Just In
- 47 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குழந்தை உயிருக்காக கை கோர்த்த மக்கள்... 400 கிமீ தொலைவை ஆம்புலன்ஸ் விரைவாக கடந்தது இப்படித்தான்...
பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக மக்கள் ஒன்று திரண்டனர். இதன் மூலம் 400 கிலோ மீட்டர்கள் தொலைவை ஆம்புலன்ஸ் விரைவாக கடந்தது.

கடந்த ஏப்ரல் 16ம் தேதி (செவ்வாய் கிழமை) ஒட்டுமொத்த கேரள மாநிலமும் ஒன்று திரண்டு, பிறந்து 15 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த அந்த குழந்தைக்கு அவசரமாக இதய வால்வு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

எனவே அந்த குழந்தையை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது. ஆனால் ஆகாய மார்க்கமாக குழந்தையை கொண்டு செல்ல டாக்டர்கள் தடை விதித்து விட்டனர். ஆகாய மார்க்கமாக பயணித்தால், குழந்தையின் உடல் அதனை ஏற்று கொள்ளாது என டாக்டர்கள் எச்சரித்தனர்.

இதனால் செய்வதறியாமல் தவித்த குழந்தையின் உறவினர்கள், சாலை மார்க்கமாக ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை நேரடியாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் மங்களூரு-திருவனந்தபுரம் இடையேயான தொலைவு சுமார் 600 கிலோ மீட்டர்கள். ஆம்புலன்ஸில் சென்றாலும் கூட சுமார் 12 மணி நேரம் ஆகும்.

எனவே இந்த விஷயத்தை கேள்விபட்ட கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, குழந்தையை கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு எடுத்து வரும்படி, குழந்தையின் உறவினர்களிடம் கேட்டு கொண்டார். இதனை குழந்தையின் உறவினர்களும் ஏற்று கொண்டனர். இதன்பின் கடந்த ஏப்ரல் 16ம் தேதி காலை 11 மணியளவில், மங்களூரு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

முன்னதாக குழந்தையை ஏற்றி வரும் ஆம்புலன்ஸின் பதிவு எண்ணுடன் (KL 60 J 7739) கூடிய மெசேஜ் ஒன்று கேரள மாநிலம் முழுவதும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை ஒன்று உயிருக்கு போராடி வருவதாகவும், அந்த குழந்தையை ஏற்றி கொண்டு வரும் ஆம்புலன்ஸிற்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் அந்த மெசேஜில் தெரிவிக்கப்பட்டது.

கேரள மக்கள் அனைவரும் சமூக வலை தளங்களில் இதனை அதிகம் பகிரவே இந்த பதிவு வைரல் ஆனது. கேரள மாநில முதல்வர் பினராய் விஜயனும் கூட பொது மக்களிடம் இதனை வலியுறுத்தினார். சரியான நேரத்தில் மருத்துவமனையை குழந்தை அடைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். இதனால் ஒன்று திரண்டு மக்கள் ஆம்புலன்ஸ் பயணம் செய்த பாதை முழுவதும் அதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

இதன் காரணமாக மாலை 4.30 மணியளவில் ஆம்புலன்ஸ் கொச்சி மருத்துவமனையை சென்றடைந்தது. அதாவது மங்களூருவில் இருந்து சுமார் 420 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள கொச்சியை அந்த ஆம்புலன்ஸ் சுமார் 5.30 மணி நேரத்தில் சென்றடைந்தது. அரசின் ஹிருதயம் திட்டத்தின் கீழ் அந்த குழந்தைக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க கேரள மாநில சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக மங்களூருவில் இருந்து கொச்சிக்கு ஆம்புலன்ஸை பாதுகாப்பாக ஓட்டி சென்ற டிரைவர் ஹாசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆம்புலன்ஸ் செல்லும் போது பேஸ்புக்கில் லைவ் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் விரைவாக வழி ஏற்படுத்தி கொடுக்க இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
|
ஒரு உயிரை காப்பாற்ற அவசரமாக வரும் ஆம்புலன்சுக்கு வழி விடுவது என்பது மிகவும் அவசியமானது. பெரும்பாலானோர் ஆம்புலன்சுக்கு வழி விடும் பழக்கத்தை தவறாமல் கடை பிடித்து வருகின்றனர். ஆனால் வேறு சிலரோ கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் ஆம்புலன்சுக்கு வழி விடாமல் பயணிக்கும் சம்பவங்களும் நடக்கவே செய்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன் இதே கேரள மாநிலத்தில் ஆம்புலன்சுக்கு வழி விடாமல் வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். சட்டத்திற்கு அப்பாற்பட்டு, ஆம்புலன்சுக்கு வழி விடுவது என்பது ஒரு மனிதாபிமான செயலாக உள்ளது. நீங்கள் ஓட்டி சென்று கொண்டிருக்கும் வாகனத்திற்கு பின்னால் ஆம்புலன்ஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? என்பதை இனி பார்க்கலாம்.

உங்கள் பின்னால் சைரனை ஒலித்து கொண்டு ஆம்புலன்ஸ் வந்தால் முதலில் பதற்றம் அடையாதீர்கள். ஆம்புலன்ஸ் சைரன் ஒலியை கேட்டாலே பதற்றம் அடையும் இயல்பு பலருக்கும் உள்ளது. அதற்கு பதிலாக உடனடியாக ஒதுங்கி நில்லுங்கள். இதன் மூலம் கிடைக்கும் வழியில் ஆம்புலன்ஸ் சென்று விடும். இதன் பின்பு சற்று நிதானமாக அங்கிருந்து கிளம்புங்கள்.

ஆம்புலன்ஸை தவிர வேறு எந்த வாகனத்தாலும் சிகப்பு விளக்கை கடந்து செல்ல முடியாது. ஆனால் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது, ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சிக்னலை கடந்து சென்று விடும் வழக்கம் வாகன ஓட்டிகள் பலரிடமும் உள்ளது. இதனால் போக்குவரத்தில் தேவையற்ற குழப்பம்தான் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சைரனுடன் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் போது எதற்காகவும் ஹாரனை ஒலிக்காதீர்கள். அத்துடன் ஆம்புலன்ஸை ஓவர் டேக் செய்யவும் வேண்டாம். இதன் மூலம் ஆம்புலன்ஸ் வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணிப்பதை உறுதி செய்ய முடியும்.