குழந்தைகளுடன் வந்து பென்ஸ் சொகுசு காரை டெலிவரி பெற்ற ஆல்யா மானசா.. கருப்பு நிற சட்டையில் வந்த சஞ்சீவ்! வீடியோ!
பிரபல டிவி சீரியல் நடிகையான ஆல்யா மானசா மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடல் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் வாங்கி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் இ-கிளாஸ் எல்டபிள்யூ (E-Class LWB) சொகுசு கார் மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர சொகுசு செடான் ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாக்கும் அதிகம் ஆகும்.
ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே இது ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை கோடியை நெருங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய காஸ்ட்லியான காரையே ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் ஜோடிகள் தற்போது வாங்கி இருக்கின்றனர். இந்த காரை சஞ்சீவ்-வே வாங்கியதாகக் கூறப்படுகின்றது.

இந்த காரை அவர் தன்னுடைய குடும்பத்துடன் வந்து டெலிவரி பெறும் வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. மேலும், காரை டெலிவரி பெறும் போது காரின் நிறத்திற்கு ஏற்ப கருப்பு நிற சட்டையை அணிந்து வந்தே சஞ்சீவ் காரை டெலிவரி பெற்றார். அதேநேரத்தில், ஆல்யா உட்பட மற்றவர்கள் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர்.
இந்தியாவில் இந்த பென்ஸ் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் நீண்ட காலமாக உற்பத்தியில் இருக்கும் பென்ஸ் கார் என்கிற பெருமையை தாங்கி நிற்கின்ற அளவிற்கு இந்த காருக்கு மிக அமோகமான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் அப்கிரேட் செய்யப்பட்ட வெர்ஷனே தற்போது சந்தையில் விற்பனையில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதையே தற்போது ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி வாங்கியிருக்கின்றது. இந்த அப்கிரேட் வெர்ஷனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே பென்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. முன்னதாக விற்பனையில் இருந்த இ-கிளாஸ்ஸைக் காட்டிலும் மிக சிறப்பான அம்சங்களைத் தாங்கிய வெர்ஷனாகவே இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இ200 (E200), இ220டி (E220d) மற்றும் இ450 மேட்டிக் (E450 4MATIC) ஆகியவையே அவை ஆகும். இந்த காரில் இடம் பெற்றிருக்கும் லக்சூரி அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் வேற லெவலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது.
அந்தவகையில் 3 ஆம் தலைமுறை எம்பியூஎக்ஸ் சூப்பர் ஸ்கிரீன், ஏஐ வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரையில் புதிய வசதியாக செல்ஃபி வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் வசதி ஆகியவையும் வழங்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியர்களைக் கவரும் நோக்கிலேயே இந்த அம்சத்தை பென்ஸ் வழங்கி இருக்கின்றது.
இதுபோன்று இன்னும் பல்வேறு ஸ்பெஷள் அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில் அசத்தலான மியூசிக் சிஸ்டமாக 17 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 எக்சைடர்கள் கொண்ட பர்மெஸ்டர் 4டி சரவுண்டு சவுண்டு சிஸ்டமே இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன், ரெக்லைன் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை, சூரிய ஒளியைத் தவிர்க்கும் வசதிக் கொண்ட விண்டோ, 8 ஏர்பேக்குகள், பிளைண்டு ஸ்பாட் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு பாதுகாப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களும் புதிய பென்ஸ் இ-கிளாஸ் எல்டபிள்யூபி காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பென்ஸ் நிறுவனத்தின் இந்த தயாரிப்பிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே பிரபலங்கள் பலர் இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையிலேயே ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதி இந்த காரை வாங்கிய சம்பவம் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








