எவ்வளவு பெரிய மனுஷன்... வெறும் உள் பனியன் அணிந்தப்படி கார் ஓட்டியது இவரா? விடாமல் துரத்தி சென்ற ரசிகர்கள்!
எம்.எஸ் தோனி (MS Dhoni) கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி, ஆட்டோமொபைல் (Automobile) ஆர்வலர் என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். குறிப்பாக, மோட்டார்சைக்கிள்கள் என்றாலே தோனிக்கு எப்போதுமே தனி ஆர்வம் உண்டு. இதனாலேயே அவரது வீட்டில், நூற்றுக்கணக்கிலான இரு சக்கர வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அவற்றை நிறுத்துவதற்கு பெரிய அளவிலான கேரேஜ் (Garage) பகுதியை தோனி வைத்துள்ளார்.
மோட்டார்சைக்கிள்களை போன்று, தோனியிடம் சில தனித்துவமான கார்களும் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, ஹம்மர் எச்2 (Hummer H2) ஆகும். ஏனெனில், இந்த ஹம்மர் வாகனம் ஆனது இந்தியாவில் விற்பனையில் இல்லை. அத்தகைய வாகனத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து பயன்படுத்திவரும் தோனி அந்த ஹம்மர் வாகனத்தை ராஞ்சியில் வெறும் உள் பனியன் அணிந்தப்படி சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தோனியின் இந்த ஹம்மர் எச்2 வாகனம் தொடர்பான சர்ச்சைகள் அந்த வீடியோவிற்கு கமெண்ட்களாக பதிவாகி வருகின்றன. ஏனெனில், தோனியின் இந்த ஹம்மர் எச்2 வாகனம் ஆனது இந்திய இராணுவத்தின் தீம் (Theme)-இல் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பொது மக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இவ்வாறான இராணுவத்திற்கு பயன்படுத்தக்கூடிய தீம் இருக்க கூடாது என்று இந்திய மோட்டார் வாகன சட்டம் சொல்கிறது. ஆனால், இங்கே தான் நம்மில் பலர் ஒரு விஷயத்தை மறந்துவிட்டோம். என்னவென்றால், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி இந்திய இராணுவத்திலும் அங்கம் வகிக்கிறார். இந்திய பிராந்திய இராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவின் லெப்டினண்ட் கர்னல் ஆக தோனி உள்ளார்.

ஆதலால், இவ்வாறான தீமில் ஆன வாகனத்தை பயன்படுத்த தோனிக்கு உரிமை இருக்கலாம். இவ்வளவு ஏன்... இந்த வாகனத்தை தோனிக்கு வழங்கியதே இந்திய இராணுவமாக கூட இருக்கலாம். எம்.எஸ் தோனியின் இந்த ஹம்மர் வாகனத்தின் மீது சிலர் கூறும் வேறொரு குற்றச்சாட்டு என்னவென்றால், வாகனத்தின் ஜன்னல் கண்ணாடிகள் மிகவும் கருமையாக டிண்ட் செய்யப்பட்டு உள்ளதாம்.
இந்தியாவில் 4-சக்கர வாகனங்களின் முன் மற்றும் பின்பக்க பெரிய அளவிலான விண்ட்ஷீல்டுகள் குறைந்தப்பட்சம் 70% ஒளியை தன்னுள்ளே கடத்தக் கூடியவைகளாக இருக்க வேண்டும். அதேபோல், பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகள் குறைந்தப்பட்சம் 50% ஒளியை கடத்தக் கூடியவைகளாக இருக்க வேண்டும். இராணுவத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆட்டொமொபைல் பிரியரான தோனிக்கு இது எல்லாம் தெரியாமலா இருக்கும்?

ஜன்னல் கண்ணாடி வழியாக காரை ஓட்டும் தோனியை தெளிவாக காண முடிவதில் இருந்து, அவரது ஹம்மர் எச்2 வாகனம் எந்த அளவிற்கு ஒளிப்புகும் தன்மை உடன் ஜன்னல் கண்ணாடிகளை கொண்டுள்ளது என்பதை அறியலாம். மேலும், தோனியின் இந்த ஹம்மர் வாகனத்தின் பின்பக்கத்தொல் ஸ்பேர் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டையும் சிலர் கேள்வியெழுப்பி உள்ளனர்.
அதாவது, கார்களில் எவ்வாறு இரு வரிகளில் நம்பர் பிளேட்டை கொண்டிருக்கலாம்? என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அத்தகையவர்களுக்கு தெரியவில்லை... இது அதிபாதுகாப்புமிக்க நம்பர் பிளேட் (HSRP) என்று. இன்னும் இந்தியா முழுவதும் பரவலாக கொண்டுவரப்படாத HSRP-இன்படி கார்களிலும் பின்பக்கத்தில் இரு வரிகளில் நம்பர் பிளேட்டை கொண்டிருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், இரு வரிகளில் நம்பர் பிளேட் இருப்பதுதான் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்.எஸ் தோனி பொது வெளியில் 4-சக்கர வாகனங்களை ஓட்டி செல்வது இது ஒன்றும் முதல்முறை அல்ல. ஆனால், வெறும் உள் பனியன் உடன் தோனி ஹம்மர் எச்2 காரை ஓட்டி சென்றுள்ளார் என்றால், ஏதோ அவசரமாக சென்றுள்ளார் என்பது புரிகிறது. அவரது இந்த ஹம்மர் எச்2 காருக்கு சமீபத்தில்தான் இந்த இராணுவ தீம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications









