இதுவரை கேட்டிராத, கண்டிராத, பார்த்திராத ஆட்டோமொபைல் உண்மைகள்!

By Saravana

கார் வரலாற்றை 1886ல் வந்த கார்ல் பென்ஸ் காரை வைத்துத்தான் ஆரம்பிக்கிறோம். அதிலிருந்து துவங்கிய பயணம் பல்வேறு இடர்பாடுகள், சுராஸ்யங்களை கடந்து இன்று வெகு தொலைவு வந்துவிட்டது.

மிகப்பெரிய வரலாற்று பின்னணி கொண்ட ஆட்டமொபைல் உலகில் சுவாரஸ்யங்கள் இறைந்து கிடக்கின்றன. அதில், நீங்கள் இதுவரை கேட்டிராத பல சுவையான, சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்துள்ளோம்.

குள்ளமான கார்

குள்ளமான கார்

உலகின் மிக குறைவான உயரம் கொண்ட கார் ப்ளாட்மொபைல்தான். இந்த கார் வெறும் 19 இஞ்ச் மட்டுமே உயரம் கொண்டது. பக்கிங்காம்ஷாம்ஷயர் பகுதியை சேர்ந்த பெர்ரி வாட்கின்ஸ் இந்த காரை வடிவமைத்தவர்.

 ஓல்டு இஸ் கோல்டு

ஓல்டு இஸ் கோல்டு

ஒரு சில ஆண்டுகளில் பார்ட் பார்ட்டாக கழன்று போகும் கார்கள் இருக்கும் இன்றைய சூழலில் உலகின் மிக பழமையான கார் அல்லது வாகனமாக கவுன்ட் டி டியோனை கூறலாம். 1884ல் வடிவமைக்கப்பட்ட இந்த கார் தற்போதும் பராமரிப்பில் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் இந்த கார் 4.6 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கையில் கட்டாயம்

கையில் கட்டாயம்

பிரான்ஸ் நாட்டில் கார் டிரைவர்கள் அனைவரும் ப்ரீத் அனலைசர் கருவியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சட்டம் அமலில் உள்ளது.

அப்படியா?

அப்படியா?

எந்த ஒரு நேரத்திலும் உலகம் முழுவதும் சராசரியாக ஒரு பில்லியன் கார்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றனவாம். இது உலக மக்கள் தொகையில் 7ல் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

 முதல் உயிரிழப்பு

முதல் உயிரிழப்பு

1896ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் சர்ரெ என்ற பெண் உயிரிழந்தார். சாலையை கடக்க முற்பட்டபோது அவர் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்தது. ஆனால், 1899ம் ஆண்டு செப்டம்பர் 14ந் தேதி காரில் நியூயார்க் நகரில் நடந்த விபத்தில் காரில் சென்ற ஹென்றி பிலிஸ் உயிரிழந்தார்.

முதல் விபத்து

முதல் விபத்து

1769ம் ஆண்டு முதல் கார் விபத்து நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகோலஸ் மற்றும் ஜோசப் கனாட் என்பவர்கள் வடிவமைத்த கார்தான் விபத்தில் சிக்கிய காராக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

 நிலவுக்கு பயணம்

நிலவுக்கு பயணம்

ஒரு கற்பனைக்காக காரில் நிலவுக்கு 96 கிமீ வேகத்தில் பயணிப்பதாக வைத்துக் கொண்டால், நிலவை சென்றடைய 6 மாதங்கள் ஆகுமாம்.

பார்க்கிங் மீட்டர்

பார்க்கிங் மீட்டர்

உலகின் முதல் காசு போட்டு பார்க்கிங் செய்வதற்கான கருவி ஒக்லஹோமா நகரத்தில் 1935ம் ஆண்டு நிறுவப்பட்டது.

கார் கடன் கேட்ட ஹிட்லர்

கார் கடன் கேட்ட ஹிட்லர்

ஹிட்லர் ஒரு கார் பித்தர் என்பது தெரிந்த விஷயம். ஒரு முறை சிறையில் இருந்த அவர் மெர்சிடிஸ் பென்ஸ் டீலர் ஒருவரிடம் காருக்கு கடன் கேட்டுள்ளார்.

அபராதம்

அபராதம்

இங்கிலாந்தில் நின்றிருக்கும் காரில் ஹாரன் அடித்தால் 30 பவுன்ட்(ரூ.3,000)அபாரதம் விதிக்கப்படுகிறது.

பென்ஸ் ஆதிக்கம்

பென்ஸ் ஆதிக்கம்

ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் 28.21 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டில் இருக்கும் கார்களில் 80 சதவீதம் பென்ஸ் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெஷல் கோட்டிங்

ஸ்பெஷல் கோட்டிங்

பெரும்பாலான பார்முலா- 1 கார்களின் புகைப்போக்கி குழாய்களில் வெப்பத்தை தாங்குவதற்காக பிரத்யேக பூச்சு பூசப்பட்டிருக்கும். இது முதன்முதலாக அணு உலைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

மோட்டார் ரேஸ் சர்க்யூட்

மோட்டார் ரேஸ் சர்க்யூட்

இங்கிலாந்தின் புரூக்லேண்ட்ஸ் பகுதியில்தான் உலகின் முதல் மோட்டார் ரேஸ் பந்தய களம் அமைக்கப்பட்டது. இது 4.43 கிமீ நீளம் கொண்டது.

 ரோல்ஸ்ராய்ஸ் நகரம்

ரோல்ஸ்ராய்ஸ் நகரம்

உலகிலேயே அதிக ரோல்ஸ்ராய்ஸ் கார்களை கொண்ட நகரம் ஹாங்காங்.

வைர சின்னம்

வைர சின்னம்

ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு இணங்க வடிவமைக்கப்பட்டு தருவது அறிந்த விஷயம். 2008ம் ஆண்டில் வாடிக்கையாளர் ஒருவர் விருப்பத்திற்காக 2 லட்சம் டாலர் மதிப்பிலான வைரங்கள் பதிக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் சின்னத்துடன் ஒரு காரை ரோல்ஸ்ராய்ஸ் கஸ்டமைஸ் செய்து கொடுத்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் தந்திரம்

ஸ்டீவ் ஜாப்ஸ் தந்திரம்

மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் வைத்திருந்த பென்ஸ் எஸ்55 ஏஎம்ஜி காரின் நம்பர் பிளேட்டில் எதுவுமே எழுதப்படாமல் இருப்பது வழக்கம். அவர் வசித்த கலிபோர்னியா மாகாணத்தின் விதிகளின்படி, புதிய காருக்கு 6 மாதங்கள் வரை நம்பர் எழுதாமல் ஓட்டலாம். எனவே, 6 மாதத்திற்கு ஒரு முறை தனது காரை மாற்றிவிடுவார்.

ஜாம்பவான்

ஜாம்பவான்

உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜப்பானை சேர்ந்த டொயோட்டா ஒவ்வொரு நாளும் 13,000 கார்களை உற்பத்தி செய்கிறது.

மின் சமிக்ஞை விளக்குகள்

மின் சமிக்ஞை விளக்குகள்

1927ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள வோல்வர்ஹாம்ப்டன் நகரில் முதன்முதலாக மின்சாரத்தில் இயங்கும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டன.

உண்மையா?

உண்மையா?

கார் ஓட்டும்போது 90 சதவீத பெண்கள் பாட்டு பாடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சூப்பரு...

இது சூப்பரு...

ஜப்பானில் 75 வயதை கடந்தவர்கள் ஓட்டும் கார்களுக்கு பின்னால் பிரத்யேக அடையாள ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டிருக்கும். இதன்மூலம், பின்தொடர்பவர்கள் எளிதாக அடையாளம் கண்டு எச்சரிக்கையாக செல்வதற்காக இந்த விதி கடைபிடிக்கப்படுகிறது.

ஜேம்ஸ்பாண்ட் அவதாரம்

ஜேம்ஸ்பாண்ட் அவதாரம்

தென் ஆப்ரிக்காவில் கார் திருட்டு கும்பல்களின் அட்டகாசத்திலிருந்து தப்பிக்க பிஎம்டபிள்யூ கார்களில் தீப்பிழம்பை கக்கும் கருவியை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

42 வினாடிகளில் ஓர் சாதனை

வெறும் 42 வினாடிகளில் காரின் எஞ்சினை எடுத்து புதிய எஞ்சினை மாற்றியதும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. ஃபோர்டு எஸ்கார்ட் காரில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

Most Read Articles
English summary
Lets us begin by telling you an interesting car fact. The first modern car came into existence in 1886, courtesy of Carl Benz. That was a long time back which means cars have an interesting history, filled with several amazing facts. And we bet you do not know all of them.
Story first published: Friday, October 18, 2013, 15:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X