3 கோடி ரூபாய் காரில் தேவதை மாதிரி வந்து இறங்கியது அவங்களா! வீடியோவை பாத்ததும் மனசை பறிகொடுத்த இளசுகள்!

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவர் அலியா பட் (Alia Bhatt). இவர் புதிய கார் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார். அது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) கார் ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும்.

அலியா பட் போலவே, அவரது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது. பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) மற்றும் டீசல் இன்ஜின் (Diesel Engine) என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

Alia Bhatt BMW X7

பெட்ரோல் மற்றும் டீசல் என 2 வெர்ஷன்களிலும், 3.0 லிட்டர், இன்லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போசார்ஜ்டு இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 381 பிஎஸ் மற்றும் 520 என்எம் ஆகும். மறுபக்கம் டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 340 பிஎஸ் மற்றும் 700 என்எம் ஆகும்.

இத்துடன் 48v மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்கிறது. இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கும் (Features) கூட சற்றும் பஞ்சமில்லை.

Kriti Sanon

இதில், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதுதவிர பனரோமின் சன்ரூஃப், 14 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை xDrive40i M Sport மற்றும் xDrive40d M Sport ஆகியவை ஆகும். இதில் முதல் வேரியண்ட்டின் விலை (Price) 1.24 கோடி ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இரண்டாவது வேரியண்ட்டின் விலை 1.26 கோடி ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இதில் xDrive40d M Sport வேரியண்ட்டைதான், அலியா பட் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஆன் ரோடு விலை சுமார் 1.50 கோடி ரூபாய் வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த புதிய காரில் மும்பை நகரில் உள்ள ஒரு இடத்திற்கு அலியா பட் வந்த வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், மற்றொரு நடிகையையும் நம்மால் பார்க்க முடிகிறது. அவர் கீர்த்தி சனோன் (Kriti Sanon) ஆவார். விமான நிலையத்திற்கு, மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Maybach GLS 600) காரில் அவர் வந்ததை இந்த வீடியோவில் நாம் பார்க்கலாம். இதுவும் சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றுதான்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ்-மேபெக் ஜிஎல்எஸ் 600 கார் சுமார் 3 கோடி ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது வெறும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை சுமார் 3.40 கோடி ரூபாய் வரை வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: திரையுலகை சேர்ந்த நடிகைகள், சொகுசு எஸ்யூவி ரக கார்களை பயன்படுத்துவதற்கு அதிக ஆர்வம் காட்டுவதை இந்த வீடியோவின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். சொகுசு எஸ்யூவி கார்கள் விலை உயர்ந்தவையாக இருந்தாலும், சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்குவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம்.

Article Published On: Wednesday, October 4, 2023, 13:59 [IST]
English summary
Alia bhatt buys bmw x7 price features viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+