முகேஷ் அம்பானியின் கேரேஜில் மற்றுமொரு காடிலாக் சொகுசு கார்!! முதல்முறையாக சாலையில் காட்சி தந்தது!

இந்தியாவின் பெரும் பணக்காரர்களை லிஸ்ட் போட்டு பார்த்தோமேயானால், அதில் நிச்சயம் முகேஷ் அம்பானியின் பெயரும் அடங்கும். அந்த அளவிற்கு அதிகப்படியான சொத்துகளுக்கும், நிறுவனங்களுக்கும் அதிபராக முகேஷ் அம்பானி உள்ளார்.

முகேஷ் அம்பானியின் கேரேஜில் மற்றுமொரு காடிலாக் சொகுசு கார்!! முதல்முறையாக சாலையில் காட்சி தந்தது!

அதேநேரம் சொகுசு கார்களை வாங்கி குவிப்பதிலும் இவர் ஆர்வமிக்கவர் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. ஜியோ கேரேஜ் எனப்படும் இவரது கார் சேமிப்பிடத்தில் பல லக்சரி கார்களும், சூப்பர் கார்களும் உள்ளன. இந்த நிலையில் தற்போது மற்றுமொரு லக்சரி காருக்கும் முகேஷ் அம்பானி சொந்தகாரர் ஆகியுள்ளார்.

முகேஷ் அம்பானியின் கேரேஜில் மற்றுமொரு காடிலாக் சொகுசு கார்!! முதல்முறையாக சாலையில் காட்சி தந்தது!

இந்த வகையில் இவரது ஜியோ கேரேஜில் சமீபத்தில் இணைத்திருக்கும் லக்சரி கார் காடிலாக் எஸ்கலேட் எஸ்யூவி ஆகும். முகேஷ் அம்பானியின் இந்த புதிய காடிலாக் கார் தொடர்பாக ஒரே ஒரு படம் மட்டுமே இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காடிலாக் எஸ்கலேட் கார் கண்ணை கவரக்கூடிய சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் கேரேஜில் மற்றுமொரு காடிலாக் சொகுசு கார்!! முதல்முறையாக சாலையில் காட்சி தந்தது!

இந்திய சந்தையில் காடிலாக் நிறுவனம் அதன் எஸ்கலேட் எஸ்யூவி காரினை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்வது இல்லை. ஆதலால் இதனை முகேஷ் அம்பானி தனிப்பட்ட முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருக்க வேண்டும். தற்போதைகு உலகின் மிக விலைமிக்க, அசத்தலான தோற்றம் கொண்ட லக்சரி எஸ்யூவி கார்களுள் காடிலாக் எஸ்கலேட் மாடல் முதன்மையானது ஆகும்.

முகேஷ் அம்பானியின் கேரேஜில் மற்றுமொரு காடிலாக் சொகுசு கார்!! முதல்முறையாக சாலையில் காட்சி தந்தது!

இது சாலையை எந்த அளவிற்கு ஆக்கிரமித்து இயங்கும் என்பது இதன் படங்களை பார்க்கும்போதே தெரிந்திருக்கும். அத்துடன் இதன் பிரீமியம் தோற்றத்தை மேலும் மெருக்கேற்றும் வகையில் எஸ்கலேட் காரை சுற்றிலும் க்ரோம் தொடுதல்களை காடிலாக் நிறுவனம் வழங்குகிறது. வெளிநாடுகளில் பல பெரும் பணக்காரர்கள் காடிலாக் எஸ்கலேட் எஸ்யூவி காரினை பயன்படுத்தி வருகிறார்கள்.

முகேஷ் அம்பானியின் கேரேஜில் மற்றுமொரு காடிலாக் சொகுசு கார்!! முதல்முறையாக சாலையில் காட்சி தந்தது!

இவ்வளவு ஏன், நமது இந்திய குடியரசு தலைவர் கூட இந்த காடிலாக் எஸ்யூவி காரினை பயன்படுத்துகிறார். ஆகையால் காடிலாக் எஸ்கலேட் சொகுசு காரினை இந்தியாவில் முகேஷ் அம்பானி மட்டும் பயன்படுத்தவில்லை. மற்ற சில பெரும் பணக்காரர்களும் உபயோகப்படுத்தி வருகின்றனர். இவ்வளவு பெரிய உருவத்தை இயக்கி செல்வதற்கு ஏற்ப பெரிய அளவிலான என்ஜின் இந்த சொகுசு காரில் பொருத்தப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் கேரேஜில் மற்றுமொரு காடிலாக் சொகுசு கார்!! முதல்முறையாக சாலையில் காட்சி தந்தது!

எஸ்கலேட் எஸ்யூவி காரில் 6.2 லிட்டர் வி8 என்ஜினை காடிலாக் நிறுவனம் பொருத்துகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 420 பிஎச்பி மற்றும் 624 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அம்பானியின் கேரேஜில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரும் உள்ளது. லேண்ட் ரோவர் டிஃபெண்டரின் ஐந்து-இருக்கை வெர்சனாக 110 விளங்குகிறது.

முகேஷ் அம்பானியின் கேரேஜில் மற்றுமொரு காடிலாக் சொகுசு கார்!! முதல்முறையாக சாலையில் காட்சி தந்தது!

இந்திய சந்தையிலும் விற்பனையில் உள்ள டிஃபெண்டரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என 3 விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டு சந்தைகளில் சூப்பர்சார்ஜ்டு வி8 என்ஜின் தேர்விலும் இந்த ஆற்றல்மிக்க எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் டிஃபெண்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.80.72 லட்சங்களில் இருந்து ரூ.1.22 கோடி வரையில் உள்ளன.

முகேஷ் அம்பானியின் கேரேஜில் மற்றுமொரு காடிலாக் சொகுசு கார்!! முதல்முறையாக சாலையில் காட்சி தந்தது!

பொது சாலையில் காட்சி தந்திருந்த முகேஷ் அம்பானியின் டிஃபெண்டர் 110 காரினை வீடியோவாக அப்போது நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம். அத்துடன் கடந்த 2021ஆம் ஆண்டில் இரு லெக்ஸஸ் எல்.எக்ஸ்570 எஸ்யூவி கார்களையும் முகேஷ் அம்பானி தனது கேரஜில் சேர்த்திருந்தார். இதில் ஒன்று சில்வர் நிறத்திலும், மற்றொன்று வெள்ளை நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருந்தது.

முகேஷ் அம்பானியின் கேரேஜில் மற்றுமொரு காடிலாக் சொகுசு கார்!! முதல்முறையாக சாலையில் காட்சி தந்தது!

உலகளவில் பிரபலமான லெக்ஸஸ் பிராண்டின் முதன்மையான எஸ்யூவி மாடலாக விளங்கும் எல்.எக்ஸ்570 -இல் 5.7 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இது 362 பிஎச்பி மற்றும் 530 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் பெண்ட்லீ பெண்டைகா காரினை பெற்ற முதல் நபர்கள் அம்பானியின் குடும்பத்தினர்கள் ஆவர்.

முகேஷ் அம்பானியின் கேரேஜில் மற்றுமொரு காடிலாக் சொகுசு கார்!! முதல்முறையாக சாலையில் காட்சி தந்தது!

ரேசிங் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுகின்ற இந்த பெண்ட்லீ சொகுசு காரின் டபிள்யூ12 மாடலினை முகேஷ் அம்பானி சொந்தமாக கொண்டுள்ளார். அதாவது இதில் 6.0 இன்ச் இரட்டை-டர்போசார்ஜ்டு டபிள்யூ12 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 600 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. அம்பானியின் கேரேஜில் இரண்டு பெண்டைகா கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Wednesday, February 2, 2022, 20:59 [IST]
English summary
Ambanis jio garage adds new cadillac escalade to its fleet of suvs
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+