இது அவர்களின் 3வது 10 கோடி ரூபா கார்! என்னங்க வீட்டுக்கு பூந்தொட்டி வாங்குற மாதிரி இந்த காரை வாங்கறாங்க!
உலகின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்டு (Mercedes-Guard S680) இருக்கின்றது. இந்த மாடலின் ஒற்றை யூனிட்டே ரூ. 10 கோடிக்கும் அதிகம் ஆகும். இத்தகைய மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரையே இந்தியாவைச் சேர்ந்த கோடீஸ்வர குடும்பம் வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்கள் வேறும் யாரும் இல்லைங்க, முகேஷ் அம்பானி குடும்பத்தினர்தான் அவர்கள். இவர்களிடத்தில் ஏற்கனவே இதே கார் மாடலின் இரண்டு யூனிட்டுகள் பயன்பாட்டில் இருக்கின்ற நிலையில், மேலும் ஒரு யூனிட்டை அவர்கள் புதிதாக வாங்கி இருக்கின்றனர். பாதுகாப்பான பயணத்தை தனது குடும்பத்தினருக்கு உறுதிப்படுத்தும் நோக்கிலேயே மூன்றாவதாக மீண்டும் அதே கார் மாடல் வாங்கப்பட்டு இருக்கின்றது.

இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகம். இதன் காரணத்தினாலேயே அவருக்கு அரசு சார்பில் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. ஓர் மாநிலத்தின் முதல்வருக்கு வழங்கப்டும் பாதுகாப்பு வளையம் இது ஆகும். இத்தகைய ஓர் பாதுகாப்பு வளையமே முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழங்கப்படுகின்றது.
இதன் உடன் சேர்த்து கூடுதல் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக அதி நவீன மற்றும் அதீத பாதுகாப்பு வசதிக் கொண்ட கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே மூன்றாவதாக ஓர் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்டு கார் வாங்கப்பட்டு இருக்கின்றது.
பெயருக்கு ஏற்ப இதன் பாதுகாப்பு திறனும் மிக மிக அதிகம் ஆகும். துப்பாக்கி தோட்டாக்களின் தாக்கத்தையே தாங்கிக் கொள்ளும் திறன் இந்த காருக்கு உண்டு. அதுமட்டுமில்லைங்க, கையெறி குண்டுகளை இந்த கார் மீது வீசினால்கூட அந்த கார் தாங்கிக் கொள்ளும் என கூறப்படுகின்றது.
இத்தகைய தனித்துவமான பாதுகாப்பு வசதியைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே மெர்சிடிஸ் பென்ஸ் குவார்டு எஸ்680 சொகுசு காரை அவர்கள் மீண்டும் மீண்டும் என வாங்கிக் கொண்டிருக்கின்றனர். புதிய மெர்சிடிஸ் பென்ஸ் குவார்டு எஸ்680 கலஹரி கோல்டு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், அதில் 9999 எனும் பதிவெண் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எண்ணை வாங்கவே அவர் பல லட்சம் ரூபாயை செலவழித்திருக்கின்றார் என கூறப்படுகின்றது. இந்த பதிவெண்தான் வேண்டும் என் கேட்டதன் காரணத்தினால் ஆர்டிஓ அவருக்கென புதிய சீரிஸை திறந்து அதன் கீழே அந்த எண்ணை வழங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக வாங்கப்பட்ட எஸ்600 குவார்டு கார் மாடல்களில் 333 மற்றும் 999 என்கிற பதிவெண் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த இரண்டும் முந்தைய தலைமுறை வெர்ஷன்கள் ஆகும். மேலும், அவை சில்வர் நிறத்தைக் கொண்டவை ஆகும். தற்போது வாங்கப்பட்டு இருப்பது புதிய தலைமுறை வெர்ஷன் என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னதாகக் கூறியதைப் போல் இந்த கார் கலஹரி கோல்டு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸில் மட்டும் ஒட்டுமொத்தமாக அவர்களிடத்தில் ஏற்கனவே 9 கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றிலேயே பத்தாவதாக மெர்சிடிஸ் பென்ஸ் குவார்டு எஸ்680 களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓற் விஆர்10 வகை பாதுகாப்பு திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 15 கிலோ டிஎன்டி 2 மீட்டர் இடைவெளியில் வெடித்தால்கூட அதன் தாக்கத்தை இந்த கார் தாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது.
எஞ்ஜினை பொருத்த வரை ட்வின் டர்போசார்ஜட் 6.0 லிட்டர் வி12 எஞ்ஜினே இந்த பென்ஸ் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 612 எச்பி பவரையும், 830 என்எம் டார்க்கையும் வெளியற்றும். இதன் டயர்கள் அவ்வளவு எளிதில் பஞ்சராகது என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அம்பானி குடும்பத்தினரிடத்தில் இல்லாத கார்களே இருக்க முடியாது என கூறிவிட முடியும். அந்த அளவிற்கு அவரிடத்தில் ஏகப்பட்ட அரிய வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும், இவர் தன்னுடைய கார்களை நிறுத்துவதற்கு என்றே அன்டிலியா இல்லத்தில் தனி தளங்களை உருவாக்கி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications