சொகுசு விமானத்திற்கு இணையான வசதிகொண்ட பஸ்... பல கோடி செலவில் வாங்கிய நடிகர்: யார் தெரியுமா...?

ரூ. 7 கோடி செலவில் சொகுசு பேருந்து ஒன்றை, சொந்த பயன்பாட்டிற்காக நடிகர் ஒருவர் வாங்கியுள்ளார். அவர் யார்... பேருந்தின் சிறப்பு என்ன... உள்ளிட்ட அனைத்து தகவலையும் இந்த பதிவில் காணலாம்.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

பெரும்பாலான திரைப்பட நட்சத்திரங்களின் வீட்டில் சொகுசு கார்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்தவகையில், அவர்கள் ஜிம் செல்ல ஓர் கார், விழாக்களுக்கு செல்ல ஓர் கார், ஷூட்டிங்கிற்கு செல்ல ஓர் கார், நண்பர்களுடன் சுற்றி வர ஒரு கார் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான கார்களை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவையனைத்தும், விலையுயர்ந்த சொகுசு மற்றும் லக்சூரி கார்களாகவே காணப்படுகின்றன.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

இவ்வாறு, திரை நட்சத்திரங்கள் பலர் அவர்களது பெருவாரியான வருமானத்தை சொகுசு மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காக செலவிட்டு வருகின்றனர். அந்தவகையில், இங்கு ஒரு நடிகர் தனது சொந்த பயன்பாட்டிற்காக, அதி நவீன வசதிகொண்ட, சொகுசு விமானங்களையேத் தோற்கடிக்கின்ற வகையிலான லக்சூரி பேருந்து ஒன்றை வாங்கியுள்ளார்.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

அவர் வேறு யாரும் இல்லை, தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன்தான். இவரின் கராஜில் ஏற்கனவே பல்வேறு சொகுசு கார்களின் அணி வகுப்பு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இவையே, அவரின் அனைத்து பயணத்திற்கு போதுமானவை. இருப்பினும், அவரது சொந்த பயன்பாட்டிற்காக பல்வேறு அதிநவீன வசதிகள் அடங்கிய புதிய வேனிட்டி வேனை வாங்கியுள்ளார்.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

இதனை, ஷூட்டிங் போது பயன்படுத்துவதற்காக அல்லு அர்ஜூன் அவர் வாங்கியுள்ளார். அல்லு அர்ஜூன் அண்மைக் காலங்களாக ஷூட்டிங்கிள் மிகவும் பிஸியாக இருக்கின்றார். ஆகையால், பெரும்பாலான நேரங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கழிக்கும் சூழல் அவருக்கு ஏற்படுகின்றது. இதுபோன்ற நேரங்களில் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக, இந்த வேனிட்டி வேனை அவர் வாங்கியுள்ளார்.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

மேலும், இந்த வேனை அவரின் வசதிக்கேற்ப கஸ்டமைஸ் செய்துள்ளார். இதற்கான பணியை, புகழ்வாய்ந்த ரெட்டி கஸ்டமைஸ் என்ற நிறுவனத்தின்மூலம் அவர் மேற்கொண்டுள்ளார். இந்த பேருந்து, மற்ற நடிகர்களிடம் இருக்கின்ற கேரவனைக் காட்டிலும், பல்வேறு சிறப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

அந்தவகையில், முழுக்க முழுக்க கஸ்டைமைஸ் செய்யப்பட்டுள்ள வேனிட்டி வேனின் சேஸிஸ், பாரத் பென்ஸ் நிறுவனத்துடையதைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது, வேனின் உறுதி தன்மை மற்றும் நீண்ட நாள் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்கும். இத்துடன், கம்ஃபோர்டபிளான வசதியையும் இது வழங்கும்.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

இந்த வேனின் வெளிப்புறத்திற்கு கருப்பு வண்ண அலங்காரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதன் முகப்பு பகுதியில் ஏஏ என்ற லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இது, அல்லு அர்ஜூன் என்பதைக் குறிக்கும். குறிப்பாக, இந்த வாகனத்தைப் பார்த்தவுடன் அனைவரையும் கவரும் வகையில், அதன் வீல் அமைந்துள்ளது. இது, ஸ்டீல் ரிம்முடன் கூடிய ஸ்போக்குகளைப் பெற்றுள்ளது. இந்த வீல் வாகனத்தின் நகர்வின்போது அனைவரையும் மயக்கும் வகையில் காட்சியளிக்கும்.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

இதேபோன்று, வேனின் உட்புறமும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், காரின் உட்புற கேபின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் இன்டீரியருக்கு இணையான வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை, அவ்வாறு மாற்றும் பணியை ரெட்டி கஸ்டம்ஸ் நிறுவனத்தின் மேல்மட்ட குழு மேற்கொண்டுள்ளது. இவர்களின் கை வண்ணத்தால், மிகப்பெரிய சொகுசு வசதியை கேபின் பெற்றிருக்கின்றது.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

அந்தவகையில், கேபினின் உட்புற பகுதியில் ஷூட்டிங் முடிந்த பின்னர் ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி அடைவதற்கான சகல வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஓர் சிறிய குழுவுடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கான வசதிகளும் இந்த மினி பேருந்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

அவ்வாறு, மாஸ்டர் கேபினுக்குள் ரெக்லினபிள் சேர் பொருத்தப்பட்டுள்ளது. இது, அல்லு அர்ஜூனின் தேவைக்கேற்ப சாய்த்து வைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு, அதனை எலக்ட்ரானிக் ஸ்விட்ச் மூலம் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். இந்த இருக்கைக்கு மிருதுவான லெதர் உறை போர்த்தப்பட்டுள்ளது. இது, அல்லு அர்ஜூனின் மேக்கப்பின் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

அவ்வாறு, இருக்கையில் அமர்ந்து மேக்கப் போடும்போது, அதனைப் பார்ப்பதற்கு ஏதுவாக பெரியளவு கண்ணாடி, சேருக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, மற்றொரு பக்கத்தில் பெரிய திரை கொண்ட டிவியும் நிறுவப்பட்டுள்ளது. ஆகையால், மேக்கப்பின்போது தேவையென்றால், டிவிமூலம் பொழுதுபோக்கிக் கொள்ளலாம்.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

இந்த டிவிக்கு கீழே படுக்கை வசதி கொண்ட மெத்தை வழங்கப்பட்டுள்ளது. இது, அல்லு அர்ஜூன், கணிசமாக இலைப்பாற உதவும். இதுமட்டுமின்றி, அதன் அருகிலேயே அட்டாச்சட் குளியலறை வசதிகொண்ட பாத்ரூம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில், ஷவர் மற்றும் வாஷ்பேஸின் உள்ளிட்ட வசதி சகல வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

மேலும், கேபினுக்குள் மீட்டிங் செய்வதற்கு ஏதுவாக ஷோபாவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேபினின் பிரிமியம் லுக்கிற்காக, அதன் தரைப்பகுதி மரத்தால் நிறுவப்பட்டுள்ளது. மேலும், சீலிங்கில் டெக்ஸ்டர்ட் வகையிலான மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை, தேவைக்கேற்ப நிறத்தை மாற்றி எரிய வைத்துக் கொள்ள முடியும். இத்துடன், லக்சூரியான லுக்கை வழங்கும் வகையில், ஆம்பிசியன் லைட்டுகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

நவீன வசதியாக கம்யூனிகேஷன் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது, பேருந்தின் பயணத்தின்போது, அல்லு அர்ஜூன் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க உதவும். அதாவது, செல்போன் அழைப்பு, இணையதள வசதி உள்ளிட்டவை இதன் மூலம் பெற முடியும்.

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் வசதிகொண்ட பஸ்: வாங்கிய நடிகர் யார் தெரியுமா...?

இவ்வாறு, இந்த பேருந்தில் சகல வசதிகளை மேற்கொள்ள மட்டும் ரூ. 3.5 கோடி வரை செலவாகியிருப்பதாக கூறப்படுகின்றது. அதேசமயம், இந்த வேனை வாங்கியது முதல் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் கஸ்டமைஸ் பணி ரூ. 7 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ் பணியை மேற்கொண்ட ரெட்டி கஸ்டமைஸ் நிறுவனம், இந்த பேருந்துகுறித்த புகைப்படத்தை அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Source: Reddy Customs

More from DriveSpark

Article Published On: Thursday, July 4, 2019, 13:54 [IST]
English summary
Allu Arjun’s 7 Crore Rupee Vanity Van. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+