1,000 கோடி ரூபாய் சொத்து இருந்தும் ஆட்டோல வந்த தேவதை! போட்டிருந்த சட்டைய பாத்த பிறகுதான் உண்மை தெரிஞ்சுது!
இந்தியாவில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகள் கூட மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் (Luxury Cars) வலம் வருகின்றனர். ஆனால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் திரைப்பட நடிகைகளில் ஒருவர் சாதாரண ஆட்டோ ரிக்ஸாவில் (Auto Rickshaw) பயணம் செய்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான். இப்படிப்பட்ட மிகவும் வினோதமான சம்பவம் ஒன்று தற்போது நடைபெற்றுள்ளது. இத்தனைக்கும் ஆட்டோ ரிக்ஸாவில் பயணம் செய்த நடிகையிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் இருக்கின்றன.
இதில், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி வி8 (Bentley Continental GT V8), ஆடி ஏ8 எல் (Audi A8 L), ஆடி ஆர்8 (Audi R8), ஆடி ஏ6 (Audi A6), ஆடி க்யூ5 (Audi Q5) மற்றும் ஆடி க்யூ7 (Audi Q7) போன்றவை எல்லாம் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Land Rover Range Rover Autobiography), ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி 63 (Mercedes AMG G 63) மற்றும் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series) ஆகிய கார்களும் அந்த நடிகையிடம் உள்ளன.
நீங்கள் மிகவும் தீவிரமான கார் காதலர் என்றால், இந்த கார் கலெக்ஸன் (Car Collection) யாருடையது? என்பது இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இது பாலிவுட் நடிகை அலியா பட்டின் (Alia Bhatt) கார் கலெக்ஸன் ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருக்கும்போது அலியா பட் ஆட்டோ ரிக்ஸாவில் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் அலியா பட் மிகவும் சாதாரணமான ஒரு உடையில் ஆட்டோவில் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அவரது இந்த ஆட்டோ பயணத்திற்கு 2 முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று மும்பை நகரின் போக்குவரத்து நெரிசல் ஆகும்.
பெரிய கார்களில் பயணம் செய்வதை விட, அளவில் சிறிய ஆட்டோவில் பயணம் செய்வது போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் என அலியா பட் கருதியதாக கூறப்படுகிறது. 2வது காரணம் திரைப்பட ப்ரமோஷனாக இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ஜிக்ரா (Jigra) என்ற திரைப்படம் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி (Netflix OTT) தளத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தின் ப்ரமோஷனிற்காகவே அலியா பட் ஆட்டோ ரிக்ஸாவில் பயணம் செய்தாகவும் கூறப்படுகிறது. ஆட்டோ ரிக்ஸாவில் பயணம் செய்தபோது அணிந்திருந்த சட்டையைதான், ஜிக்ரா திரைப்படத்திலும் அலியா பட் அணிந்திருப்பார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மும்பை போக்குவரத்து நெரிசல் பிரச்னையை சமாளிப்பதற்காக கடந்த காலங்களில் தொழில் அதிபர், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஆனால் அலியா பட் தற்போது ஆட்டோ ரிக்ஸாவில் பயணம் செய்திருப்பது ஜிக்ரா திரைப்படத்தின் ப்ரமோஷனிற்காக மட்டுமே என கருதப்படுகிறது.
இதன் காரணமாக சமூக வலை தளங்களில் பலரும் அலியா பட்டை தற்போது விமர்சனம் செய்து வருகின்றனர். பப்ளிசிட்டிக்காக மட்டுமே அலியா பட் ஆட்டோ ரிக்ஸாவில் பயணம் செய்துள்ளார் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் தற்போது கமெண்ட் செய்து கொண்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அலியா பட் மற்றும் அவரது கணவர் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) ஆகியோரின் சொத்து மதிப்பு (Net Worth) சுமார் 1,000 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு அதிக சொத்துக்களை கொண்ட ஒருவர் சாதாரண ஆட்டோ ரிக்ஸாவில் பயணம் செய்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.
ஆனால் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் காணும் எளிமையான ஆட்டோ ரிக்ஸா பயணம் ஒரு திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக மேற்கொள்ளப்பட்டது என வெளியாகி வரும் தகவல்கள், அலியா பட் மீது சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தி கொண்டுள்ளன என்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications








