Z+ பாதுகாப்பு போதாதாம்.. ரோல்ஸ் ராய்ஸ் காரை புல்லட்ப்ரூஃப் காரா மாத்திட்டாரு! அவரு நமக்கு தெரிஞ்சவருதான்!

உலகின் மிகவும் காஸ்ட்லியான கார் மாடல்களில் ஒன்றாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதன் ஒரு யூனிட் மட்டுமே ரூ. 10 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இந்த விலை ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய அதீத விலைக் கொண்ட கார் மாடலையே இந்தியாவின் பெரும் செல்வந்தர் ஒருவர் புல்லட் ப்ரூஃப் (Bullet-Proof) வசதியுடன் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆசியாவின் பெரும் செல்வந்தரா முகேஷ் அம்பானியே இந்த காரை வாங்கியவர் ஆவார். இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் சொகுசு காரை பயன்படுத்தி வரும் பணக்காரராக முகேஷ் அம்பானி காட்சியளிக்கின்றார். இவரிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் மாடல் மட்டுமே 10 யூனிட்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

Bulletproof rolls-royce cullinan

ஆகையால், இந்தியாவிலேயே அதிக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை பயன்படுத்தும் இந்தியாராகவும் முகேஷ் அம்பானி காட்சியளிக்கின்றார். இதுதவிர, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளும் அவரிடத்தில் மிக அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டில் இருக்கின்றன. இதுமட்டுமல்ல மற்ற உலக புகழ்பெற்ற சொகுசு கார் பிராண்டுகளின் தயாரிப்பையும் மிக அதிக எண்ணிக்கையில் அம்பானி குடும்பத்தினர் நாட்டில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே இந்தியாவில் யாரிடமும் இல்லாத வகையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் மாடலை இவர் புல்லட் ப்ரூஃப் வசதி உடன் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில், புதிதாக வாங்கப்பட்ட கல்லினன் கார் மாடலா அல்லது அவரிடத்தில் ஏற்கனவே இருக்கும் கல்லின் கார் மாடல் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கின்றதா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

Ambanis add bulletproof rolls-royce cullinan

இருப்பினும், சண்டிகரில் உள்ள ஓர் கார் ஒர்க்ஷாப்பில் இந்த கார் புல்லட் ப்ரூஃபாக மாற்றப்படுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறி சில படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அது ஏற்கனவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது.

ஆகையால், ஏற்கனவே அவரிடத்தில் பயன்பாட்டில் இருந்த ஓர் கல்லினன்னே புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது. முகேஷ் அம்பானி, அதிகம் தன்னுடைய பயணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவராக இருக்கின்றார். இதன் அடிப்படையிலேயே தன்னுடைய பயணங்களின் அவர் அதிக பாதுகாப்பான கார்களைப் பயன்படுத்தி வருகின்றார்.

ஏற்கனவே அவரிடத்தில் அதிக எண்ணிக்கையில் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவையில், முகேஷ் அம்பானி குடும்பத்தினர் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 குவார்ட் (Mercedes-Benz S600 Guard), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி (BMW 7-Series Hi Security) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்டு (Mercedes-Benz S680 Guard) உள்ளிட்ட கார் மாடல்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இசட் பிளஸ் மற்றும் என்எஸ்ஜி கமாண்டோக்களின் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இவை போதாது என்றே தங்களின் கார்களின் வாயிலாகவும் பாதுகாப்பை இந்த குடும்பத்தினர் அதிகப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே புதிதாக புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரும் லிஸ்ட்டில் இணைய இருக்கின்றது.

முகேஷ் அம்பானி பயன்படுத்தி வரும் அனைத்து ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களும் அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றன. இதனால்தான் சந்தையில் விற்பனையில் இருப்பவற்றைக் காட்டிலும் முகேஷ் அம்பானி இடத்தில் பயன்பாட்டில் இருப்பவற்றின் மதிப்பு சற்றே அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் மாடலில் வி12 ரக 6.75 லிட்டர் ட்வின் டர்போ மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 563 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு திறன் மிக்க கார்களை பயன்படுத்தும் குடும்பத்தினராக அம்பானி குடும்பத்தினர் காட்சியளிக்கின்றனர். இதற்கு சான்றாகவே மேலே பார்த்த கார்களின் லிஸ்ட் இருக்கின்றன. இந்த குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக அதிகம். இதன் விளைவாகவே அவர்கள் தங்களின் பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்வதில் மிகுந்த தீவிரம் காட்டுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 23, 2025, 12:04 [IST]
English summary
Ambanis expand their luxury fleet with indias first bulletproof rolls royce cullinan
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X