ஒரே நேரத்தில் வந்த ரெண்டு 10 கோடி ரூபா கார்.. சொந்த நாட்டிலேயே இப்படி கெத்து காட்டுறாங்களே!
உலகின் மிக மிக விலை உயர்ந்த மற்றும் பாதுகாப்பு திறன் மிக்க கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்டு (Mercedes S680 Guard) இருக்கின்றது. இது ஓர் செடான் ரக காராகும். பார்க்க பெரிய அளவில் கவர்ச்சியான தோற்றத்தில் இந்த கார் இல்லை என்றாலும், அதன் ஒற்றை யூனிட்டே இந்தியாவில் ரூ. 10 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.
இத்தகைய மிக மிக உயரிய விலையை இந்த கார் கொண்டிருப்பதற்கு வேறொரு காரணம் உள்ளது. இந்த கார், தூப்பாக்கிகள் குண்டு மழையயே பொழிந்தாலும் தாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது. இதுபோன்று ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் தாங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால்தான், யரும் எதிர்பார்த்திராத அதிக விலையை அக்கார் கொண்டிருக்கின்றது.

இத்தகைய மிக மிக உயர்ந்த விலைக் கொண்ட காரையே இந்தியாவின் பெரும் பணக்கார குடும்பம் ஒன்று ஒன்றுக்கும் மேற்பட்ட யூனிட்டுகளை பயன்படுத்தி வருகின்றது. அது வேறு எந்த குடும்பமும் இல்லைங்க, அம்பானி குடும்பத்தினர்தான் அது. மேலும், அவர்களிடத்தில் இதே கார் மாடல் ஒட்டுமொத்தமாக 3 யூனிட்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
மிக மிக அதிக பாதுகாப்பு வசதிக் கொண்டது என்கிற ஒரே காரணத்தினாலேயே இந்த காரை அம்பானி குடும்பத்தினர் வாங்கிக் குவித்துக் கொண்டு இருக்கின்றனர். அதில், இரண்டிலேயே சமீபத்தில் அவர்கள் பயணித்தும் இருக்கின்றனர். இது பற்றிய வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

முகேஷ் அம்பானி, அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோரே அந்த காரில் புறப்பட்டு இருக்கின்றனர். இரண்டு மெர்சிடிஸ் எஸ் 680 குவார்டு மற்றும் பென்ட்லீ என மூன்று கார்களும் இருந்த நிலையில், அவர்கள் ஒரே கார்களில் பயணித்திருக்கின்றனர். இந்த காரின் பாதுகாப்பு திறன் என்பது நம் அனைவரையும் மெய்சிலிர்க்க செய்யும் வகையில் இருக்கின்றது.
இந்த காரை ஓர் நபர் துப்பாக்கியால் சரமாரியாக தாக்கினாலும்கூட சிறு கீரல்கூட அந்த காருக்கு ஏற்படாது. துப்பாக்கி குண்டுகள் மட்டுமல்ல கையெறி குண்டுகளின் தாக்கத்தால் கூட இந்த காரை எதுவும் செய்ய முடியாது. இதேபோல், மிக அருகாமையில் டிஎன்டி வெடி பொருள் வெடித்தால்கூட அந்த காருக்கு எதுவுமே ஆகாது. இதற்கேற்ப இந்த காரின் உடல் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
துப்பாக்கியின் தோட்டக்களின் தாக்கத்தை தாங்கும் திறன் கொண்ட கண்ணாடிகளும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற தனித்துவமான பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே அதன் ஒட்டுமொத்த எடையே 2 டன்களாக இருக்கின்றது. இந்த காரின் ஒரே ஒரு கதவின் எடையே 250 கிலோ ஆகும்.
அதிக உறுதித் தன்மையின் காரணத்தினாலேயே இத்தகைய அதிக எடையை அக்கார் தாங்கி இருக்கின்றது. இந்த காரின் டயரும் தனித்துவமான வசதிக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. துப்பாக்கி தோட்டக்கள் இந்த காரின் டயரை தாக்கினால்கூட அதனால் காரை பாதிப்புகளின் இன்றி சீராக இயக்க முடியும். மணிக்கு 80 வேகத்தில் அது இயங்கும்.
மேலும், இந்த காரை சுற்றிலும் தீ கொழுந்துவிட்டு எறிந்தாலும் அதனால் பாதிப்பு இன்றி பயணிக்க முடியும் என நிறுவனம் கூறுகின்றது. மேலும், விஷய வாயு போன்ற தாக்குதல்களில் இருந்தும் இந்த கார் அதன் பயணிகளை பாதுகாக்குமாம். இதுமாதிரியான ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகளை மெர்சிடிஸ் எஸ்680 குவார்டு தாங்கி இருக்கின்றது.
இதன் காரணத்தினாலேயே அதிகளவில் அந்த காரை அம்பானி குடும்பத்தினர் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதாவது ஒட்டுமொத்தமாக மூன்று யூனிட்டு எஸ்680 குவார்டு கார்களை அவர்கள் வைத்திருக்கின்றனர். இந்த காரில் 6.0 லிட்டர் வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 612 பிஎஸ் மற்றும் 830 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார குடும்பமான அம்பானி குடும்பத்திடம் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்கள் பயன்பாட்டில் உள்ளன. அவர்களின் மும்பை அன்டிலியா இல்லத்தில் கார்களுக்கு என்றே பிரத்யேகமாக தனி பார்க்கிங் தளம் கட்டப்பட்டு இருக்கின்றது. சுமார் 168 கார்கள் தற்போது அந்த தளத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








