விலங்குககள் கடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் விசேஷ பாலங்கள்!

By Saravana Rajan

அமெரிக்காவில் மட்டும் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான விலங்குகளும், உயிரினங்களும் சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் இது பல லட்சமாக குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், வன உயிரினங்கள் சாலையை கடக்கும் இடங்களை கண்டறிந்து, அங்கு அவை தொந்தரவு இல்லாமல் கடப்பதற்கான விசேஷ கட்டமைப்புகளை உலகின் பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது, வன உயிரினங்கள் அச்சமில்லாமலும், விபத்தில் சிக்காமலும் சாலையை கடந்து செல்லும் விதத்தில், அவற்றிற்காக அமைக்கப்பட்டிருக்கும் விசேஷ பாலங்களை இங்கே காண இருக்கிறோம். நம் நாட்டு பெருநகரங்களில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில், விலங்குகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலங்கள் வியக்க வைக்கிறது.

01. கனடா

01. கனடா

கனடா நாட்டிலுள்ள அல்பெர்ட்டா என்ற இடத்தில் அமைந்திருக்கும் தேசிய வனவிலங்கு சரணாலயத்தின் ஊடாக செல்லும் நெடுஞ்சாலையில்தான் இந்த பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. டிரான்ஸ் கனடா என்று குறிப்பிடப்படும் இந்த நான்கு வழிச்சாலை, வர்த்தக போக்குவரத்துக்கு முதுகெலும்பாக விளங்குகிறது. இந்த நிலையில், இந்த சாலையில் வனவிலங்குகள் கடக்கும் இடங்களை கண்டறிந்து, அந்த இடத்தில் விசேஷ பாலங்கள் அமைக்க்பட்டிருக்கின்றன. வன உயிரினங்கள் அச்சமின்றி கடப்பதற்கு ஏதுவாக, பாலத்தின் மீது மரம், செடி, கொடிகளையும் வளர்த்துள்ளனர். மான், ஓநாய், கரடி போன்ற வன உயிரினங்கள் இந்த பாலத்தை கடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

02. நெதர்லாந்து

02. நெதர்லாந்து

உலகிலேயே வன உயிரினங்களுக்காக அதிக அளவில் பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நாடாக நெதர்லாந்து குறிப்பிடப்படுகிறது. இந்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் மட்டும் 600க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன. இதில் பல பாலங்கள் 50 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கின்றன.

03. பி38- பிர்கெனாவ், ஜெர்மனி

03. பி38- பிர்கெனாவ், ஜெர்மனி

ஜெர்மனியிலுள்ள புகழ்பெற்ற வன விலங்கு கடப்பதற்கான மேம்பால அமைப்பு இது. ஜெர்மனியின் பி38 மோட்டார்வே என்ற நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனை காண்பதற்காகவே, இந்த சாலையில் பலர் செல்வதும் குறிப்பிடத்தக்கது. கீழே செல்லும் வாகனங்களை கண்டு வன விலங்குகள் அச்சப்படாமல் கடக்கும் வகையில், மரங்களை பாலத்தின் மீது நட்டு வளர்த்துள்ளனர்.

04. ஸ்காட்ச் பிளெய்ன்ஸ், நியூ ஜெர்ஸி, அமெரிக்கா

04. ஸ்காட்ச் பிளெய்ன்ஸ், நியூ ஜெர்ஸி, அமெரிக்கா

வாகனங்களில் அடிபட்டு இறங்கும் வன உயிரினங்களை காக்கும் விதமாக, அமெரிக்காவின் நியூஜெர்ஸியின் அருகிலுள்ள வனப் பூங்காவின் ஊடாக செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் பாலம் இது. மிக அகலமான வன விலங்குகள் கடப்பதற்கான பாலங்களில் ஒன்றாக இதனை குறிப்பிடலாம். அருகிலுள்ள வனப்பகுதிக்கும், இதற்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மரங்களாலும், செடிகளாலும் நிறைந்து காணப்படுகிறது.

05. பெல்ஜியம்

05. பெல்ஜியம்

தி யூரோப்பியன் ரூட் E 314 என்று குறிப்பிடப்படும் நெடுஞ்சாலையில்தான் இந்த வனவிலங்குகளுக்கான பாலம் அமைந்துள்ளது. இந்த மிக முக்கிய வழித்தடத்தில் வன விலங்குகள் கடந்து செல்வதற்காக பல பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. காட்டிலுள்ள விலங்குகள், சாலையின் எதிர்புறத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு செல்லும் விதத்தில் இந்த பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

06. அமெரிக்கா

06. அமெரிக்கா

அமெரிக்காவின் மான்டேனா பகுதியில் உள்ள ப்ளாத்ஹெட் இந்தியன் ரிசர்வேஷன் என்ற வனப்பகுதியில் செல்லும் சாலையில் பல பாலங்கள் வன விலங்குகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டிரு்கின்றன. மேலும், வன விலங்குகள் சாலையை கடக்காத வகையிலும் தடுப்புகள் உள்ளன.

 07. அமெரிக்கா

07. அமெரிக்கா

அமெரிக்காவின் நியூஜெர்ஸி அருகேயுள்ள வாக்துங் ரிசர்வேசன் வனப்பகுதியில் செல்லும் இன்டர்ஸ்டேட் 78 சாலையிலும் பல பாலங்கள் வன விலங்குகள் கடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. சாலை குறுக்கிடுவது வன விலங்குகளுக்கு தெரியாத வகையில், அதிக செடிகொடிகளும் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன.

08. ஹைவே ஏ50, நெதர்லாந்து

08. ஹைவே ஏ50, நெதர்லாந்து

நெதர்லாந்து நாட்டின் ஹைவே ஏ50 நெடுஞ்சாலையிலும் பல பாலங்கள் வன விலங்குகள் கடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், பாலத்தின் இருபுறங்களிலும் சாலை தெரியாதவாறு சுவர் எழுப்பியது போன்று மரங்கள் நடப்பட்டுள்ளன. வனப்பகுதியின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு விலங்குகள் அச்சமின்றி, கடப்பதற்காக இந்த அமைப்பு.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Amazing Animal Bridges Around the World.
Story first published: Monday, July 4, 2016, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X