அமேசானில் இருந்து டெலிவிரிக்கு இனி வர போகும் வாகனங்கள்!! இந்த விஷயத்தில் ரொம்ப தெளிவா இருக்கு!!

அமேசான் (Amazon) ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தில் டெலிவிரி செய்வதற்காக பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 6,000ஐ கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ந்த நிறுவனமாக மாறிவரும் அமேசான் தனது எதிர்கால திட்டங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் 6,000க்கும் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்கள் தங்களது டெலிவிரி பணிகளில் உள்ளதாக அமேசான் நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 28) அறிவித்துள்ளது. உலகளவில் பல்வேறு நாடுகளில் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளமாக விளங்கும் அமேசான் பிளாட்ஃபாரத்தின் வாயிலாக இந்தியாவில் 400க்கும் அதிகமான நகரங்களில் பொருட்கள் டோர்-ஸ்டெப் டெலிவிரி செய்யப்பட்டு வருகின்றன.

amazon electric delivery fleet vehicles

வருகிற 2025ஆம் ஆண்டிற்கு உள்ளாக டெலிவிரி பணிகளுக்காக பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக அதிகரிக்கும் முனைப்பில் அமேசான் உள்ளது. இதற்காக டெலிவிரி சேவையை வழங்கும் தனது பார்ட்னர் நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து வரும் அமேசான் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் தீர்வுகள் மூலம் டெலிவிரி முறைகளை எவ்வாறு எல்லாம் மாற்ற முடியும் என்பதையும் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

பொருட்களை டெலிவிரி செய்யும் வாகனங்களின் அளவையும், டெலிவிரி செய்யும் வேகத்தையும் அதிகரிக்கும் பொருட்டு பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உடனும் அமேசான் கூட்டணி சேர்ந்துள்ளது. இவ்வளவு ஏன், சில ஸ்டார்ட்-அப், அதாவது துவங்கப்பட்டு சில காலமே ஆன நிறுவனங்களுடனும் கூட அமேசான் இந்த கூட்டணியை கொண்டுள்ளது. டெலிவிரி போக்குவரத்து தீர்வுகளை புதியது புதியதாக கண்டுப்பிடிக்க வேண்டும் என்பதுதான் இந்த கூட்டணியின் சாரம்சமே.

amazon electric delivery fleet vehicles

இந்த வகையில் அல்டிகிரீன் என்ற பெங்களூரை சேர்ந்த எலக்ட்ரிக் 3-வீலர் நிறுவனத்துடன் அமேசான் கூட்டணியில் உள்ளது. அல்டிகிரீன் நிறுவனத்திடம் 100கிமீ ரேஞ்ச்சை கொண்ட நேஇவி என்ற எலக்ட்ரிக் 3-வீலர் விற்பனையில் உள்ளது. இதன் கார்கோ பகுதியானது 177 கன அடி அளவில் உள்ளது. இந்த எலக்ட்ரிக் 3-வீலர் மூலமாக, டெலிவிரி பணிகளில் பயன்படுத்தும் டீசல் வேன்களை பயன்பாட்டில் இருந்து அகற்ற அமேசான் திட்டமிட்டுள்ளது.

இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஏஸ் 4-வீலர் இவி-ஐயும் அமேசான் பயன்படுத்தி வருகிறது. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 120கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடிய இந்த டாடா கமர்ஷியல் எலக்ட்ரிக் வாகனத்தின் கார்கோ பகுதி 210 கன அடி ஆகும். அமேசானின் டெலிவிரி பணிகளில் உள்ள டீசல் வேன்களுடன் ஒப்பிடுகையில், டாடா ஏஸ் எலக்ட்ரிக் வாகனத்தை இயக்குவதற்கு ஆகும் செலவுகள் மிகவும் குறைவு ஆகும்.

amazon electric delivery fleet vehicles

கடந்த சில வருடங்களில், ஈச்சர் லாரிகள் & பேருந்துகள், அல்டிக்ரீன், மஹிந்திரா எலக்ட்ரிக், டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ், மகேந்தா மொபைலிட்டி, சன் மொபைலிட்டி என பல்வேறு நிறுவனங்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதிலும், அவற்றிற்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதிலும், நிதி சேவைகளை வழங்குவதிலும் அமேசான் உதவி உள்ளது. இந்த உதவிகள் மூலமாக அமேசான் நிறுவனம் அதன் டெலிவிரி சேவைகளில் கார்பன் மாசு உமிழ்வை குறைக்க உறுதிக் கொண்டுள்ளது.

அதேபோல், ஆற்றல் உள்கட்டமைப்பு மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து எலக்ட்ரிக் லாரிகளுக்கு மாற விரும்பும் டிரான்ஸ்போர்ட்டர்களுக்கு உதவவும் அமேசான் முன்வந்துள்ளது. அத்துடன், கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட 'சூன்யா' என்ற பூஜ்ஜிய-மாசு மொபைலிட்டி திட்டத்திலும் அமேசான் பார்ட்னராக உள்ளது. நகர்புற டெலிவிரி பணிகளிலும், டாக்ஸி சேவைகளிலும் பூஜ்ஜிய-மாசு உமிழ்வு வாகனங்களை கொண்டுவருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகமே மெல்ல மெல்ல எலக்ட்ரிக் நோக்கி நகர்ந்து வருகிறது. இதில் அமேசான் மட்டும் என்ன விதிவிலக்கா. அமேசான் போன்ற நிறுவனங்களின் வாகனங்கள் எலக்ட்ரிக்காக இருப்பது மிகவும் அவசியமானது. ஏனெனில் இவற்றின் டெலிவிரி வாகனங்கள் தினந்தோறும் பல கிமீ-களுக்கு பயணிக்கின்றன. இருப்பினும், இப்போதே 6,000க்கும் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்கள் அமேசானின் டெலிவிரி பணிகளில் இருப்பது ஆச்சிரியமளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, August 28, 2023, 19:50 [IST]
English summary
Amazon has more than 6000 electric delivery fleet vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X