மேல டிரஸ் போட மறந்துட்டாங்களா? ரசிகர்களை பார்க்க காஸ்டலியான காரில் வந்த நடிகை!

பாலிவுட் நடிகையின் ஆலியா பட் சமீபத்தில் மும்பையில் தனது ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் காரில் வந்து இறங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் தனக்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் வந்து இறங்கினார். வீடியோ வைரலாகி வரும் நிலையில் இவர் வந்த கார் குறித்து பலர் பேசி வருகிறார்கள்.

பாலிவுட்டில் பிரபலமான நடிகை ஆலியா பட். இவர் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளது. நேரடியாக தமிழ் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளதால் இவர் தமிழிலும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். பலருக்கு இவரை பற்றி தெரிந்திருக்கிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசினார்.

Alia Bhatt Range Rover

இவர் தனது ரசிகர்களுக்காக விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். மும்பையில் உள்ள ஹோட்டலில் இந்த விருந்து ஏற்பாடுகள் நடந்திருந்தது. இந்த ஹோட்டலுக்கு விருந்தில் கலந்து கொள்வதற்காக நடிகை ஆலியா பட் வருவதாக அறிவித்து இருந்தார்கள். இந்நிலையில் அவர் தனது லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் வந்திருந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விடுகிறது.

இந்த வீடியோவில் நடிகை வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார். இது பலரை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருந்தது. இவர் பொதுவாக பொது இடங்களில் சிறப்பாக மேக்கப் செய்து வரக்கூடிய நபர். தற்போது இந்த ஆடையில் ரசிகர்களை சந்திக்க வந்திருப்பது பலரை அதிகரித்துள்ளது.இவர் உள் பனியன் போன்ற ஒரு ஆடை ஆணிந்து வந்திருந்தார் ஆனால் அதையும் மீறி இவர் வந்த கார் பலர் கவனத்தை ஈர்த்தது.

Alia Bhatt Range Rover

ஆலியா பட் இந்த நிகழ்ச்சிக்கு தனக்கு சொந்தமான லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் வந்து இறங்கினார். இந்த காரைகள் கடந்து 2023 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். இந்த கார் டீசல் இன்ஜின் கொண்டா லாங் வீல் பேஸ் கொண்ட காராகும். பெரும்பாலும் பிரபலங்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கார் தற்போது ரூபாய் 2.40 கோடி என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 346 bhp பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆட்டோமேட்டிக் இன்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆல்வில் டிரைவ் சிஸ்டத்துடன் இருக்கிறது. இதனால் ஆப் ரோடு அம்சங்களில் இந்த கார் சிறப்பாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Alia Bhatt Range Rover

இந்த காரை பிரபலங்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். முக்கியமாக வட இந்தியாவில் உள்ள பிரபல நடிகைகள் பலர் இந்த காரை பயன்படுத்துகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் இதில் உள்ள அதிக இட வசதி தான். அதிக பொருள்களை எடுத்துச் செல்ல முடியும் அதே நேரம் அதிக நபர்களையும் இதில் கூட்டிச் செல்ல முடியும். என்பதால் பலர் இந்த காரை விரும்பி வருகிறார்கள். இதனால் இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டீசல் கார்களின் விற்பனை கணிசமான அளவு குறைந்தாலும், காஸ்ட்லியான கார்களில் பலர் டீசல் கார்களை விரும்புகிறார்கள் இதற்கு முக்கியமான காரணம் அதன் பெர்ஃபார்மென்ஸ் தான். டீசல் கார்கள் தான் சிறப்பான பெர்பார்மென்ஸ் தரும் என்பதால் இந்த கார்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆலியா பட் இந்த காரை பயன்படுத்துவதற்கும் அது தான் முக்கியமான காரணம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 3, 2025, 14:25 [IST]
English summary
Alia bhatt meet fans spotted in range rover auto biography
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X