பூலோக சொர்க்கமாக உருவாக்கப்பட்டுள்ள பெங்களூரு விமான நிலையம்... வாழ்க்கையில ஒரு தடவையாச்சும் போயிரணும்!
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் (Kempegowda International Airport) சர்வதேச தரத்திலான இரண்டாவது டெர்மினலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பெங்களூரு விமான நிலையத்தை விரிவாக்கும் பணியாக தற்போது செயல்பட்டு வரும் முனையத்திற்கு அடுத்தாக இரண்டாவது முனையம் (KIA T-2)சர்வதேச அளவில் கட்டப்பட்டுள்ளது. 2,55,645 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த டெர்மினல் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் சிறப்புகளை இங்கே காணலாம்.

இந்த விமான நிலைய முனையம் "டெர்மினல் இன் ஏ கார்டன்" (Terminal in a Garden) என்ற தீமில் உருவாக்கப்பட்டுள்ளது. டெர்மினல் உள்ளேயே செடி கொடிகளுடன் இருக்கும்வகையில் இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் மொத்தம் 5932 பேர் அமரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டெர்மினல் ஆண்டிற்கு 2.5 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்திற்கு வெளியே பெங்களூரு நகரை உருவாக்கிய நாடபிரபு கெம்பே கவுடாவின் (Nada prabhu Kempegowda) 108 அடி உயர வெங்கல சில அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை "வேல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்" (World book of records )புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த விமான நிலையம் "டெர்மினல் இன் ஏ கார்டன்" கோட்பாட்டில் மட்டுமல்லாமல், நீடித்த உழைப்பு, தொழிற்நுட்பம், புதுமை, கர்நாடக மாநில கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டெர்மனில் உள்ள "டெர்மினல் இன் ஏ கார்டன்" (Garden Terminal)திட்டம் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்குப் பார்க்க வெகு சிறப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகள் நடந்து செல்லும் போது ஒரு தோட்டத்திற்குள்ளேயே நடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்குள் தொங்கும் தோட்டமே (Hanging Garden)உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது டெர்மினலை மூங்கில் சொர்க்கம் (Bamboo Heaven) என்றே சொல்லாம். இங்குள்ள பெரும்பாலான கட்டிட அமைப்புகள் மூங்கிலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களூருவுக்கு கார்டன் சிட்டி என்ற பெயரையும் பிரதிபலிக்கும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் முற்றிலும் பசுமையாகத் தோற்றம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் இது மிக முக்கியமான கட்டமைப்பாகத் திகழ்கிறது. தற்போது இந்த டெர்மினல் உள்நாட்டு விமானங்களை மட்டும் கையாளவுள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் இது முழு செயல்பாட்டிற்கு வரும். இந்த இரண்டாவது டெர்மினலில் பேஸ் 2 வேலைகள் நடந்து வருகிறது. 2023ம் ஆண்டு அந்த பணிகள் முடிந்து மெல்ல மெல்லச் சர்வதேச விமானங்களும் இந்த விமான நிலையத்திற்கு மாற்றப்படும்.
முதற்கட்டமாக ஏர் ஏசியா மற்றும் ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் இந்த இரண்டாவது டெர்மினலுக்கு மாற்றப்படுகிறது. மெல்ல மெல்ல மற்ற 2022ம் ஆண்டு முடிவதற்குள் மற்ற விமானங்களும் இந்த டெர்மனிலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு விமான நிலையத்தின் இந்த இரண்டாவது டெர்மினலை கட்டமைக்க அரசு ரூ5000 கோடி பணத்தைச் செலவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








