சாலையில் அதிக வேகமாக சீறி பாய்ந்த 4.5 கோடி ரூபா ஃபெர்ராரி கார்... என்ன சொல்றீங்க இந்த காரும் அவருடையதா!..

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, வீட்டுக்கு அழகு சேர்க்கும் விதமாக பூந்தொட்டிகளை வாங்கிக் கொண்டிருப்பதைப் போல, விலை உயர்ந்த கார்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றார். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் சிறுவர்களுக்கு நாம் விளையாட்டு காரை வாங்கிக் கொடுப்பதைப் போல, அவர் கார்களை யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு அதிக அளவில் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றார்.

ஏற்கனவே அவரிடத்தில் நுற்றுக் கணக்கான ஆடம்பர கார்கள் இருப்பதாக கூறப்படும்நிலையில், தற்போது மற்றுமொரு அரிய வகை கார் மாடலையும் முகேஷ் அம்பானி வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபெர்ராரி ரோமா (Ferrari Roma) எனும் சூப்பர்கார் வகையையே அவர் வாங்கி இருக்கின்றார்.

Ambani buys new ferrari roma

இந்த கார் மாடலின் ஒற்றை யூனிட்டின் இந்திய மதிப்பு மட்டுமே ரூ. 4.5 கோடி ஆகும். பாதுகாவலுக்கான கார் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி-வேகன் (Mercedes-AMG G-Wagen) காரைத் தொடர்ந்து இந்த காரில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பயணிக்கும் காட்சிகளே தற்போது வெளியாகி உள்ளன.

ஃபெர்ராரி நிறுவனம், இந்த ரோமா காரை 2021 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியது. ஆனால், இப்போதே இந்தியர்கள் இந்த காரை ஆர்வமுடன் வாங்கத் தொடங்கி இருக்கின்றனர். மிக முக்கியமாக சொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் இந்த காரை நடப்பாண்டின் தொடக்கத்தில் வாங்கி இருந்தார்.

Ambani new ferrari roma

இவரைப் போல இன்னும் சொற்பமான அளவிலேயே இந்தியாவில் இந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், இதன் அதிக விலைக் காரணமாக விரல் விட்டு எண்ணும் அளவிற்கு ஃபெர்ராரி ரோமா காரை பயன்படுத்துவோர் இந்தியாவில் இருக்கின்றனர். மிகவும் கவர்ச்சிகரமான கார் மாடலாக ஃபெர்ராரி ரோமா இருக்கின்றது.

இதன் அழகிய தோற்றத்திற்கு கூடுதல் பிளஸ்ஸாக இருக்கும் விதமாக கிடைமட்டமான தோற்றம் கொண்ட எல்இடிஆர்எல்களுடன் கூடிய அடாப்டீவ் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், சுறா மூக்கு வடிவிலான முகப்பு பகுதி, நான்கு எல்இடி டெயில் லைட், மூன்று விதமான மோட்களில் இயங்கக் கூடிய ஸ்பாய்லர் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Benz security car

இவையனைத்தும் காரின் திறனையும், கவர்ச்சியையும் கூட்டும் வகையில் இருக்கின்றன. இதுதவிர, காருக்குள் 16 அங்குல முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், மூன்று ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் வீல், கன்சோலின் மையப்பகுதியில் தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பயணிகளுக்கான தனி திரை உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த டச் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 8.4 அங்குலம் கொண்டது ஆகும். இது டேப் வகையில் இருக்கும். இந்த அம்சங்களால் காரின் உட்பகுதி சொகுசு வசதிக்கு மட்டுமல்ல தொழில்நுட்ப அம்சத்திலும் சிறந்தது என்பது தெரிய வந்திருக்கின்றது. ஃபெராரி ரோமா காரில் 3.9 லிட்டர் டர்போசார்ஜட் வி8 எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Ferrari roma super car

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 612 பிஎச்பி மற்றும் 760 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிமீ ஆகும். மேலும், இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 3.4 செகண்டுகளே போதுமானதாக இருக்கின்றது.

இதேபோல், மணிக்கு 200 கிமீ வேகத்தை 9.3 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லும் காரையே தற்போது தன்னுடைய கராஜில் சேர்த்து இருக்கின்றார், முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானி இடத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட சூப்பர் கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

ரூ. 5.5 கோடி மதிப்புள்ள ஃபெர்ராரி 812 சூப்பர் ஃபாஸ்ட், மெக்லாரன் 570எஸ், லம்போர்கினி அவென்டேட்டார் எஸ் ரோட்ஸ்டர், ஃபெர்ராரி 488 ஜிடிபி, அஸ்டன் மார்ட்டின் டிபி11 மற்றும் பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் கார் என இவரிடம் இருக்கும் சூப்பர் கார்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அதிக கார் கலெக்சனை அம்பானியும், அவரது குடும்பத்தினரும் வைத்திருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அம்பானி குடும்பத்தினர் சமீபத்திலேயே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார் மாடலான எஸ்680 குவார்டு காரையே வாங்கினார். இதன் ஒற்றை யூனிட்டின் விலையே ரூ.10கோடிக்கும் அதிகமாகும். இது அதிக பாதுகாப்பான கார் மாடலாகும். துப்பாக்கி தோட்டா அல்லது குண்டு மழையே பொழிந்தாலும் இந்த கார் அதற்குள் இருப்பவர்களை பாதுகாக்கும். இத்தகைய கார் கொள்முதலைத் தொடர்ந்தே தற்போது ஃபெர்ராரி ரோமாவையும் அவர் வாங்கி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 3, 2023, 17:56 [IST]
English summary
Ambani s new ferrari roma spotted on road
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X