பெட்ரோல் கார்களை எல்லாம் தூக்கி போட்டு இப்படி ஒரு 4,5 விமானங்களை வாங்கி போடலாம்! எரிபொருள் செலவு 2க்கும் ஒன்றே

விமானத்தில் பயணம் செய்வது என்பது நம்மில் பலருக்கு பிடித்தமான விஷயமாகும். வாழ்வில் எப்படியாவது ஒருமுறை ஆவது விமானத்தில் பறந்து பார்த்திட வேண்டுமென்று நம்மில் நிறைய பேருக்கு ஆசை இருக்கும். அதுவும் குறைவான பயணிகள் உடன் விமானத்தில் பயணம் செய்வது என்பது தனி சுகம் ஆகும். உங்களுக்காகவே விமானம் இயக்கப்படுகிறது என்பது போன்ற உணர்வு ஏற்படும்.

ஆனால், சில பெரும் பணக்காரர்கள் இதனை உண்மையிலேயே நிஜமாக்கி வருகின்றனர். சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பில் சிறிய ரக விமானத்தை வாங்கி பயன்படுத்தும் செல்வந்தர்களை உலகம் முழுவதுமே பரவலாக பார்க்க முடியும். அவற்றை ஏன் செல்வந்தர்கள் மட்டுமே வாங்குகின்றனர் என பார்த்தால், அவற்றின் விலைகள் அந்த அளவிற்கு அதிகமானதாக உள்ளது.

alia cx300 electric plane

விமானத்தின் விலை மட்டுமின்றி, அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கான செலவு, எரிபொருள் செலவுகளை எல்லாம் பார்த்தால் தலைச்சுற்றும். அளவில் சிறியதான விமானமாக இருப்பினும், அவற்றிற்கு எரிபொருள் செலவு மிக அதிகமாக இருக்கும். ஆனால், எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய விமானங்களினால் எரிபொருள் செலவுகள் மிக பெரிய அளவில் குறைந்துள்ளன.

இருப்பினும், எலக்ட்ரிக் விமானங்களை பயன்படுத்துவது அமெரிக்கா போன்ற நாட்டில் கூட குறைவாகவே உள்ளது. அமெரிக்காவில் பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட சிறிய ரக எலக்ட்ரிக் விமானம் ஒன்று முதல்முறையாக அதன் சோதனை ஓட்டங்களை நிறைவு செய்துள்ளது. இதன் மூலமாக, அமெரிக்காவில் பயணிகள் உடன் வானில் பறந்த முதல் எலக்ட்ரிக் விமானமாக இது கருதப்படுகிறது.

alia cx300 electric plane

அலியா சிஎக்ஸ்300 (Alia CX300) என்கிற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் விமானத்தை அமெரிக்காவின் வெர்மோண்ட் மாகாணத்தை சேர்ந்த ஏரோஸ்பேஸ் நிறுவனமான பெடா டெக்னாலஜிஸ் (Beta Technologies) உருவாக்கி உள்ளது. நியூயார்க்கில் உள்ள ஒரு தீவு பகுதியில் இருந்து ஜே.எஃப்.கே (JFK) விமான நிலையம் வரையில் 130கிமீ தொலைவிற்கு வெற்றிக்கரமாக இந்த எலக்ட்ரிக் விமானம் வானில் ஓட்டிப் பார்க்கப்பட்டது.

எலக்ட்ரிக் விமானம் ஒன்று வானில் பறப்பதே ஆச்சிரியம் எனும்போது, அதைவிட ஆச்சிரியம் என்னவென்றால் இந்த அலியா சிஎக்ஸ்300 எலக்ட்ரிக் விமானத்தின் எரிபொருளுக்கு ஆன செலவு ஆகும். இந்த 130கிமீ தொலைவு பயணத்திற்கு வெறும் 8 டாலர்கள் (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.694) மட்டுமே செலவாகி உள்ளது என சொன்னால் நம்ப முடிகிறதா?

alia cx300 electric plane

130கிமீ தொலைவை மற்ற ஹெலிகாப்டர்களில் கடப்பதாக இருந்தால் 160 டாலர்களுக்கும் மேல் (ரூ.14 ஆயிரம்) செலவாகி இருக்கும். மேலும், இந்த 130கிமீ தொலைவை வெறும் 30 நிமிடங்களுக்குள் அலியா சிஎக்ஸ்300 விமானம் கடந்துள்ளது. இவை மட்டுமின்றி, இது எலக்ட்ரிக் விமானம் என்பதால் மற்ற சிறிய ரக விமானங்களில் எழுவதை போன்ற எந்த இரைச்சலும் இதில் இல்லை என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களினால் பல வகைகளில் நன்மைகள் உள்ளன என்பதற்கு அலியா சிஎக்ஸ்300 ஆனது சிறந்த உதாரணம் ஆகும். குறிப்பாக, 130கிமீ தொலைவு வான்வெளி பயணத்திற்கு வெறும் ரூ.700 மட்டுமே செலவாகி உள்ளது என்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இது, பெட்ரோல் என்ஜினில் இயங்கும் ஹோண்டா அக்கார்ட் (Honda Accord), டொயோட்டா காம்ரி (Toyota Camry) போன்ற கார்களில் 130கிமீ பயணத்திற்கு ஆகும் எரிபொருள் செலவுக்கு இணையானது ஆகும்.

Source: Cartog (https://www.cartoq.com/)

More from DriveSpark

Article Published On: Wednesday, July 16, 2025, 17:06 [IST]
English summary
Alia cx300 electric plane which require same running cost of petrol cars
மேலும்... #aeroplane
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X