கப்பல் போக்குவரத்து துறை பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

Written By:

அதிக அளவு சரக்குகளை உலகின் எந்த மூலைக்கும் கொண்டு செல்வதற்கு கப்பல் போக்குவரத்துதான் மலிவானதாகவும், சிறந்ததாகவும் கருத முடியும். வான்வழி, தரை வழி போக்குவரத்தைவிட சரக்குகளை கொண்டு செல்வதற்கு கப்பல் போக்குவரத்து மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகிறது.

உலகின் மிக பழமையான இந்த கப்பல் போக்குவரத்து தாெழிற்துறை உலக பொருளாதாரத்திலும், மக்களின் அத்தியாவசதிய தேவைகளிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில், சரக்கு கப்பல் போக்குவரத்து துறையில் பொதிந்து கிடக்கும் சில சுவாரஸ்யத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

01. நெடிய பயணம்

01. நெடிய பயணம்

ஓர் ஆண்டில் கன்டெய்னர் கப்பல்கள்ப யணிக்கும் தூரம், பூமியிலிருந்து நிலவுக்கான தூரத்தில் நான்கில் மூன்று மடங்காக தெரிவிக்கப்படுகிறது.

02. கப்பலின் விலை மதிப்பு

02. கப்பலின் விலை மதிப்பு

மிகப்பெரிய கப்பல்களை கட்டுவதற்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறதாம்.

3. பெண் பணியாளர்கள்

3. பெண் பணியாளர்கள்

உலக அளவில் கப்பல் பணியாளர்களின் எண்ணிக்கையில் 2 சதவீதம் அளவுக்கே பெண்கள். அதிலும், பெரும்பாலானோர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

04. கடல் கொள்ளையர்கள் அச்சம்

04. கடல் கொள்ளையர்கள் அச்சம்

2010ம் ஆண்டில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் 544 கப்பல் பணியாளர்கள் பணயக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். மேலும், ஆண்டுக்கு 2,000 கப்பல் பணியாளர்கள் பணிக் காலத்தில் இறப்பதாகவும் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

05. தொடர்பு எல்லைக்கு வெளியில்..

05. தொடர்பு எல்லைக்கு வெளியில்..

கடலில் பயணிக்கும்போது கடல் பணியாளர்களில் 10ல் ஒருவர்தான் இணைய தொடர்பில் இருக்கிறாராம். மேலும், மூன்றில் இரண்டு பங்கு பணியாளர்கள் இணைய இணைப்பு இல்லாமல் தொடர்பற்ற நிலையிலேயே பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது.

 06. வாழைப்பழ உதாரணம்

06. வாழைப்பழ உதாரணம்

மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் 745 மில்லியன் வாழைப்பழங்களை வைத்து எடுத்துச் செல்ல முடியும். இதனை 15,000 கன்டெய்னர்களில் அடைத்து எடுத்துச் செல்லும் அளவுக்கு இடவசதி கொண்டது. அதாவது, ஒரு கப்பல் மூலமாக, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழைப்பழம் கொடுத்துவிட முடியுமாம்.

07. தாக்குதல் அபாயம்

07. தாக்குதல் அபாயம்

பூமியிலேயே அதிக வன்முறை நிறைந்த நாடாக கருதப்படும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் வன்முறை சம்பவங்களைவிட, கப்பல் பணியாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாம்.

 08. கப்பல் எண்ணிக்கை

08. கப்பல் எண்ணிக்கை

உலக அளவில் 55,000 பெரிய அளவிலான சரக்கு கப்பல்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

09. பணியாளர்கள்

09. பணியாளர்கள்

உலக அளவில் 1.5 மில்லியன் பேர் சரக்கு கப்பல்களில் பணிபுரிகின்றனர்.

10. அம்மாடியோவ்...

10. அம்மாடியோவ்...

கடந்த 2009ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, உலகின் 15 மிகப்பெரிய கப்பல்கள் வெளியேற்றும் புகை அளவும், 760 மில்லியன் கார்களிலிருந்து வெளியேறும் புகை அளவும் ஒன்றாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு அமெரிக்கர்களிடத்தும் இரண்டு கார்கள் இருப்பதற்கு சமமான அளவு புகை வெளியேற்றப்படுகிறதாம்.

11. இருந்தாலும்...

11. இருந்தாலும்...

பெரிய கப்பல்கள் அதிக அளவு புகையை வெளியேற்றினாலும், விமானம் மற்றும் டிரக்குகளின் புகை வெளியேற்றும் அளவுடன் ஒப்பிடும்போது கப்பல்களிலிருந்து வெளியேறும் புகை அளவு குறைவுதானாம்.

12. ஆய்வு

12. ஆய்வு

உலக அளவில் வெறும் 2 முதல் 10 சதவீத அளவுக்குத்தான் கன்டெய்னர்கள் ஆய்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறதாம். மீதமுள்ள அனைத்தும் ஆய்வு செய்யப்படாமலேயே பரிமாற்றம் செய்யப்படுகிறதாம். துறைமுகத்தில் வெறும் 5 முதல் 17 சதவீத கன்டெய்னர்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

13. முன்னணி நாடுகள்

13. முன்னணி நாடுகள்

சரக்கு கப்பல்களை அதிக அளவில் இயக்கும் நாடுகளில் ஜெர்மனி, ஜப்பான் மற்றும் க்ரீஸ் ஆகிய மூன்று நாடுகளும் உலக அளவில் முன்னணி வகிக்கின்றன.

14. ரகசியம்

14. ரகசியம்

உலகிலேயே மிகவும் ரகசியம் காக்கப்படும் தொழிற்துறை என்றால் அது கப்பல் போக்குவரத்தாகத்தான் இருக்க முடியும். ஆம், க்ரீஸ் நாட்டின் கப்பல் உரிமையாளர் சங்கத்தின் உரிமையாளர்களின் விபரம் கூட வெளியில் தெரியாதவாறு ரகசியம் காக்கப்படுகிறது.

15. இந்த கணத்தில்...

15. இந்த கணத்தில்...

இந்த கணத்தில் உலகம் முழுவதும் 20 மில்லியன் கன்டெய்னர்கள் கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கிறதாம்.

16. சக்தி

16. சக்தி

கன்டெய்னர் ஏற்றிச் செல்லும் கப்பல்களின் எஞ்சின் 1,000 கார்களுக்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

17. கட்டணம்

17. கட்டணம்

கப்பலில் சரக்குகளை அனுப்புவது மிக மலிவானதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சைக்கிளை அனுப்புவதற்கு 10 டாலர்கள் என்ற அளவிலும், குளிர்பான கேன்களை அனுப்புவதற்கு ஒரு சென்ட் அமெரிக்க நாணய மதிப்பிலும் தெரிவிக்கப்படுகிறது.

18. வருவாய்

18. வருவாய்

இங்கிலாந்து நாட்டின் உணவு விற்பனையகங்கள், கட்டுமானத் துறையிலிருந்து கிடைக்கும் வருவாயைவிட, கப்பல் போக்குவரத்து மூலமாக கிடைக்கும் வருவாய் மிக அதிகமாம். அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், உற்பத்தி மதிப்பிலும் கப்பல் போக்குவரத்து துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

19. மற்றொரு உதாரணம்

19. மற்றொரு உதாரணம்

உலக வர்த்தகத்தில் கப்பல் போக்குவரத்து துறை 90 சதவீத பங்களிப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் கொண்டுள்ளதாம்.

0. அப்படியா...

0. அப்படியா...

ஒரு மிகப்பெரிய கப்பலிலிருந்து இறக்கப்படும் கன்டெய்னர்களை டிரக்குகளில் ஏற்றி வரிசையாக நிறுத்தினால், 96 கிமீ தூரத்திற்கு அந்த டிரக்குகள் நிற்குமாம்.

 21. பாதுகாப்பு

21. பாதுகாப்பு

உலகிலேயே பாதுகாப்பு விஷயங்களை கடைப்பிடிப்பதிலும், அமல்படுத்துவதிலும் கப்பல் போக்குவரத்து துறைதான் முதன்மையானதாக தெரிவிக்கப்படுகிறது.

22. எந்தளவு மலிவு தெரியுமா...

22. எந்தளவு மலிவு தெரியுமா...

ஸ்காட்லாந்து நாட்டில் பிடிக்கப்படும் மீன்கள், சீனாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டு, அங்கு சதைப்பகுதி மட்டும் தனியாக வெட்டி எடுத்து திரும்பவும் ஸ்காட்லாந்துக்கு கப்பலில் எடுத்து வரப்படுகின்றன. அந்தளவுக்கு கப்பலில் அனுப்புவது மிகவும் மலிவான போக்குவரத்தாக இருக்கிறது.

23. கப்பல் வகைகள்

23. கப்பல் வகைகள்

மொத்தம் 6 விதமான கப்பல்கள் உள்ளன. சரக்கு கப்பல், கன்டெய்னர் கப்பல், மீன்பிடி கப்பல், பல்க் கேரியர் எனப்படும் பெரிய அளவிலான சரக்குகளை கையாளும் கப்பல், கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் கப்பல் மற்றும் பயணிகள் கப்பல் என்பது பொதுவான 6 வகைகளாக குறிப்பிடப்படுகிறது.

மோட்டார் உலகின் விந்தைகளில் ஒன்று... கப்பல்களையே சுமந்து செல்லும் கப்பல்!!

மோட்டார் உலகின் விந்தைகளில் ஒன்று... கப்பல்களையே சுமந்து செல்லும் கப்பல்!!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Amazing Facts About Shipping Industry.
Story first published: Tuesday, June 14, 2016, 12:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark