சுகர் மாத்திரையை விற்றே ரூ6.5 கோடிக்கு காரை வாங்கிய மருந்து கம்பெனி ஓனர்! இதுல என்னலாம் இருக்குது தெரியுமா?
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பணக்கார தொழிலதிபர்கள் மற்றம் பிரபலங்கள் இடையே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் பிரபலமாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த பணக்கார தொழிலதிபர் ஒருவர் சொந்தமாக ரோல்ஸ்ராய்ஸ் கல்லீனன் காரை டெலிவரி எடுத்துள்ளர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. யார் இந்த தொழிலதிபர் மற்றும் இவர் டெலிவரி எடுத்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் அல்கெம் லெபாரட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நேவல் கிஷோர் சிங் என்பவர்தான் இந்த காரை டெலிவரி எடுத்துள்ளார். இவர் நடத்தி வரும் அல்கெம் லெபாரட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தோல் நோய் முதல் நீரழிவு நோய் வரை பல நோய்களுக்கான மருந்துகளை தயார் செய்கிறார்கள்.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பல கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ்ராய்ஸ் கல்லீனன் காரை சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த வீடியோ bhumihar.babhan என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேவல் கிஷோர் சிங் தனது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்று இந்த காரை டெலிவரி எடுத்தார். இவர் வரும் போது இந்த கார் துணியால் மூடப்பட்டிருந்தது. இவர் வந்து இந்த துணியை விலக்கி காரை காட்சிப்படுத்தினார்.
நேவல் கிஷோர் சிங் வயதை வைத்து பார்க்கும் போது இவர் தான் இந்த காரை வைத்திருக்கும் வயதான உரிமையாளர் என தெரிகிறது. இந்த தகவல் உறுதிபடுத்த முடியவில்லை. அதே நேரம் இவர் வாங்கியது புதிய கல்லீனன் கார் தான். ஆனால் இது சிரீஸ் 2 கார் போல இல்லை. இந்த காரை அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே புக் செய்திருப்பார்கள். ஆனால் தற்போது தான் டெலிவரி எடுத்திருக்க முடியும்.

இவர் வாங்கிய கார் வெள்ளை நிற கலரில் ஆரஞ்ச் நிற கோச் லைன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறம் பிரைட் ஆரஞ்ச் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கான ரோல்ஸ்ரோஸ் கல்லீனன் காரிலிருந்து சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. இந்த காரில் வேறு என்னென்ன கஸ்டமைஸேஷன் இருக்கிறது என்ற விபரம் தெரியவில்லை.
ரோல்ஸ்ரால்ஸ் கல்லீன்ன சிரீஸ் 1 கார் இதற்கு முன்னர் இந்தியாவில் ரூ6.95 கோடி என்ற விலையில் விற்பனையானது. கஸ்டமைஸேஷன் ஆப்ஷனை பொருத்து இதன் விலை அதிகமாகும். தற்போது விற்பனையாகும் கல்லீனன் சிரீஸ் 2 கார் இந்தியாவில் ரூ10.5 கோடி என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் கார் 6.75 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 569 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 8 ஸ்பீடு ஆட்டேமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மற்ற சொகுசு கார்கள் போல அதிக வசதி மற்றும் பயணிகளுக்கான சொகுசு அம்சஙகள் நிறந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் காரை வாங்கும் வாடிக்கையாள்கள் பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள். இப்படியாக ஆல்கெம் லேப்ஸ் நிறுவன உரிமையாளர் இந்த காரை வாங்கியுள்ளார். இந்த கார் தற்போது இந்தியாவில் பிரபலமான கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









