சிட்டி டிராப்கில் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

ஆம்புலன்ஸ் சைரன் போட்டு சென்றால் எல்லோரும் அந்த வாகனத்திற்காக வழி விட வேண்டும் தான். ஆனால் இந்தியாவில் உள்ள வாகன நெருக்கடியில் எல்லா இடங்களிலும் இது சாத்தியப்படாத ஒன்று.

ஆம்புலன்ஸ் சைரன் போட்டு சென்றால் எல்லோரும் அந்த வாகனத்திற்காக வழி விட வேண்டும் தான். ஆனால் இந்தியாவில் உள்ள வாகன நெருக்கடியில் எல்லா இடங்களிலும் இது சாத்தியப்படாத ஒன்று. இந்த வகையில் கேரளாவில் சிட்டி டிராபிக்கில் 60 கி.மீ. வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸிற்கு மக்கள் வழிவிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

சிட்டி டிராப்பிற்குள் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

இந்திய ரோடுகள் பெரும்பாலும் வாகன நெருக்கடி நிறைந்த ரோடுகள் தான். இந்திய டிரைவர்கள் பெரும்பாலும் லேன் முறையை ஒழுங்காக கடைபிடிப்பதில்லை. இதனால் பல நேரங்களில் அவசரமாக செல்ல வேண்டிய வாகனங்களாக ஆம்புலன்ஸ், தீயனைப்பு வாகனம், போலீஸ் வாகனங்களும் அவ்வபோது டிராபிக்கில் சிக்குவதை பார்த்திருப்போம்.

சிட்டி டிராப்பிற்குள் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

இந்தியா போன்ற பெரும் ஜனத்தொகை கொண்ட நாட்டில் இவ்வாறான நெருக்கடியை சமாளிப்பதது மிகப்பெரிய கடினம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒழுக்கத்ததை கொண்டு வந்தால் மட்டும் இந்த பிரச்னையை ஒரளவிற்காகவாது சமாளிக்க முடியும். சமீபகாலமாக மீடியாக்களின் தாக்கத்தால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விட வேண்டும் என்று மக்கள் மத்தியில் எண்ணம் வந்து விட்டது.

சிட்டி டிராப்பிற்குள் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

அதை நாம் உணரும் விதமாக கேரள மாநிலத்தில் ஆம்புலன்ஸிற்கு காரில் செல்பவர்கள் வழி விடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியிருந்தது. அது காண்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது. இந்தியர்கள் மத்தியில் ஆம்புலன்ஸிற்கு வழிவிட வேண்டும் என இவ்வளவு தூரம் விழிப்புணர்வு வந்துவிட்டாத என்று தோன்றுகிறது. இது போன்ற காட்சியை இந்தியா போன்ற வேறு நாடுகளில் பார்ப்பது சிரமம்.

சிட்டி டிராப்பிற்குள் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

கேரளாவில் உள்ள ஒரு ஆம்புலன்ஸின் டேஸ் போர்டில் அமைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சி. இதில் ஆம்புலன்ஸ் சிங்கிள் லேன் உள்ள பிரிக்கப்படாத ரோட்டில் பயணம் செய்கிறது. சைரன் சத்தம் மற்றும் தொடர் ஹாரன் ஒலித்து கொண்டே வேகமாக ஆம்புலன்ஸ் செல்கிறது.

சிட்டி டிராப்பிற்குள் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

எவ்வளவு வேகம் என சொல்ல முடியாவிட்டாலும், சுமார் 60 கி.மீ. வேகத்தில் ஆம்புலன்ஸ் செல்கிறது என கணிக்க முடிகிறது. இந்த ஆம்புலன்ஸ் டிரைவர் சைரன் மற்றும் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டு முன்னே செல்லும்வாகன ஓட்டிகளை எச்சரித்து சென்றதால் ஆம்புலன்ஸிற்கு எல்லா வாகன ஓட்டிகளும் வழிவிட்டனர்.

சிட்டி டிராப்பிற்குள் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

இது போன்ற சம்பவத்தை இந்தியாவில் பார்ப்பது மிகவும் சிரமம், வாகன ஓட்டிகளே ஆம்புலன்ஸிற்கு வழி விட வேண்டும் என நினைத்தாலும், இங்குள்ள வாகன நெருக்கடியில் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் குறைவு தான். ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும் டிராப்பிக்கில் சிக்கும் நிலையை தான் இங்கே பார்க்க முடியும்.

சிட்டி டிராப்பிற்குள் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

இந்நிலையில் கேரள மாநிலம் இந்த இரண்டு வாகனங்களும் விரைவாக செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவசர வாகளுக்கான கிரீன் காரிடார் என்ற பாதையை உருவாக்கி வருகிறது. முக்கியமாக உடல் உறுப்புகள் தானம் செய்யும் போது வாகனங்கள் விரைவாக செல்ல இந்த பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.

சிட்டி டிராப்பிற்குள் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

கடந்த ஆண்டு கேராளாவில் உடல் உறுப்பு தானத்திற்காக 516 கிலோ மீட்டரை வெறும் 7 மணி நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் கடந்துள்ளது. தற்போது கரீஸ் காரிடார் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

சிட்டி டிராப்பிற்குள் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

இது மக்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் அவர்கள் ஆம்புலன்ஸிற்கு ஆச்சரிப்படுத்தும் வகையில் வழிவிட்டுள்ளனர். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இது கேரளாவில் நடக்கும் ஒரு நிகழ்வு தான். ஆனால் இது போன்ற பல நிகழ்வுகள் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இதற்கான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

சிட்டி டிராப்பிற்குள் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

அவசர கால வாகனங்களுக்கு வழி விட வேண்டியது. ரோட்டில் வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரின் கடமை. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அங்கு ஒரு உயிர் துடித்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம் நமக்கு வரவேண்டும். ரோட்டில் உள்ள டிராப்பிக்கில் அவசர கால வாகனங்கள் சிக்கிய காரணத்தால் கூட உயிரிழப்புகள் ஏற்படலாம்.

சிட்டி டிராப்பிற்குள் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

இந்தியாவில் அவசர கால வாகனங்களாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், போலீஸ் வாகனம் ஆகிய வாகனங்கள் சைரன் போட்டு கொண்டு செல்லும் போது அந்த வாகனத்திற்க வழி விடாத வாகனங்களுக்கு ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என சட்டம் உள்ளது.

சிட்டி டிராப்பிற்குள் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

ஆனால் இவ்வாறு யாருக்காவது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்றால் அது கேள்வி குறி தான். ஆம்புலன்ஸிற்கு வழி விட வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வர வேண்டும். அதற்காக அரசும் களப்பணியாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Ambulance racing through crowded Kerala traffic & people actually giving way. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X