பெண்ட்லீ கார்களாக வாங்கி குவிக்கும் முகேஷ் அம்பானி!! 3வது பெண்டைகா கார் புதியதாக - வீடியோ!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் கேரேஜில் மற்றொரு பெண்ட்லீ பெண்டைகா கார் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பெண்ட்லீ கார்களாக வாங்கி குவிக்கும் முகேஷ் அம்பானி!! 3வது பெண்டைகா கார் புதியதாக - வீடியோ!

இந்தியாவின் பெரும் பணக்காரர்களுள் முதன்மையானவராக விளங்கும் முகேஷ் அம்பானியை பற்றிய தெரியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன். அந்த அளவிற்கு நாடு முழுவதும் பிரபலமான இவர் கார்களை வாங்கி குவிப்பதிலும் ஆர்வம் மிக்கவர் என்பது நமக்கு நன்றாக தெரியும்.

பெண்ட்லீ கார்களாக வாங்கி குவிக்கும் முகேஷ் அம்பானி!! 3வது பெண்டைகா கார் புதியதாக - வீடியோ!

குறிப்பாக, விலை & செயல்திறன்மிக்க லக்சரி கார்கள் இவரிடம் ஏராளமானவை உள்ளன. இவ்வளவு ஏன் முகேஷ் அம்பானியிடம் துப்பாக்கி குண்டு துளையாத கார்கள் கூட அவரது கேரேஜில் உள்ளன. இதனாலேயே முகேஷ் அம்பானி ஒரு காரில் செல்கிறார் என்றால், பாதுகாப்பிற்காக அவருக்கு முன்னாலும், பின்னாலும் ஏராளமான கார்கள் செல்லும்.

பெண்ட்லீ கார்களாக வாங்கி குவிக்கும் முகேஷ் அம்பானி!! 3வது பெண்டைகா கார் புதியதாக - வீடியோ!

இந்த வகையில் சமீபத்தில் இவரது கான்வே மும்பையில் வீடியோவாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கான்வேயில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் போன்ற உயர் தரத்திலான எஸ்யூவி கார்கள் பாதுகாப்பிற்காக முன்னாலும், பின்னாலும் செல்ல, மத்தியில் முகேஷ் அம்பானி புத்தம் புதிய பெண்ட்லீ பெண்டைகா ஃபேஸ்லிஃப்ட் காரில் சென்றுள்ளார். இது தொடர்பாக சிஎஸ்12 என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

முகேஷ் அம்பானியின் கேரேஜில் இணைந்துள்ள 3வது பெண்ட்லீ பெண்டைகா காராக விளங்கும் இது பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. கார் வாங்குவதில், முகேஷ் அம்பானி குடும்பத்தின் சமீப கால விருப்பமான நிறமாக வெள்ளை மாறி வருவதுபோல் தெரிகிறது. ஏனெனில் கடந்த மாதத்தில் இவரது கேரேஜில் இணைக்கப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரும் வெள்ளை நிறத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெண்ட்லீ கார்களாக வாங்கி குவிக்கும் முகேஷ் அம்பானி!! 3வது பெண்டைகா கார் புதியதாக - வீடியோ!

முகேஷ் அம்பானியிடம் உள்ள மற்ற இரு பெண்ட்லீ பெண்டைகா கார்கள் ரேசிங் பச்சை மற்றும் பழுப்பு நிறத்திலானவை. இதில் ஒன்றில் டபிள்யூ12 என்ஜினும், மற்றொன்றில் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான பெண்ட்லீ பெண்டைகா மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

பெண்ட்லீ கார்களாக வாங்கி குவிக்கும் முகேஷ் அம்பானி!! 3வது பெண்டைகா கார் புதியதாக - வீடியோ!

ஆனால் ஐரோப்பாவில் இதற்கு முன்னர் 2020லேயே வெளியீடு செய்யப்பட்டுவிட்டது. பெண்டைகா காரில் வி8 டீசல் என்ஜின் தேர்வை வழங்குவதை கடந்த ஆண்டில் நிறுத்திய பெண்ட்லீ வெளிநாட்டு சந்தைகளில் இந்த மாடலை டபிள்யூ12 பெட்ரோல் மற்றும் வி8 பெட்ரோல் என்ஜின் தேர்வுகளுடன் சந்தைப்படுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவில் இதில் வி8 பெட்ரோல் வேரியண்ட் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

பெண்ட்லீ கார்களாக வாங்கி குவிக்கும் முகேஷ் அம்பானி!! 3வது பெண்டைகா கார் புதியதாக - வீடியோ!

இருப்பினும் பெண்டைகாவின் டபிள்யூ12 வெர்சனை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வைத்துள்ளனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். தற்போது மேலுள்ள வீடியோவில் காட்சி தந்திருக்கும் வெள்ளை நிற பெண்டைகா காரை இப்போதுதான் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார் என்று நினைத்துவிட வேண்டாம். ஏனெனில் கடந்த 2021ஆம் ஆண்டிலேயே இதே கார் அம்பானி குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இருப்பிட பகுதியான அண்டிலியாவில் காட்சி தந்திருந்தது.

பெண்ட்லீ கார்களாக வாங்கி குவிக்கும் முகேஷ் அம்பானி!! 3வது பெண்டைகா கார் புதியதாக - வீடியோ!

ஆனால் அப்போது காரில் எந்தவொரு நம்பர் ப்ளேட்டும் பொருத்தியிருக்கவில்லை. இதனால் பல மாதங்களாக கேரேஜில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது பொது சாலையில் ஆர்டிஓ-வின் நம்பர் ப்ளேட்டுடன் காட்சி தந்திருப்பதால், புதிய பெண்டைகா ஃபேஸ்லிஃப்ட் காரை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

பெண்ட்லீ கார்களாக வாங்கி குவிக்கும் முகேஷ் அம்பானி!! 3வது பெண்டைகா கார் புதியதாக - வீடியோ!

பெண்டைகா வி8 பெட்ரோல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.4.10 கோடியாக உள்ளது. ஐரோப்பிய தொழிலதிபர்களே பெரும்பாலும் பயன்படுத்திவந்த பெண்ட்லீ நிறுவனத்தின் பெண்டைகா எஸ்யூவி காரை முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்த ஆரம்பித்தவர் முகேஷ் அம்பானி ஆவார். ரேசிங் பச்சை நிறத்தில் இருந்த இந்தியாவின் அந்த முதல் பெண்டைகா காரில் ப்ரீட்லிங் முல்லினர் டூர்பில்லன் கடிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.

பெண்ட்லீ கார்களாக வாங்கி குவிக்கும் முகேஷ் அம்பானி!! 3வது பெண்டைகா கார் புதியதாக - வீடியோ!

இது அந்த சமயத்தில் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியது. ஏனெனில் இந்த கடிகாரத்தின் விலை மட்டுமே ரூ.1 கோடிக்கு மேல் ஆகும். அந்த பெண்டைகா காரை முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானியை தவிர்த்து மற்றவர்கள் பெரியதாக உபயோகப்படுத்தியதாக தெரியவில்லை. அந்த காரில் 6 லிட்டர் டபிள்யூ 12 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 7, 2022, 19:00 [IST]
English summary
Ambanis jio garage attains third bentley bentayga suv in its collection
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+