அம்பானியின் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை மட்டும் வெளியில் பார்க்கவே முடியாதே... அப்புறம் எப்படி? வெளியான படங்கள்!!

டயரில் காற்றை நிரப்புவதற்காக, முகேஷ் அம்பானியின் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls-Royce Ghost) அதிசயமாக வீட்டின் கேரேஜை விட்டு வெளியே வந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியிடம் உள்ள லக்சரி பொருட்களை பற்றி சொல்ல வேண்டாம், அந்த அளவிற்கு கொட்டி கிடக்கின்றன. குறிப்பாக, கார்கள் உள்பட மொத்தம் 168 வாகனங்கள் சொந்த குடும்ப பயன்பாட்டிற்காக அம்பானியிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கார்களை நிறுத்தவே வீட்டின் 6 மாடிகளை முகேஷ் அம்பானி பயன்படுத்துவதாக சில நாட்களாக ஒரு வதந்தி உள்ளது.

அபூர்வமாக சாலைக்கு வந்த அம்பானியின் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்!!

இத்தகையவரிடம் சொகுசு கார் இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. முகேஷ் அம்பானியிடம் உள்ள ரோல்ஸ்-ராய்ஸ் கார்களுள் கோஸ்ட் மாடலும் ஒன்றாகும். அம்பானியின் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் கார் சாலையில் சென்றால் நிச்சயமாக அனைவரது கவனமும் இந்த கார் மீதே இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு பிரத்யேகமான அலுமினிய கிரே நிற பெயிண்ட்டில் இந்த கார் உள்ளது.

இதனாலோ என்னவோ இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரை அம்பானி குடும்பத்தினர் அவ்வளவாக வெளியே எடுக்க மாட்டார்கள். அம்பானி கூட தன்னிடம் உள்ள 4 ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் லக்சரி எஸ்யூவி காரில் ஒன்றை தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார். ஆனால் சமீபத்தில், அருகில் இருந்த பெட்ரோல் நிலையத்தில் டயர்களில் காற்று நிரப்புவதற்காக அம்பானியின் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் கார் வெளியே வந்துள்ளது. இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதிவை கீழே காணலாம்.

7000க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ள இந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்கு பலத்தரப்பட்ட மக்கள் தங்களது பல்வேறு விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்களின் கமெண்ட், "அம்பானியின் கார் பெட்ரோல் நிலையத்தில்" என்றே உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், முகேஷ் அம்பானியிடம் 4 ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்கள் இருந்தாலும், ஒரேயொரு கோஸ்ட் கார் மட்டுமே அவரிடம் உள்ளது. இந்த கார்கள் அனைத்தும், அண்டிலியா என அழைக்கப்படும் அம்பானியின் கேரேஜில் உள்ளதாம்.

அம்பானியின் கேரேஜில் என்னென்ன கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதை காட்டும் வீடியோ ஒன்று சில வருடங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியானது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். அப்போது அந்த வீடியோவில், மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63, வெள்ளை நிற பென்ட்லீ முல்சன்னே, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் ட்ராப் ஹெட் கூபே, போர்ஷே கேயேன்னே உள்பட ஏகப்பட்ட லக்சரி கார்களை பார்க்க முடிந்தது.

அபூர்வமாக சாலைக்கு வந்த அம்பானியின் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட்!!

இத்துடன் இந்த கார்கள் வரிசை நிற்கவில்லை. ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் சீரிஸ் 8, டெஸ்லா மாடல் எஸ் 100டி, லம்போர்கினி உருஸ், பெண்ட்லீ பெண்டைகா டபிள்யூ12, ஃபெராரி எஸ்.எஃப்90 ஸ்ட்ராடேல் என இந்த வரிசை நீண்டு கொண்டுத்தான் போகிறது. இவற்றுடன் இரு தற்போதைய தலைமுறை ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார்களும் முகேஷ் அம்பானியிடம் உள்ளன. மேலும், இவரது பாதுகாப்பிற்கு புல்லட்ஃப்ரூஃப் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்600 காரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

விலைமிக்கவை தான் என்றாலும், ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் நம் நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. இருப்பினும், முகேஷ் அம்பானியின் இந்த குறிப்பிட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் கார் கேரேஜை விட்டு வெளியே அவ்வளவாக வருவதில்லை, அதனால்தான் சாலையில் இந்த கார் தென்பட்டாலே உடனே புகைப்படங்களை எடுத்து விடுகின்றனர்.

Article Published On: Monday, March 27, 2023, 19:13 [IST]
English summary
Ambanis rolls royce ghost filled air at petrol station in mumbai
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+