அழகு பதுமை! தேர் மாதிரி வந்த காருக்கு உள்ளே இருந்தது அவங்களா! பிஸ்னஸ்மேன்களுக்கு ரொம்ப பிடிச்ச கார் ஆச்சே!
உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). இது சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவை பொறுத்தவரையில், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில், டொயோட்டா வெல்ஃபையர் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மோகன்லால் (Mohanlal), ஆமிர் கான் (Aamir Khan) மற்றும் அஜய் தேவ்கன் (Ajay Devgn) போன்ற திரையுலக நட்சத்திரங்கள் பலரிடமும் டொயோட்டா வெல்ஃபையர் கார் உள்ளது. திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமல்லாது, தொழில் அதிபர்களும் டொயோட்டா வெல்ஃபையர் காரை அதிகளவில் வாங்குகின்றனர்.
டொயோட்டா வெல்ஃபையர் காரின் உள்ளே தாராளமான இடவசதி கிடைக்கிறது. எனவே பயண நேரத்திலேயே, அலுவலக கூட்டங்களை நடத்தி கொள்ள முடியும். இதன் மூலம் தொழில் அதிபர்களுக்கு நேரம் மிச்சமாகிறது. அத்துடன் இது சொகுசு எம்பிவி கார் என்பதால், சௌகரியமான பயணம் கிடைக்கும் என்பதும் உறுதி.

இந்த சூழலில் இந்தியாவின் பிரபலமான டொயோட்டா வெல்ஃபையர் காரின் உரிமையாளர்கள் பட்டியலில் தற்போது ஒருவர் இணைந்துள்ளார். அவர் அலியா பட் (Alia Bhatt) ஆவார். இவர் பாலிவுட் (Bollywood) திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவரது கணவர் ரன்பீர் கபூரும் (Ranbir Kapoor) கூட, மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அலியா பட்-ரன்பீர் கபூர் தம்பதியிடம், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஏராளமாக உள்ளன. இதில், ஆடி ஏ8எல் (Audi A8L), ஆடி ஏ6 (Audi A6), ஆடி க்யூ7 (Audi Q7), ஆடி க்யூ5 (Audi Q5), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) மற்றும் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 (Mercedes Benz AMG G63) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்350டி (Mercedes Benz S350D) ஆகிய கார்களும் கூட, அலியா பட்-ரன்பீர் கபூர் தம்பதியிடம் உள்ளது. இந்த வரிசையில் தற்போது டொயோட்டா வெல்ஃபையர், அவர்களது கார் கலெக்ஸனில் (Car Collection) இணைந்துள்ளது.
அலியா பட் புதிதாக வாங்கியுள்ள டொயோட்டா வெல்ஃபையர் காரின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், அலியா பட்டின் பிரம்மாண்டமான டொயோட்டா வெல்ஃபையர் கார், தேர் போல வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த காரின் விலை 1.32 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 1.65 கோடி ரூபாய் வரும். இவ்வளவு விலை உயர்ந்த டொயோட்டா வெல்ஃபையர் காரில், 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. இதில், 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 15 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் சன்ரூஃப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் (Mercedes Benz V-Class) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக, டொயோட்டா வெல்ஃபையரை குறிப்பிட முடியும். சொகுசான பயணத்தை எதிர்பார்க்க கூடிய திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு, டொயோட்டா வெல்ஃபையர் மிகவும் ஏற்றது.


Click it and Unblock the Notifications








