விநாயகர் சிலை கரைப்பதை நேரில் பார்க்க சொகுசு கார் படையையே பீச்சுக்குள் விட்ட பணக்கார குடும்பம்!

அண்மையில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர விமானத்தை டெலிவரி பெற்ற முகேஷ் அம்பானி குடும்பத்தினரே பெரும் சொகுசு கார்கள் படையுடன் விநாயகர் சிலை கரைப்பதை பார்க்க கடற்கரைக்கு வந்திருக்கின்றனர். பொதுவாக கடற்கரைக்குள் நுழைய எந்தவொரு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படாது. ஆனால், முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு கருதி அனைத்து கார்களும் கடற்கரைக்குள் அனுமதிக்கப்பட்டதாக தெரிகின்றது. மேலும், அவர்கள் தனி சொகுசு படகு வாயிலாக கடற்கரைக்கு உள்ளே சென்று விநாயகர் சிலை கரைப்பைக் கண்டிருக்கின்றனர். ஸ்பீடு போட்-டையே அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.

இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) மற்றும் ஆறு மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG) சொகுசு கார்களையே அவர்கள் இதற்காக பயன்படுத்தி இருக்கின்றனர். இதில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் மட்டுமே அம்பானி குடும்பத்தினர் பயணிக்க பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Ambanis luxurious arrival at ganesh visarjan

மற்ற ஆறு மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் அவர்களின் பாதுகாப்பிற்காக வாகன கன்வாயில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதாவது, பாதுகாப்பு அதிகாரிகள் பயணிக்கவே இந்த விலை உயர்ந்த கார் மாடல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2.45 கோடிக்கும் அதிகம் ஆகும்.

இத்தகைய அதிக விலைக் கொண்ட காரையே அம்பானி குடும்பத்தினர் தங்களின் பாதுகாப்பு வாகனங்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பிற்காக பயன்படுத்துகின்ற கார்-தானே இது என லேசாக எடை போட்டுவிட வேண்டாம். திறனை வெளிப்படுத்துவதிலும், சொகுசு வசதியிலும் மற்றும் கவர்ச்சியான தோற்றத்திற்கும் உகந்த காராக இது காட்சியளிக்கின்றது.

இதனால்தான் பாலிவுட் திரையுலகினரின் பிரியமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. அம்பானி பயன்படுத்தும் அனைத்து மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார்களும் சீருடை அணிந்ததை போல வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த ஆடம்பர காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இது அதிகபட்சமாக 576 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைப் போலவே அதிக ஆற்றல் மற்றும் சொகுசு விஷயத்தில் உல்லாச கப்பல் போன்ற ஓர் கார் மாடலகவே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் இருக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ்-இன் இந்த ஒரு கார் மாடல் மட்டுமே அம்பானி குடும்பத்தினரிடத்தில் ஒட்டுமொத்தமாக 9 யூனிட்டுகள் இருக்கின்றன. இது 5 சீட்டர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதில் ஒன்று டஸ்கன் சன் (Tuscan Sun) எனும் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. அந்த நிற வேலையின் மதிப்பு மட்டுமே ரூ. 1 கோடி என கூறப்படுகின்றது.

இதுதவிர, 0001 எனும் விஐபி பதிவெண், கூடுதல் சிறப்பம்சங்கள் ஆகியவற்றாலும் அந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினை பொருத்த வரை இந்த காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 600 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுமாதிரியான ஆற்றலை வெளியேற்றும் சொகுசு கார்களிலேயே அம்பானி குடும்பத்தினர் பீச்சுக்கு பிள்ளையார் சிலையை கரைப்பதைக் காண வந்திருக்கின்றனர். மேலும், அங்கு விநாயகர் சிலையை பார்க்க வந்த கூட்டம் அனைத்தும் திசை திரும்பி, அம்பானி குடும்பத்தினர் வந்த கார்களை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

இதனால், அந்த கார்களைச் சுற்றிலும் பெரும் கூட்டம் அங்கு காணப்பட்டது. முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடத்தில் மேலே பார்த் இந்த ஆடம்பர கார்கள் மட்டுமல்ல இன்னும் பல சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக, சமீபத்திய சேர்ப்புடன் சேர்த்து 10 விமானங்களும் அவர்களிடத்தில் பயன்பாட்டில் உள்ளன என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 19, 2024, 16:14 [IST]
English summary
Ambani familys luxurious arrival at ganesh visarjan with rolls royce and mercedes
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+