இந்த கேமரா மட்டும் இருந்துச்சு உங்க கார் பக்கத்துலகூட யாராலும் நெருங்க முடியாது! இது ப்யூர் அமேசான் தயாரிப்பு!
கார் திருட்டை தடுக்கும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கார் டேஷ்போர்டு கேமிராவை அமேசான் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. இதன் விலை மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ரிங் கார் கேம்
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் கார்களுக்கான டேஷ்போர்டு கேமிராவை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமேசானின் இந்த கேமிரா 'ரிங் கார் கேம்' (Ring Car Cam) என அழைக்கப்படும். இந்த பெயர் கொண்ட கேமிராவையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸில் 2023 சிஇஎஸ் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது ஓர் உலக புகழ்பெற்ற கண்காட்சி நிகழ்ச்சி ஆகும்.

மோஷன் டிடெக்சன் அம்சம்
இங்கு வைத்தே அமேசான் அதன் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கேமிராவை அறிமுகம் செய்துள்ளது. பார்க்க மிகவும் சாதாரணமாக, வழக்கமான கார் டேஷ்போர்டு கேமிராவைக் காட்சியளிக்கும் இது, உண்மையில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியதாக இருக்கின்றது. மோஷன் டிடெக்சன் சென்சார் போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதியே இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. கார் திருட்டை தவிர்க்கும் பொருட்டு இதுபோன்ற அம்சங்கள் காரில் வழங்கப்பட்டுள்ளன.
திருட்டுல இருந்து காக்கும்
உலகளவில் கார் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மிக பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள்கூட அசால்டாக களவு செய்யப்பட்டு விடுகின்றன. இத்தகைய அவல நிலையை தவிர்க்க அமேசானின் இந்த கார் டேஷ்போர்டு கேமிரா மிகுந்த உதவியாக இருக்கும். அமேசான் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டில் ரிங் என்கிற புகழ்பெற்ற மின்சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை கையப்படுத்தியது. செக்யூரிட்டி கேமிராக்களை உருவாக்குவதில் புகழ்பெற்றதே இந்த ரிங் நிறுவனம்.

ரிங் நிறுவனம் கையகப்படுத்துதல்
இதை கையகப்படுத்தியதை அடுத்து வாகனங்களின் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கேமிராவே இந்த ரிங் கார் கேம் ஆகும். இதனை 2020 ஆண் ஆண்டிலேயே நிறுவனம் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும் இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போதே அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த கேமிராவை செயலி வாயிலாக செல்போன் உடன் இணைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு இணைக்கும்பட்சத்தில் செல்போனிலேயே காரை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை நம்மால் நோட்ட முடியும்.
இதுமட்டும் இல்லைங்க, காரை திருடும் நோக்கில் யாரேனும் கை வைத்தால் அதுகுறித்த தகவலையும் நமக்கு உடனடியாக இந்த கேமிரா வழங்கும். இதுகுறித்த எச்சரிக்கைகளை செயலியே வாயிலாகவே அது வழங்கும். காரில் இருக்கும் ஓபிடி II போர்ட்டில் இணைக்கும் பட்சத்தில் இன்னும் பல்வேறு சிறப்புகளை இந்த கேமிரா வழங்குமாம். சுமார் 7 மணி நேரம் தொடர்ச்சியாக ரெக்கார்டு செய்யும் திறனைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸா அம்சம்
ஒய்-ஃபை வாயிலாக இந்த காட்சிகளை செல்போனில் பார்த்துக் கொள்ள முடியும். எல்டிஇ நெட்வொர்க்கை அக்செஸ் செய்ய மாதத்திற்கு 6 அமெரிக்க டாலர்கள் அல்லது வருடத்திற்கு 60 அமெரிக்க டாலர்கள் எனும் பிளானையும் ரிங் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதை பெறும்பட்சத்தில் தனியாக கேமிராவை இணைக்க ஒய்-ஃபை இணைப்பு தேவைப்படாது. மேலும், தானாகவே அனைத்து தரவுகளும் கிளவுட் அக்கவுண்டில் சேகரிக்கப்படும். இந்த கேமிராவில் அலெக்ஸா அம்சமும் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
எப்போது விற்பனைக்கு கிடைக்கும்
தேவைப்படும்போது உடனடி பதிவைத் தொடங்க இது உதவியாக இருக்கும். இத்தகைய சூப்பரான கார் டேஷ் கேமிராவையே அமேசான் நிறுவனம் ரிங் நிறுவனத்தின் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்கு பின்னர் இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த கால தாமதத்திற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து ரிங் கார் கேம் கேமிரா உலகம் முழுவதிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை விபரம்
ஆனால், இந்தியாவில் இது விற்பனைக்குக் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இந்த கேமிராவிற்கு 250 அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே இதை புக் செய்பவர்களுக்கு 200 அமெரிக்க டாலர்களுக்கு விற்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வியாழன் முதல் புக்கிங் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அமெரிக்காவிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கும். இதன் பின்னரே ஒவ்வொரு உலக நாடுகளாக கார் டேஷ் கேமிரா விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications