7பேர் பயணிக்க கூடிய காரில் தன்னந்தனியாக பயணித்த 2 முன்னணி நடிகர்கள்.. காரையே வெறிக்க வெறிக்க பார்த்த மக்கள்!

7பேர் வரை அமர்ந்து பயணிக்கக் கூடிய ஓர் சொகுசு கார் மாடலில் தன்னந்தனியாக இரண்டு முன்னணி திரை நட்சத்திரங்கள் வந்திறங்கும் வீடியோ யுட்யூபில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அவர்கள் வந்திறங்கிய கார்குறித்த விபரங்களை காணலாம், வாங்க.

உலகின் அதி-நவீன மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த கார் மாடல்களில் ரேஞ்ஜ் ரோவர் (Land Rover Range Rover) கார் மாடலும் ஒன்றாகும். சொகுசு வசதிகளை விரும்புவோர்களுக்கு என்றே இந்த காரில் லக்சூரி அம்சங்களை வாரி வழங்கி இருக்கின்றது தயாரிப்பு நிறுவனமான லேண்ட் ரோவர் (Land Rover).

Star couples uses luxury car

இதனால்தான் இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் பிரியமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. நம்முடைய தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களிடத்திலும் இந்த ஆடம்பர வகை கார் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. நம்ம முதலமைச்சர் முக ஸ்டாலின்கூட இந்த கார் மாடலிலேயே தன்னுடைய அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இது அதிக சொகுசு வசதியை வழங்கக் கூடிய கார் மட்டுமல்ல மிக அதிக பாதுகாப்பான காரும்கூட. இதனால்தான் இந்தியாவின் பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானி வீட்டில் உள்ளவர்கள்கூட இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். கை தேர்ந்த வீரர்கள் மற்றும் காவலர்களின் பாதுகாப்பு வளையம் இருக்கின்ற போதிலும் அவர்கள் ரேஞ்ஜ் ரோவர் போன்ற சொகுசு மற்றும் பாதுகாப்பை வழங்கும் காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Alia bhatt ranbir kapoor range rover

இத்தகைய ஓர் கார் மாடலையே பிரபல நடிகர்களும், தம்பதிகளுமான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா ஜோடிகள் அண்மையில் பயன்படுத்தி இருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தி இருப்பது நான்காம் தலைமுறை ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோபயோகிராஃபி (Land Rover Range Rover Autobiography) வெர்ஷன் ஆகும்.

ஏற்கனவே இவரிடத்தில் ரேஞ்ஜ் ரோவர் வெலார் இருக்கின்ற நிலையில் இந்த காரையும் அவர் வாங்கினார். லேண்ட் ரோவர் நிறுவனத்தின் மீது இருக்கும் நம்பிக்கையும், அந்த கார்களில் இருக்கும் மனம் கவர்ந்த சிறப்பு அம்சங்களே அவர் மீண்டும் அதே நிறுவனத்தின் தயாரிப்பான ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோபயோகிராஃபியை வாங்க காரணமாக இருந்திருக்கின்றது.

பெல்கிரேவியா கிரீன் (Belgravia Green) எனும் வகை நிற ஆப்ஷனையே இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோ பயோகிராஃபியில் வழங்கப்படும் அசத்தலான மற்றும் கவர்ச்சியான வண்ண தேர்வுகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. ரன்பீர் கபூர்-ஆலியா இந்த காரை தங்களின் பிரதான பயணங்களுக்கு பயன்படுத்த பல்வேறு காரணங்கள் உள்ளன.

மிக முக்கியமாக இந்த காரில் பயணிக்கும்போது சொகுசு கப்பலில் மிதப்பதைப் போல உணர்வுக் கிடைக்கும். இதன் காரணத்தினாலேயே இந்தியர்கள் பலர் இந்த காரை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, பள்ளம் மற்றும் மேடுகள் நிறைந்த சாலையில் பயணிக்கும்போதுகூட இந்த காரில் மேகத்தில் மிதப்பதைப் போன்ற உணர்வுக் கிடைக்கும்.

அந்த அளவிற்கு மிக திறன் வாய்ந்த சஸ்பென்ஷன் செட்-அப்பே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதுதவிர, இந்த காருக்குள் அமர்ந்து பயணிக்கும்போது மிகவும் அமைதியான பயண உணர்வை பெற்றுக் கொள்ள முடியும். அதாவது, வெளியில் ஏற்படும் இரைச்சல் மற்றும் சத்தம் என்பது துளிகூட காருக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு கேட்காது.

ஏன், அந்த காரின் எஞ்ஜின் சத்தம் மற்றும் டயர் சாலையில் உராயும் சத்தம்கூட காருக்குள் இருப்பவர்களுக்குக் கேட்காது. இத்தகைய சூப்பரான திறன் கொண்ட கார் மாடலே ரேஞ்ஜ் ரோவர் மாடல் ஆகும். இந்த காரில் ஒரே நேரத்தில் ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

ஆனால், ஆலியா-ரன்பீர் கபூர் இவர்கள் இருவர் மட்டுமே தன்னந்தனியாக மும்பை விமான நிலையத்திற்கு வந்திறங்கி இருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இவர்கள் பயன்படுத்தும் இந்த கார் ரேஞ்ஜ் ரோவர் வரிசையில் இரண்டாவது இடத்திலேயே இருக்கின்றது.

ரேஞ்ஜ் ரோவர் எஸ்வி (Range Rover SV) உயர் நிலை ரகம் ஆகும். லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் கார்களில் இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, கற்கள், மேடுகள் மற்றும் பள்ளங்கள் நிறைந்தது என்ற எப்பேர்பட்ட சாலையாக இருந்தாலும் இந்த கார் அசால்டு செய்துவிடும்.

எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த காரில் 3.0 லிட்டர் டர்போசார்ஜட் இன்லைன் 6 டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்ஜின் 350 பிஎஸ் மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டாருடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள திரை நட்சத்திரங்கள் பலர் மிகப்பெரிய சொகுசு வாகன விரும்பிகளாக இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே தங்களின் அன்றாட பயணங்களுக்கு வழக்கமான கார் மாடல்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில் முன்னணி நட்சத்திரங்கள் தங்களின் கெத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே கோடிகளை கார்களுக்காக வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றனர். ரன்பீர்-ஆலியாவின் இந்த சொகுசு கார் 3.14 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

Article Published On: Thursday, October 19, 2023, 10:03 [IST]
English summary
Alia bhatt ranbir kapoor couple uses range rover autobiography luxury car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X