அம்பானிக்காக மேற்கூரையை இழந்த காஸ்ட்லியான கார்.. கூரையை இழந்ததால அது என்ன காருனே தெரியாம போச்சு!
அம்பானிக்காகவும், அவரின் குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காகவும் ஓர் காஸ்ட்லி கார் அதன் மேற்கூரையை இழந்திருக்கின்றது. என்ன கார் மாடல் என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கே மேற்கூரையை இழந்ததால் அந்த கார் மாறியிருக்கின்றது. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) கார் மாடலையே அவர்கள் இவ்வாறு மாற்றியிருக்கின்றனர். இந்தியர்கள் பலரின் கனவு வாகனமாக இருக்கும் ஓர் கார் மாடலே லேண்ட் ரோவர் டிஃபெண்டர். சொல்லப்போனால் இந்திய பணக்காரர்கள் பலரின் மனம் கவர்ந்த ஆடம்பர கார் மாடலாகவும் இது உள்ளது.
ஏன், நம் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்கூட இந்த ஆடம்பர கார் மாடலையே பயன்படுத்தி வருகின்றார். இத்தகைய புகழ்பெற்ற கார் மாடலையே அம்பானி குடும்பத்தினருக்காக அதன் மேற்கூரையை வெட்டி எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்கூரையை இழந்த கார் சாலையில் ஃபிளாட் பெட் வாகனத்தில் செல்லும் காட்சிகளே தற்போது வெளியாகி உள்ளன.

சஃபாரி செல்லும் நோக்கிலேயே இவ்வாறு அந்த ஆடம்பர காரை மாற்றியிருக்கின்றனர். ரிலையன்ஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமாக வந்தாரா எனும் மாபெரும் விலங்கு காப்பகம் குஜராத்தின் ஜாம்நகரில் செயல்பட்டு வருகின்றது. ஆனந்த் அம்பானியே இதை தொடங்கி வைத்தார். வனவிலங்கு மற்றும் அழிந்து வரும் விலங்களுக்கு ஓர் வாழ்விடமாக இது மாறியிருக்கின்றது.
குறிப்பாக, காயமடைந்து விலங்குகளின் சரணாலயம் இது என்றும் கூறப்படுகின்றது. இதில் சஃபாரி நோக்கிலேயே அம்பானி குடும்பத்தினர் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை இப்படி மாற்றியிருப்பார்கள் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகவில்லை. சஃபாரி காராக மாறியிருக்கும் லேண்ட் ரோவர் டிஃபெண்டரில் அமர்ந்து சுற்றி வரும்போது 360 டிகிரி பார்வை திறனை பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்காகவே மேற்கூரை மற்றும் மற்றும் ஜன்னல்களும் அகற்றப்பட்டு இருக்கின்றன. அதெல்லாம் இருக்கட்டும் இந்த காரை ஏன் இப்படி மாற்ற வேண்டும்? அதற்கென்ன? அவசியம் என நீங்கள் கேட்கலாம். டிஃபெண்டர் காரில் இந்தியாவின் கரடு-முரடான சாலையை சமாளிப்பதற்கான அம்சங்கள் பல வழங்கப்பட்டு இருக்கின்றன.
அதாவது, ஆஃப் ரோடு பயணங்களுக்கு உகந்த கார் மாடலாக இது உள்ளது. இதில், காடுகள் போன்ற பகுதிகளில் பயணிக்கும்போதும் மிகவும் சொகுசான டிராவல் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த திறனைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அம்பானி குடும்பத்தினர் டிஃபெண்டரை சஃபாரி வாகனமாக மாற்றியிருப்பார்கள் என யூகிக்கப்படுகின்றது.
டிஃபெண்டர் கார் மாடலின் 110 மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் டீசல் உள்ளிட்ட மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் எந்த எஞ்சினைக் கொண்ட வெர்ஷனை இப்படி மாற்றியிருக்கின்றார் என்பது தெரியவில்லை. இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 1.03 கோடி ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 1.57 கோடி ஆகும்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. விலைக்கு ஏற்ப ஆடம்பர மற்றும் பிரீமியம் அம்சங்களை மிக மிக தாராளமாக இந்த கார் மாடல் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அம்பானி குடும்பத்தினருக்கு மாடிஃபை செய்யப்படும் முதல் கார் மாடல் இது அல்ல.
சமீபத்தில்கூட அம்பானியின் பயன்பாட்டிற்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல் ஒன்று புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்டதாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இது அரங்கேறி சில மாதங்களே ஆகின்றன. இந்த நிலையிலேயே மற்றுமொரு காஸ்ட்லியான காரை சஃபாரி வாகனமாக மாற்றி வாகன உலகின் தலைப்பு செய்தியில் அம்பானி குடும்பம் மீண்டும் இடம் பிடித்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் ஆடம்பர கார்களை பயன்படுத்தி வரும் குடும்பமாக முகேஷ் அம்பானி குடும்பம் உள்ளது. இவர்கள் தங்களின் செக்யூரிட்டி பயன்பாட்டிற்காகவே மிக அதிக அளவில் ஆடம்பர கார்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கு அவர்களின் கான்வாயே சான்று.


Click it and Unblock the Notifications








