பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

வரலாற்றில் காலத்தால் அழியாத சோக வடுவை ஏற்படுத்திய நிகழ்வு டைட்டானிக் கப்பல் விபத்து. 1914ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள சவுதம்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பயணித்த டைட்டானிக் கப்பல் முதல் பயணத்திலேயே பனிப் பாறையில் மோதி விபத்தில் சிக்கியது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

மறக்க முடியா நிகழ்வு

இந்த பயங்கர விதத்தில், அந்த கப்பலில் பயணம் செய்த 2,000 பேரில் 1,500 பேர் வரை கடலில் மூழ்கி உயிரிழந்தனர். உலகில் நடந்த மிக மோசமான கப்பல் விபத்தாகவும் வர்ணிக்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய விபத்து குறித்து வெளியான டைட்டானிக் சினிமா உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

ஆர்எம்எஸ் டைட்டானிக்

இந்த சூழலில், ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற அழஐக்கப்பட்ட உண்மையான டைட்டானிக் கப்பலை போன்று தோற்றத்தில் நவீன வசதிகளுடன் புதிய டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த புதிய கப்பல் கட்டுமானம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

முதல் பயணம்

இந்த ஆண்டு பயணத்தை துவங்கும் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் 2020ம் ஆண்டு இந்த புதிய உல்லாச கப்பல் தனது முதல் பயணத்தை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

டைட்டானிக் - 2

டைட்டானிக் - 2 என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய கப்பல், முதல் டைட்டானிக் கப்பல் பயணித்த அதே தடத்தில் இயக்கப்பட இருப்பதாக இந்த கப்பலின் உரிமையாளரான ஆஸ்திரேலியாவை பெரும் பணக்காரரும், இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புளூ ஸ்டார் கப்பல் நிறுவனத்தின் அதிபருமான க்ளைவ் பால்மர் தெரிவித்துள்ளார். சீனாவில் கட்டமைக்கப்படுகிறது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

நகல்

வெளிப்புறத் தோற்றமும், உட்புறத் தோற்றமும் டைட்டானிக் கப்பலை அப்படியே தழுவி உருவாக்கப்பட இருக்கிறது. ஆனால், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

அதே தோற்றம்

டைட்டானிக் கப்பலில் இருந்தது போலவே, மிகப் பிரம்மாண்டமான கூடம், படிக்கட்டு அமைப்பு ஆகியவையும் இந்த கப்பலின் கவரும் அம்சமாக இருக்கும். இந்த கப்பலில் உணவகங்கள் மற்றும் சாப்பாட்டு கூடங்கள் உண்மையான டைட்டானிக் கப்பலை பிரதிபலிப்பதாக இருக்கும்.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

தங்கும் அறைகள்

தங்கும் அறைகள் கூட பழைய டைட்டானிக் கப்பலில் இருப்பது போன்றே அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதாவது, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு என மூன்று விதமான கட்டணங்களில் அறைகள் அமைக்கப்பட இருக்கின்றன.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

அதிக பாதுகாப்பு

கப்பலின் தோற்றம், உட்புறம் பழைய கப்பலை பிரதிபலித்தாலும், நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது. எனவே, மிக மோசமான சூழ்நிலைகளை கடந்து இந்த கப்பல் பாதுகாப்பாக பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

பரிமாணம்

புதிய டைட்டானிக் கப்பல் 270 மீட்டர் நீளமும், 53 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும். இந்த புதிய கப்பல் 40,000 டன் எடை கொண்டதாக இருக்கும். 9 அடுக்குகளுடன் புதிய டைட்டானிக்-2 கப்பல் கட்டமைக்கப்படுகிறது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

பயணிகள் எண்ணிக்கை

புதிய டைட்டானிக் கப்பலில் 2,400 விருந்தினர்களும், 900 பணியாளர்களும் பயணிக்க முடியும். மொத்தமாக 840 கேபின்களுடன் புதிய கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது. நீச்சல் குளம், நீராவி குளியல் அறைகள், உடற்பயிற்சி கூடம், திரையரங்குகள் என பல்வேறு வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

பாரம்பரிய உடை

பழைய டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்டது போன்ற பாரம்பரிய உடைகள் இந்த புதிய டைட்டானிக் கப்பல் பயணிகளுக்கும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

அச்சம் தேவையில்லை

பழைய டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய நேரத்தில் போதிய எண்ணிக்கையில் உயிர் காக்கும் படகுகள் இல்லாததே, அதிக உயிரிழப்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே, புதிய டைட்டானிக் கப்பலில் போதுமான அளவில் உயிர் காக்கும் படகுகள் வைக்கப்பட இருக்கிறது.

விலை மதிப்பு

பழைய டைட்டானிக் கப்பல் பாணியில் கட்டமைக்கப்படும் புதிய டைட்டானிக் கப்பல் ரூ.3700 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. நிதி பிரச்னை காரணமாக, இந்த ஆண்டு வெள்ளோட்டம் விடப்பட இருந்த புதிய டைட்டானிக் கப்பல் 2022ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

முன்பதிவு

இந்த புதிய டைட்டானிக் - 2 கப்பலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. புளூ ஸ்டார் இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image Courtesy: Blue Star Line

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

அப்பவே அப்படி...

புதிய டைட்டானிக் கப்பல் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே, டைட்டானிக் உல்லாச கப்பலில் இருந்த வசதிகள் வியக்க வைக்கின்றன. அந்த கப்பலின் கட்டுமானத்தின் சிறப்பம்சங்கள், வசதிகள் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

Image Courtesy: Wiki Commons

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

கடல் ராணி

கடல் ராணி என அழைக்கப்பட்ட பழைய டைட்டானிக் கப்பலில் 3,547 பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக இருந்தது. மின் விளக்குகள், தொலைபேசி வசதியுடன் வந்த முதல் கப்பலும் அதுதான்.

Image Courtesy: Wiki Commons

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

மலை விழுங்கி எஞ்சின்

டைட்டானிக் கப்பலின் நீராவி எஞ்சின்களை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு 800 டன் நிலக்கரி தேவைப்பட்டது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

அம்மாடியோவ்

உயரம் புகைப்போக்கி குழாயின் உயரத்தை சேர்த்து அளவிடும்போது டைட்டானிக் கப்பல் 17 அடுக்குகள் கொண்ட கட்டிடத்திற்கு இணையாக இருந்தது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

நீளம்

நீளம் மூன்று கால்பந்து மைதானத்திற்கு இணையான நீளத்தை கொண்டது டைட்டானிக்.

Image Courtesy: Teufelbeutel

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

வேகம்

மணிக்கு 23 நாட்டிக்கல் மைல் வேகம், அதாவது மணிக்கு 43 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. விபத்துக்குள்ளானபோதும், அதிகபட்ச வேகத்தில் சென்றதாலேயே பனிப்பாறைகள் இருப்பது தெரிந்தும் கப்பலை நிறுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.

Image Courtesy: F.G.O. Stuart

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

லிஃப்ட் வசதி

டைட்டானிக் கப்பலில் 4 லிஃப்ட்டுகள், தண்ணீரை வெப்பமூட்டும் வசதி கொண்ட நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், 2 நூலகங்கள் மற்றும் 2 முடிதிருத்தும் நிலையங்கள் இருந்தன.

Image Courtesy: wikia

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

விருந்து

நாள் ஒன்றுக்கு 86,000 பவுண்ட் இறைச்சி, 40,000 முட்டைகள், 40 டன் உருளைக் கிழங்கு, 7,000 முட்டைகோஸ்கள், 3,500 பவுண்ட் வெங்காயம், 36,000 ஆப்பிள்கள் மற்றும் 1,000 பிரெட் பாக்கெட்டுகள் ஆகியவை பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு உணவுப் பொருட்களாக தேவைப்பட்டது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

குடிநீர் பயன்பாடு

நாள் ஒன்றுக்கு பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு 53,000 லிட்டர் குடிநீர் தேவைப்பட்டது.

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

டம்மி புகைப்போக்கி குழாய்

டைட்டானிக் கப்பலில் 4 புகைப்போக்கி குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில், மூன்று மட்டுமே புகை வெளியேற்றுவதற்கானது. மீதமுள்ள ஒன்று அழகுக்காக பொருத்தப்பட்ட டம்மி புகைப்போக்கி குழாய்.

Image Courtesy:Robert John Welch

பயணத்திற்கு தயாராகும் புதிய டைட்டானிக் கப்பல் குறித்த புதிய தகவல்கள்!

டிக்கெட் விலை

டைட்டானிக் கப்பலில் மூன்று வகுப்புகள் கொண்டது. அதில், முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணத்தை இப்போதைய மதிப்புக்கு ஒப்பிட்டால் 99,000 டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 50 லட்சத்துக்கும் அதிகம்.

Image Courtesy: BNPS

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட்
English summary
All New Titanic II Ship To Set Sail in 2022.
Story first published: Monday, October 29, 2018, 13:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X