ஒரு வாரத்துக்கு நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் டிக்கெட் விற்று தீர்ந்தது! எப்படி தெரியுமா?

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் தற்போது செயல்பாட்டிற்கு வந்த நிலையில் இந்த ரயிலுக்கான அடுத்த ஒரு வாரத்திற்கான புக்கிங் முழுவதுமாக தீர்ந்துவிட்டது. டிக்கெட் விலை அதிகம் என மக்கள் மத்தியில் பேச்சு இருந்தாலும், தற்போது டிக்கெட் எல்லாம் விட்டுத் தீர்ந்துள்ளன. நெல்லை சென்னை இடையே அதிகமான ரயில்கள் செயல்பட்டு வந்தாலும் இந்த வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் அதிகமாக விற்று தீர்ந்துள்ளன இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

மிக பிரபலமான வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில்கள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மக்கள் மத்தியில் இதற்கான பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த ரயிலில் பயணிக்க மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைத்தார்.

chennai nellai vande bharat

இதில் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ரயில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் முதல் வந்தே பாரத் ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து கிளம்பும் இந்த ரயில் விருதுநகர், மதுரை திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயிலுக்கான டிக்கெட் எல்லாம் அறிமுகமான நிலையில் தற்போது அடுத்த ஒரு வாரத்திற்கான டிக்கெட் எல்லாம் விற்று தீர்ந்துள்ளன. இந்த ரயிலில் சாதாரண ஏசி கோச் டிக்கெட் ரூ 1,610 என்ற விலையிலும் எக்ஸிகியூடிவ் ஏசி கொஸ்டீன் ரூபாய் 3,005 என்று விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த டிக்கெட் விலை மற்ற ரயில்களின் டிக்கெட் விலையை காட்டிலும் அதிகமாக இருப்பதாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதம் எழுந்து வந்தது.

ஒரு சிலர் பஸ் டிக்கெட்டுகள் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை கால நேரங்களில் உள்ள டிக்கெட் விலையை காட்டிலும் இந்த ரயிலில் டிக்கெட் விலை குறைவாக தான் இருக்கிறது என்று விவாதித்து வந்தனர். இந்நிலையில் இந்த ரயிலுக்கான அடுத்த ஒரு வாரத்திற்கான டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துள்ளது. தற்போது காத்திருப்பு பட்டியலில் மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது.

நெல்லை-சென்னை இடையே நெல்லை, அனந்தபுரி, கன்னியாகுமரி, செந்தூர் உள்ளிட்ட பல முக்கிய எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இருந்தாலும் இந்த வந்தே பாரத் ரயிலுக்கு என மக்கள் முக்கியத்துவம் கொடுத்து இந்த ரயிலின் டிக்கெட் வாங்குகின்றனர். இத்தனை கம்மியான டிக்கெட் விலை கொண்ட ரயில்கள் இருந்தும் ஏன் வந்தே பாரத் ரயில்களின் டிக்கெட் விற்று தீர்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் ரயிலின் நேரம் தான். தற்போது நெல்லை-சென்னை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் குறைந்தபட்சம் 10- 12 மணி நேரம் வரை பயண நேரமாக எடுத்துக் கொள்கிறது. இதனால் பெரும்பாலும் இரவு நேர ரயில் தான் இருக்கிறது. அதாவது இரவு நேரத்தில் சென்னையில் இருந்து கிளம்பி மறுநாள் காலை விடியும் போது திருநெல்வேலி அடையும் வகையிலான ரயில்கள் தான் இயக்கப்பட்டு வருகின்றன.

தினசரி பகல் நேர ரயிலாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இருக்கிறது. இது குருவா காலை ஒன்பதே முக்கால் மணிக்கு சென்னையில் கிளம்பி இரவு எட்டு முப்பது மணிக்கு நெல்லையை வந்தடைகிறது. கிட்டத்தட்ட 11 மணி நேரம் பயணம் ஆகிறது. ஆனால் வந்தே பாரத்தை பிரசி மதியம் 2:50 மணிக்கு சென்னையில் கிளம்பி இரவு 10:40 மணிக்கு நெல்லையை வந்து அடைகிறது.

குறைவான பயண நேரம் மற்றும் பகல் நேர ரயில் என்பதால் இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் பலர் வந்தே பாரத் ரயிலை விரும்புகின்றனர். அதேபோல ஒரே நாளில் திருநெல்வேலி சென்றடையலாம் என்பதால் இந்த ரயிலை பலர் விரும்பி முக்கியம் செய்கின்றனர்.

கிட்டத்தட்ட விமானத்திற்கான நேரத்தை ஒப்பிடும்போது இந்த ரயிலில் நேரம் கிட்டத்தட்ட அதே அளவில் இருக்கிறது. அதனால் விமானத்திற்கு நிகராக இந்த ரயிலை பலர் ஒப்பிடுகின்றனர். நெல்லையிலிருந்து சென்னைக்கு விமானத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அருகில் உள்ள வாகைகுளம் விமான நிலையத்திற்கு தான் செல்ல வேண்டும். அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்ல வேண்டும்.

திருநெல்வேலியில் இருந்து வாகைகுளம் செல்ல ஆகும் நேரம், விமான நிலையத்தில் பரிசோதனை மற்றும் காத்திருப்பு நேரம், பின்னர் விமானம் பயணம் நேரம், அங்கிருந்து விமானம் தரையிறங்கிய பின்பு விமான நிலையத்திலிருந்து வெளிவரும் நேரம் எல்லாம் கணக்கிட்டு பார்க்கும்போது 6-7 மணி நேரம் எப்படியும் ஆகிவிடும்.

அதே பயண நேரத்தில் இந்த வந்தே பாரத் ரயில் நெல்லையிலிருந்து நேரடியாக சென்னைக்கு சென்று விடுகிறது. என்பதால் அதே நேரம் டிக்கெட் விலை விமான டிக்கெட் விட குறைவாக இருக்கிறது. என்பதாலும் சொகுசு வசதிகளும் விமானத்திற்கு நிகராக இருக்கிறதே மக்கள் இதை அதிகமாக விரும்புகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது நெல்லை-சென்னை இடையே பகல் நேர ரயில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இரவு நேரத்தில் நெல்லை டு கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க மத்திய அரசு யோசனை செய்ய வேண்டும். இதற்காக ரயில்வே நிர்வாகம் இரவு நேர படுக்கை வசதிகளும் கூடிய வந்தே பாரத் ரயிலை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 25, 2023, 12:17 [IST]
English summary
All available seats on the chennai nellai vande bharat express have been fully booked know the reaso
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+