விபத்துக்களை தவிர்க்க மான் கொம்புகளில் ஸ்பெஷல் பெயிண்ட்!!
பின்லாந்து நாட்டில், சாலையை கடக்கும் போது மான்கள் வாகனங்களில் அடிபட்டு பலியாகும் சம்பவங்கள் அதிகம். இதனை தவிர்ப்பதற்காக, அந்நாட்டை சேர்ந்த விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மான் கொம்புகளில் பிரதிபலிக்கும் தன்மை கொண்ட விசேஷ பெயிண்ட்டை ஸ்பிரே செய்து விடுகின்றனர். இந்த ஸ்பெஷல் பெயிண்ட்டை பின்லாந்தை சேர்ந்த அல்பெடோ 100 என்ற பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.

இரவில் விளக்கு வெளிச்சத்தில் மட்டும் அந்த பெயிண்ட் பிரதிபலிக்கும். இதனால், வாகன ஓட்டிகள் எளிதாக சாலையில் நிற்கும் மான்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
இதன்மூலம், வாகனங்கள் மோதி மான்கள் பலியாவது தவிர்க்க முடியும் என்று அந்த அமைப்பினர் கருதுகின்றனர். முதல்கட்டமாக, 20 மான்களுக்கு வண்ணம் தீட்டியுள்ளனர்.
வாகன ஓட்டிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அடுத்த கட்டமாக மான்களின் கொம்புகளில் வண்ணம் அடிக்கும் முயற்சியை துவங்க இருக்கின்றனர்.
என்ன மான்களை பிடிப்பது அல்லது நெருங்கிச் சென்று ஸ்பிரே செய்வதுதான் கடினமான காரியமாக அவர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications








