நம்ம புஷ்பாவா இது? கெத்தான காரில் வந்து இறங்கிய அல்லு அர்ஜூன்... இவ்ளோ காசு இருந்தால்தான் இதை வாங்க முடியுமா!
புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜூன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த கார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன் (Allu Arjun). புஷ்பா திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகர்களில் ஒருவராக அல்லு அர்ஜூன் உயர்ந்துள்ளார். இவர் சமீபத்தில் மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியிருந்தார். அது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) ஆகும்.

இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று. இந்த சூழலில் சமீபத்தில் ஐதராபாத் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அல்லு அர்ஜூன் தனது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் வந்துள்ளார். தெலுங்கு திரையுலகில் கார்களின் மீது நல்ல 'டேஸ்ட்' உள்ள நடிகர்களில் ஒருவராக அல்லு அர்ஜூன் அறியப்படுகிறார்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கு முன்பாகவே, அவரிடம் மிகவும் விலை உயர்ந்த நிறைய கார்கள் இருக்கின்றன. அல்லு அர்ஜூன் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார், வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே மிகவும் பிரீமியமாக இந்த கார் காட்சியளிக்கிறது. அல்லு அர்ஜூன் தனது கார்களை 'கஸ்டமைசேஷன்' (Customisation) செய்ய கூடியவர்.

எனவே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரையும் அவர் 'கஸ்டமைசேஷன்' செய்திருக்கலாம். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மிகவும் சொகுசான கார்களை உருவாக்க கூடியது. கேபின் மிகவும் சொகுசாக இருக்கும், ஏராளமான வசதிகள் நிரம்பியிருக்கும் என்பதால்தான், ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாடிக்கையாளர்கள் பலரும் விரும்புகின்றனர்.

ஆனால் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விற்பனை செய்வதில்லை என்ற குறை இருந்து வந்தது. இந்த குறையை போக்கும் வகையில், எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முடிவு செய்தது. இதன்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எஸ்யூவி கார்தான் கல்லினன்.

இதுதான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி கார் ஆகும். தற்போது எஸ்யூவி கார்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கல்லினன் காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் பலரையும் கவர்ந்து விட்டது.

இந்தியாவிலும் கூட பிரபலங்கள் மத்தியில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மிகவும் பிரபலமான காராக உள்ளது. பாலிவுட் நட்சத்திரங்கள் பலரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன. ஆனால் ஒரு சிலரிடம் மட்டுமே கல்லினன் இருக்கிறது. இதில், நடிகர் அஜய் தேவ்கன் குறிப்பிடத்தக்கவர். அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் உள்ளது.

அதே நேரத்தில் அம்பானி குடும்பத்தினரிடம் 3 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பானி குடும்பத்தினர் தவிர, லூலூ குழுமத்தின் உரிமையாளர் யூசுப் அலியிடமும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், 6.75 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு, வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 571 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு இஸட்எஃப் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள் ஆகும். சொகுசு வசதிகள் மட்டுமல்லாது, செயல்திறனிலும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் அசத்த கூடியது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை 6.95 கோடி ரூபாயாக உள்ளது. இது புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். தோராயமாக பார்த்தால், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் ஆன் ரோடு விலை சுமார் 8.25 கோடி ரூபாய் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் 'கஸ்டமைசேஷன்' செய்தால் விலை இன்னும் அதிகரிக்கும். வாடிக்கையாளர் என்னென்ன கஸ்டமைசேஷன்களை விரும்புகிறாரோ, அதை பொறுத்து விலை இன்னும் மாறுபடும். எனவே இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை சொந்தமாக்க வேண்டுமென்றால், தோராயமாக 8 முதல் 10 கோடி ரூபாய் வரை தேவை.


Click it and Unblock the Notifications