெரிய வந்தது.

alaska airline window blowout reason

இதையடுத்து தற்போது ஆய்வு பணியில் இருக்கும் மற்ற மேக்ஸ் 9 ரக விமானங்கள் எல்லாம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிட்ட இந்த போல்ட் சரி செய்யும் பணிகள் தற்போது துவங்கி உள்ளன. இது சரி செய்தால் மட்டுமே இனி மேக்ஸ் 9 ரக விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படும் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட இந்த விபத்து மிக முக்கிய விபத்தாக பார்க்கப்படுகிறது. நல்ல வேலையாக இதில் யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படாத நிலையில் இனி இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் தவிர்க்க இந்த விபத்து நடந்ததற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என யோசித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் எந்த பகுதியில் உள்ள போல்டு எந்த அளவுக்கு லூசாக இருந்தது? இது மனித தவறால் நடந்த பிழையா அல்லது விமானம் தயாரிக்கும் போதே ஏற்பட்ட பிரச்சனையா என்பது குறித்து தெளிவான விளக்கம் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை. இது குறித்த தகவல்கள் எல்லாம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் வந்தால் தான் உண்மை நிலவரம் நமக்கு தெரிய வரும்.

டிரைவ்ஸ்பர்க் கருத்து: விமானம் என்பது ஒரு ஆபத்தான வாகனம் தான். அந்த ஆபத்தான வாகனத்தை தயாரிப்பவர்கள் சரியாக தயாரித்தால் ஆபத்து இல்லாத சொகுசான வாகனமாக மாறிவிடுகிறது. போயிங் போன்ற நிறுவனங்கள் இது போன்ற பிழையை செய்வது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது. இனி இது போன்ற பிழைகள் நடக்காமல் போயிங் நிறுவனம் தனது தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும்

More from DriveSpark

Article Published On: Wednesday, January 10, 2024, 7:00 [IST]
English summary
Alaska airline window blowout loose bolts boeing 737 max
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X