மாரடைப்பால் பாதிக்கப்படுவர்களை காக்க பறந்து வரும் ஆளில்லா குட்டி விமானம்!

மாரடைப்பு நோயாளிகளுக்கு விரைவாக முதலுதவி கிடைக்கும் விதத்தில், மருத்துவ சாதனங்கள் கொண்ட புதிய ஆளில்லா குட்டி விமானத்தை டெல்ஃப் பல்கலைகழக மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

அலெக் மொமான்ட் என்ற அந்த மாணவர் வடிவமைத்திருக்கும் இந்த புதிய குட்டி விமானம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரங்களில் மாரடைப்பால் பாதிக்கப்படுவோருக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இது எவ்வாறு முதலுதவியை வழங்கும் என்பதை ஸ்லைடரில் காணலாம்.


விரைவான சேவை

விரைவான சேவை

இந்த ஆளில்லா குட்டி விமானம் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பறக்கும் என்பதால், மிக விரைவாக பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடத்தை அடைந்துவிடும்.

 கட்டுப்பாட்டு அறை உதவி

கட்டுப்பாட்டு அறை உதவி

இந்த ஆளில்லா குட்டி விமானத்தில் கேமரா மற்றும் நேவிகேஷன் சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதால், துல்லியமாக சென்றடையும். மேலும், குட்டி விமானம் செல்வதை கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர் நேரடியாக பார்க்க முடியும். மேலும், நோயாளிக்கு அருகில் இருப்பவரிடம் மருத்துவ கருவியை எவ்வாறு கையாண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதையும் மொபைல்போன் மூலமாக நேரடியாக தெரிவிக்க முடியும்.

முதலுதவி சிகிச்சை

முதலுதவி சிகிச்சை

இந்த குட்டி விமானத்தில் பொருத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமக்கப்பட்ட டெஃபிபிரில்லியேட்டர் என்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும். இதனை நோயாளியின் அருகில் இருப்பவரின் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளிக்க முடியும். மாரடைப்பு தவிர்த்து மூச்சுத் திணறலால் சிரமப்படுபவர்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும்.

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

ஆண்டுதோறும் பல மில்லியன் மக்கள் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். அதில், குறித்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், பலர் உயிரிழக்கின்றனர். இந்தநிலையில், இந்த புதிய ஆளில்லா குட்டி விமானம் பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வரும்போது பலரின் உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வீடியோ விளக்கம்

இந்த ஆளில்லா ஆம்புலன்ஸ் விமானத்தின் செயல்பாட்டை விளக்கும் வீடியோ.


More from DriveSpark

Article Published On: Friday, October 31, 2014, 12:25 [IST]
English summary
Each year nearly a million people in Europe suffer from a cardiac arrest. A mere 8% survives due to slow response times of emergency services. The ambulance-drone is capable of saving lives with an integrated defibrillator. The goal is to improve existing emergency infrastructure with a network of drones. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+