விபத்தில் சிக்கிய காரை சரிசெய்து யூஸ் பண்றாங்களா! இந்தியால இல்லங்க இதுக்காக இத்தாலிக்கு அனுப்பி வச்சிருக்காங்க
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியிடம் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. சுமார் 110 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பைக் கொண்ட ஓர் பணக்காரரிடம் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்கள் இருப்பதில் என்ன ஆச்சரிம் இருக்கப் போகின்றது என நீங்கள் கேட்கலாம். ஆனால், அவரிடத்தில் இருக்கும் கார்கள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்ய வைப்பதில் ஒருபோதும் தவறியதில்லை. அந்த மாதிரியான கார்களையே அதிக அளவில் அவர் வைத்திருக்கின்றார்.
அதில் ஓர் கார் மாடலே ஃபெர்ராரி எஸ்எஃப் 90 ஸ்ட்ரடல் (Ferrari SF90 Stradale) சூப்பர் கார் ஆகும். இது 1000 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது. அம்பானியிடத்தில் ஒட்டுமொத்தமாக ஃபெர்ராரி நிறுவனத்தின் தயாரிப்புகள் மட்டுமே 9 யூனிட்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

அதில் ஒன்றே இந்த எஸ்எஃப் 90 ஸ்ட்ரடல் சூப்பர் காராகும். இதுவே சமீபத்தில் மிக மோசமான விபத்தில் சிக்கி கடுமையான சேதங்களுக்கு ஆளாகியிருக்கின்றது. இந்த காரையே அம்பானி குடும்பத்தினர் சரி செய்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பதிவெண்ணை வைத்தே அம்பானி குடும்பத்தினர் விபத்தில் சிக்கிய அந்த ஃபெர்ராரி சூப்பர் காரை மீண்டும் சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. 'எம்எச் 01 டிவி 777' எனும் பதிவெண்ணே விபத்தில் சிக்கிய எஸ்எஃப் 90 ஸ்ட்ரடல் சூப்பர் கார் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த பதிவெண்ணைக் கொண்ட காரே மீண்டும் புத்தம் புதியதாக அம்பானி வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றது. இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட ஓர் சூப்பர் கார் மாடலே ஃபெர்ராரி எஸ்எஃப் 90 ஸ்ட்ரடல் ஆகும்.
ஹைப்பர் லாஃபெர்ராரி கார் மாடலைக் காட்டிலும் அதிக ஆற்றலை இது உருவாக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலில் எஃப்154 ட்வின் டர்போ வி8 எஞ்சினையே ஃபெர்ராரி பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் மட்டுமே தனித்துவமாக 780 பிஎச்பி மற்றும் 800 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும்.
இத்துடன், சேர்த்து மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அவை மூன்றும் சேர்ந்து 220 பிஎச்பி வரை ஆற்றலை உருவாக்கும். எனவே இந்த காரின் ஒட்டுமொத்த ஆற்றல் 1000 பிஎச்பி ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 342 கிமீ ஆகும்.
மேலும், இதனால் வெறும் 2.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என கூறப்படுகின்றது. இத்தகைய சூப்பரான காரே சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில், அதற்கு மீண்டும் புத்துயிரை வழங்கியிருக்கின்றனர் அம்பானி குடும்பத்தினர். விபத்தினால் இந்த காரின் முன் பக்கம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தகுந்தது. பான்னெட் முழுவதுமாக சேதமாகி இருந்தது.
மேலும், சப் ஃப்ரேம், கூலிங் சிஸ்டம் என பல முக்கிய பாகங்களும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தன. இவை அனைத்தும் சரி செய்யப்பட்டே தற்போது புத்தம் புதிய கார் போல் அது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இத்தாலி மரனெல்லோ-வில் வைத்தே சரி செய்யப்பட்டு இந்த கார் மீண்டும் இந்தியா கொண்டு வரப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரை தற்போது பார்க்கும் அது விபத்தில் சிக்கிய வாகனம் என கூறவே முடியாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெரும் பணக்காரக் குடும்பமாக முகேஷ் அம்பானி குடும்பம் இருக்கின்றது. இவர்களிடத்தில் இல்லாத கார் மாடலே இருக்க முடியாது என கூறலாம். அந்த அளவிற்கே அம்பானி குடும்பத்தினரிடத்தில் மிக அதிக எண்ணிக்கையில் கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும், இவர்களிடத்தில் இந்தியாவில் விற்பனையில் இல்லாத சில கார் மாடல்கள் சிலவும் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதுதவிர, அவர்களிடத்தில் இருப்பது அனைத்துமே ஆடம்பர வகையைச் சேர்ந்த சொகுசு கார்கள் மட்டுமே என்றும் கூறப்படுகின்றது. குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இவர்களிடத்தில் மிக அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அளவிற்கே மிகப் பெரிய கார் காதலர்களாக இந்த இந்திய பணக்காரக் குடும்பம் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









