நடுவானில் பறந்த விமானத்தில் கழன்று விழுந்த கதவு! பதை பதைக்க வைக்கும் வைரல் வீடியோ!
அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதன் கதவு மற்றும் சீட்டுகள் திடீரென கழன்று வெளியே பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுவானில் பறக்கும் போது இப்படியான விபத்துக்கள் எப்படி ஏற்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன என்ற விரிவான விபரங்களை காணாமல்.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியிலிருந்து கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆண்டரியோ என்ற பகுதிக்கு பயணிகளை ஏற்றி புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் சுமார் 171 பயணிகள் இருந்தார்கள். இந்த விமானம் சரியாக திட்டமிடப்பட்டு ஓடுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விண்ணை நோக்கி பறந்தது.

இந்த விமானம் வானில் பறந்து அடுத்த ஒரு சில நிமிடங்களில் விமானத்தின் கதவும் விமானத்தில் பயணிகள் அமர்ந்திருந்த சீட்டின் ஒரு சீட்டும் திடீரென கழன்று வெளியே சென்றது. விமானத்தில் உள்ளே பெரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டது. இதனால் பயணிகள் அலறினார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார்கள். இதையடுத்து கேப்டன் பயணிகளுக்கான மாஸ்க்கை கொடுத்துவிட்டு உடனடியாக எமர்ஜென்சி லேண்டிங் அறிவிப்பை கொடுத்துவிட்டு லேண்டிங் செய்ய துவங்கி விட்டார்.
அதிர்ஷ்டவசமாக இந்த விமானத்தில் இருந்த எந்த பயணிக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இந்த விபத்து எப்படி நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிய விமானம் போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் 9 என்ற விமானம் ஆகும். சர்வதேச அளவில் இயங்கி வரும் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களை எல்லாம் தற்காலிகமாக பயணம் செய்வதில் இருந்து நிறுத்தியது.

என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்த பின்பு அதை எல்லாம் செக் செய்த பின்பே மீண்டும் பறக்க அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து சர்வதேச அளவில் போயிங் நிறுவனத்தின் 737 விமானத்தை பயன்படுத்தும் விமான நிறுவனங்கள் எல்லாம் தங்கள் சேவைகளை மாற்றி அமைத்தார்கள். குறிப்பிட்ட அந்த விமானம் செல்ல வேண்டிய ரூட்டில் வேறு விமானங்களை அனுப்பி வைத்தார்கள். சிலர் விமான பயணத்தையே ரத்து செய்து இருந்தார்கள்.
இந்தியாவை பொருத்தவரை இந்த போயிங் நிறுவனத்தின் 737 ரக விமானங்கள் பல்வேறு நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக ஆகாஷா ஏர் நிறுவனத்திடம் 22விமானங்களும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் 13விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் 9 விமானங்களும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. போயிங் 737 மேக்ஸ் 9 என்ற வேரியன்ட் விமானம் இந்தியாவில் எந்த விமான நிறுவனத்திடமும் பயன்பாட்டில் இல்லை. ஆகாஷா ஏர் நிறுவனத்திலும் இருப்பது மேக்ஸ் 8 என்ற விமானம்தான்.

இருந்தாலும் இந்தியாவில் உள்ள விமான போக்குவரத்து அமைச்சகம் 737 ரக விமானங்கள் அனைத்தையும் நிறுத்தி சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் 737 ரக விமானங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இந்தியாவில் மேக்ஸ் 9 விமானம் இல்லை. அமெரிக்காவில் 737 மேக்ஸ் 9 ரக விமானத்தை வேண்டுமென்றே அந்நாட்டு விமான நிறுவனங்கள் எல்லாம் பறக்க விடாமல் தடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தினார்கள்.
இந்த சம்பவத்தில் 171பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் எந்தவித பெரிய காயங்களும் இல்லாமல் உயிர் தப்பினார்கள். இவர்கள் உயிர் தப்பிக்க போதுமான அளவு வழங்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதலை முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. விமானம் நிலைமையை புரிந்து கொண்டு உடனடியாக எமர்ஜென்சி லேண்டிங்கை அறிவித்து அவர் டேக் ஆப் செய்த அதே விமான நிலையத்தில் விமானத்தில் லேண்ட் செய்தார்.
இதற்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பே அனைத்து மேக்ஸ் 9 வேரியண்ட் விமானங்களும் பறக்க அனுமதிக்கப்படும் என தெரிகிறது. மற்ற 737 விமானங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இதில் பயணிகள் உயிர் தப்பிய நிலையில் இனி இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்க கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க்க கருத்து: விமான தயாரிப்பு நிறுவனங்கள் இவ்வாறான விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். இது பயணிகளின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். இந்த விபத்து வேறு விமானங்களில் நடந்திருந்தால் பயணிகள் அத்தனை பேரும் உயிரிழந்ததற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. சரியான பாதுகாப்பு வழிமுறைகள் கொண்ட ஒரு விமானத்தில் நடந்ததால் எந்த விதமான பிரச்சினையும் ஏற்படவில்லை.


Click it and Unblock the Notifications









