அச்சமூட்டும் டிசைனிலான ஹெல்மெட் மாடல்கள்...!!

By Saravana

மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பைக்குகளை கஸ்டமைஸ் செய்து பலர் ஓட்டுகின்றனர். அதுபோன்ற பிரியர்களை ஈர்ப்பதற்காகவே இங்கு சில ஹெல்மெட் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஹெல்மெட்டுகளின் டிசைன்கள் அச்சமூட்டும் வகையில் இருந்தாலும், பிற ஹெல்மெட்டுகளை போலவே பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன. அதுபோன்ற சில ஹெல்மெட்டுகள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஸ்கல் ஹெல்மெட்

1. ஸ்கல் ஹெல்மெட்

மண்டை ஓடு போன்ற டிசைனுடன், சிரிப்பது போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண ஹெல்மெட்டில் ஸ்டிக்கர் மூலம் தோற்றம் மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், இதன் தாடைப்பகுதி பெரிதாக கற்கால மனிதர்களை போன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதே இதன் தோற்றத்திற்கு வலு சேர்க்கிறது.

2. கோப்ரா கமான்டர்

2. கோப்ரா கமான்டர்

இந்த மாடல் பாம்பின் தலையின் தோற்றத்தை அடிப்படையாக வைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது. கூர்மையான டிசைன் கொண்ட இந்த ஹெல்மெட் இளைஞர்களிடம் அதிக விருப்பத்தை பெற்ற மாடலாக குறிப்பிடப்படுகிறது.

 3. ஸ்டிங்கர் ஹெல்மெட்

3. ஸ்டிங்கர் ஹெல்மெட்

இது ஹெல்மெட் உள்பகுதியில் பற்களை இருப்பது போன்ற கோரமான தோற்றத்துடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது அச்சமூட்டுவதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

 4.மெடிவல் ஹெல்மெட்

4.மெடிவல் ஹெல்மெட்

ரோமாபுரி வீரர்கள் பயன்படுத்தி தலைகவசத்தை அடிப்படையாக கொண்ட டிசைன் இது. பிற ஹெல்மெட்டுகளை காட்டிலும் விபத்துக்களின்போது அதிக பாதுகாப்பை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதில், கண்ணாடி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

5. பேட்மேன் ஹெல்மெட்

5. பேட்மேன் ஹெல்மெட்

இந்த ஹெல்மெட்டின் முகப்பகுதி பேட்மேன் சினிமா ஸ்டைலில் வடிவலமைக்கப்பட்டுள்ளது. இதில், இரு கொம்புகளுடன், முழுவதும் கருப்பு நிறத்திலானதாக உள்ளது. இதில், அணிபவரின் முகம் தெரியாது. இது ஹெல்மெட் விரும்பிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Source: Sag mart

More from DriveSpark

Article Published On: Monday, April 28, 2014, 11:19 [IST]
English summary
Amazing Bike Helmets for Youth. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+