இந்த சொகுசு கார் அந்த நடிகையோடதா! காரை பாத்ததுக்கே எல்லாரும் கெறங்கி போயிட்டாங்க! இதுல அவங்கள பாத்தா அவ்ளோதான்
திரைப்பட நடிகைகளுக்கும், சொகுசு கார்களுக்கும் இடையேயான பந்தத்தை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. இந்தியாவை சேர்ந்த பல்வேறு திரைப்பட நடிகைகள் சொகுசு கார்களை வாங்கி குவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பாலிவுட் நடிகை அலியா பட்டும் (Alia Bhatt) இதற்கு விதிவிலக்கு அல்ல. அவரிடம் ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), ஆடி க்யூ7 (Audi Q7), ஆடி க்யூ5 (Audi Q5), ஆடி ஏ6 (Audi A6), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) போன்ற கார்கள் எல்லாம் ஏற்கனவே இருக்கின்றன.

இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு விலை உயர்ந்த கார் ஒன்றை அலியா பட் வாங்கியுள்ளார். அது ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. அலியா பட் தேர்வு செய்திருப்பது இந்த காரின் LWB மாடல் ஆகும். Long Wheel Base என்பதன் சுருக்கம்தான் LWB.
அலியா பட் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார், 'க்ரே' (Grey) கலரில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அலியா பட்டின் கணவரான ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) சமீபத்தில் இதே காரை வாங்கியிருந்தார். ஆனால் அந்த கார், பச்சை (Green) நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. எனவே இரண்டும் வெவ்வேறான கார்கள் ஆகும்.
ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் 3.3 லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஒன்றாகும். அதிகபட்சமாக 400 ஹெச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 350 ஹெச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டையும் தவிர மூன்றாவதாக 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் கொடுக்கப்படுகிறது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 530 ஹெச்பி பவர் மற்றும் 750 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 இன்ஜின் ஆப்ஷன்களுடனும், 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்படுகிறது. இன்ஜின் உருவாக்கும் சக்தி இதன் மூலம் காரின் நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.
ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. இதில் 13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 13.7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், ஹீட்டட் மற்றும் வெண்டிலேட்டட் இருக்கைகள், மசாஜ் இருக்கைகள் மற்றும் கேபின் ஏர் ப்யூரிஃபையர் போன்ற வசதிகள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதுதவிர பின் இருக்கைகளுக்கு 11.4 இன்ச் பொழுதுபோக்கு டச்ஸ்க்ரீன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் டிஜிட்டல் எல்இடி ஹெட்லைட்கள், 6 டிரைவிங் மோட்கள் உடன் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் போன்ற வசதிகளும் கூட ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் வாரி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கிரிக்கெட் வீரர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் மத்தியில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இதற்கு திரையுலக நட்சத்திரங்களும் விதிவிலக்கு அல்ல என்பதை அலியா பட்-ரன்பீர் கபூர் தம்பதியனர் நிரூபித்து விட்டனர்.
அலியா பட் வாங்கியுள்ள புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் விலை (Price) 3.20 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








