இந்த பல கோடி ரூபாய் சொகுசு கார் அந்த நடிகரோடதா... பையனுக்காக அப்பா பாத்து பாத்து வாங்கியிருக்காரு...

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன் (Allu Arjun). இவர் பாரம்பரிய சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர். அல்லு அர்ஜூனின் அப்பாவான அல்லு அரவிந்த் (Allu Aravind), பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் தொழில் அதிபர் என பல முகங்கள் கொண்டவர்.

மிகவும் வலுவான சினிமா குடும்ப பின்னணியை கொண்டிருந்தாலும், அல்லு அர்ஜூனின் வளர்ச்சிக்கு அதை மட்டும் ஒரு காரணமாக கூறி விட முடியாது. பல திரைப்படங்களில் அல்லு அர்ஜூன் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக புஷ்பா (Pushpa) திரைப்படத்திற்கு பிறகு, இந்தியா முழுவதும் அறியப்படும் ஒரு நடிகராக அல்லு அர்ஜூன் மாறியுள்ளார். அல்லு அர்ஜூன் நேற்று முன் தினம் (ஏப்ரல் 8) தனது பிறந்த நாளை (Birthday) கொண்டாடிய நிலையில், அவரது வீட்டிற்கு புதிய கார் ஒன்று வந்துள்ளது. அது மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) கார் ஆகும்.

BMW 7 Series

அல்லு அர்ஜூனின் அப்பா அல்லு அரவிந்த் இந்த காரை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை மகன் பிறந்த நாளுக்கு பரிசளிப்பதற்காக அவர் இந்த காரை வாங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அல்லு அர்ஜூன் குடும்பத்திற்கு புதிதாக வந்துள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் ஒரு சிறிய வீடியோ, சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது.

அதை அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 1.81 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.84 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-road Price) 2 கோடி ரூபாய்க்கு மேல் வரும்.

Allu Arjun Family Buys BMW 7 Series

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில், 3.0 லிட்டர் பெட்ரோல் (Petrol) மற்றும் 3.0 லிட்டர் டீசல் (Diesel) என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இது சொகுசு கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் குறிப்பிடத்தக்க வசதிகளாக உள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-class), லெக்ஸஸ் எல்எஸ்500 ஹெச் (Lexus LS500h) மற்றும் ஆடி ஏ8 எல் (Audi A8 L) போன்ற கார்களுடன், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, சொகுசான பயணத்தை வழங்க கூடியது. எனவேதான் பிரபலங்கள் பலரும் இந்த காரை போட்டி போட்டு கொண்டு வாங்கி வருகின்றனர். அல்லு அர்ஜூன் குடும்பம் தவிர, இன்னும் பல்வேறு பிரபலங்களிடமும் இந்த கார் உள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) மற்றும் வீரேந்திர சேவாக் (Virender Sehwag) போன்றோரிடம், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் உள்ளது. திரைத்துறையை பொறுத்த வரையில், ஷாருக்கான் (Shahrukh Khan), சஞ்சய் தத் (Sanjay Dutt), சயிஃப் அலி கான் (Saif Ali Khan) மற்றும் அலியா பட் (Alia Bhatt) போன்றோர், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வைத்துள்ளனர்.

இதுதவிர உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியிடமும் முகேஷ் அம்பானியிடமும் (Mukesh Ambani) பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் உள்ளது. ஆனால் முகேஷ் அம்பானியிடம் இருப்பது வழக்கமான பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் கிடையாது. அது உச்சகட்ட பாதுகாப்பு வசதிகள் நிரம்பியது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 10, 2024, 13:16 [IST]
English summary
Allu arjun family buys bmw 7 series viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+