ஆட்டோபயோகிராபியில் சாதாரண உடையில் வந்திறங்கிய தேவதை! ஒரு காலத்துல நம்ம கனவு கன்னியா இருந்தாங்க!
பாலிவுட்டில் பிரபல நடிகை ஆலியாபட் சமீபத்தில் தனது ரூ3 கோடி மதிப்பிலான காரில் படபிடிப்பு தளத்திற்கு வந்து இறங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வழக்கமாக பொது இடங்களில் அதிகம் மேக்கப்புடன் வரும் ஆலியா பட் இந்த முறை மேக்கப்பே இல்லாமல் நைட் டிரெஸ்ஸில் வந்து இறங்கியதால் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆலியா பட் இந்த முறை மேக்கப் இல்லாமல் வந்ததால் அவரை விட அழகாக இருந்த காரை பற்றி தான் பலர் பேசி வருகிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் தமிழ் சினிமாவில் நேரடியாக படங்கள் நடிக்கவில்லை என்றாலும், ஆர் ஆர் ஆர், பிரம்மாஸ்ரா உள்ளிட்ட வேறு மொழி படங்கள் தமிழில் எடுக்கப்பட்ட வெர்ஷனில் நடித்துள்ளார் இதனால் தமிழகம் முழுவதும் இவர் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இது மட்டுமல்லாமல் அடிக்கடி இவர் செய்திகளில் வலம் வருகிறார். இதன் காரணமாகவும் தமிழக மக்களுக்கு இவர் பரிட்சியமான முகமாக இருக்கிறார்.

பொதுவாக நடிகை ஆலியா பட் வெளியில் வரும்போது முழுமையாக மேக்கப் அணிந்த நிலையில் தான் வெளியில் வருவார். இவர் தனது படப்பிடிப்பு நிகழ்ச்சிக்காக மேக்கப் இல்லாமல் தூங்கி எழுந்த நிலையில் தலைவிரி கோலமாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார். தனது ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் இவர் வந்து இறங்கினார். அப்பொழுது அங்கு பத்திரிகையாளர்கள் பலர் கேமராக்களுடன் நின்று கொண்டிருந்ததால் அவர்களுக்கு வந்து போஸ் கொடுத்தார். இவரை சாதாரண முறையில் பார்த்த பலர் ஆச்சரியப்பட்டார்கள்.
ஆலியாபட்டை விட அவர் வந்த கார் அழகாக இருக்கிறது என பலர் கமெண்ட் செய்தார்கள். இதனால் அவர் வந்த கார் குறித்து பலர் பேசி வருகிறார்கள். இந்த கார் ஆலியா பட்க்கு சொந்தமான காராக இருக்கிறது இந்த காரை அவர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கியுள்ளார். இது ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் 3.0 டீசல் லாங் வீல் பேஸ் கொண்ட ஆட்டோபயோகிராபி காராகும். இந்த காரை அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்துள்ளார்.

ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பயோகிராபி லாங் வீல் பேஸ் 3.0 டீசல் காரைப் பொறுத்தவரை ரூபாய் 3.16 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் ஏழு விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் ஆலியா பட் பயன்படுத்தியது சட்டோரணி பிளாக் என்ற நிறம் ஆகும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 346 பிஎச்பி பவரையும் 700 டாக்டர் அணியும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் போர் வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது. இதனால் பவர்ஃபுல்லான காராக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதால் பெரிய இட வசதி இந்த காரில் இருக்கும்.

பொதுவாக ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை பிரபலங்கள் அதிகமாக வாங்கி உள்ளார்கள். நடிகை ஆலியா பட் மட்டுமல்லாமல் சமீபத்தில் சில்பா ஷெட்டி என்ற காரை பயன்படுத்தியது சமூக வலைதளங்களில் வெளியானது அவரும் இதே ரக காரை தான் வைத்திருக்கிறார். தற்போது ஆலியா பட் இந்த காரை வைத்திருக்கிறார் என்பது நமக்கு தெரியவந்துள்ளது. இந்த காரை பிரபலங்கள் மட்டும் பயன்படுத்துவதற்கு மிக முக்கியமான காரணம் இதன் விலை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக பிரபலங்கள் காஸ்ட்லியான காரை வாங்குவதற்கு பின்னால் சமூக அந்தஸ்து மட்டுமல்லாமல் பாதுகாப்பு அம்சங்களும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. அதிக விலை கொண்ட கார்களில் அதிக பாதுகாப்புகள் இருப்பதால் அவர்கள் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இதன்படி ஆட்டோ பயோகிராபி கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications









