கைவிட்ட ஆம்புலன்ஸ்கள்.. தற்காலிக உயிர் காக்கும் வாகனங்களாக மாறும் ஓலா-ஊபர் கார்கள்.. எங்கு தெரியுமா?

கொரோனாவிற்கு எதிரான போரில் உயிர்காக்கும் வாகனங்களாக ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களின் கார்கள் மாறவிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் நாம் காணலாம்.

கைவிடும் ஆம்புலன்ஸ்கள்.. தற்காலிக உயிர் காக்கும் வாகனங்களாக மாறும் ஓலா-ஊபர் காகள்.. எங்கு தெரியுமா..?

நாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் முடக்கும் விதமாக தேசிய ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமலுக்கு வருவதற்கு முன்பாகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவிட்டன. இதனால், வணிகத்துறை மற்றும் டெலிவரி உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் இயக்கம் முன்பிருந்ததைக் காட்டிலும் மிக மிக குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது.

கைவிடும் ஆம்புலன்ஸ்கள்.. தற்காலிக உயிர் காக்கும் வாகனங்களாக மாறும் ஓலா-ஊபர் காகள்.. எங்கு தெரியுமா..?

ஏன், நாட்டின் சில பகுதிகளில் அவசர உதவிக்காக பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ்களின் இயக்கம்கூட மிகக் குறைந்த உள்ளது. இதனால், வழக்கமான பரிசோதனை மற்றும் உதவிக்காக மருத்துவமனையை அணுகவோர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அரசின் 108 ஆம்புலன்ஸ்கள் முற்றிலுமாக கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டு வருவதால் அதன் வருகையும் தற்போது முற்றிலும் கேள்விக் குறியாக மாறியுள்ளது.

கைவிடும் ஆம்புலன்ஸ்கள்.. தற்காலிக உயிர் காக்கும் வாகனங்களாக மாறும் ஓலா-ஊபர் காகள்.. எங்கு தெரியுமா..?

அதேசமயம், சாதாரண மருத்துவத்தைக் காட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிப்பட்டவர்களுக்கே அரசும், சுகாதாரத்துறையும் அதிக முன்னுரிமைக் கொடுத்து 108 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தி வருகின்றன.

இதுமாதிரியான சூழ்நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை மற்றும் அவசர கால உதவிகளுக்காக தங்கள் நிறுவன வாடகை கார்களை ஆம்புலன்ஸாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கால் டாக்ஸி துறையில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கைவிடும் ஆம்புலன்ஸ்கள்.. தற்காலிக உயிர் காக்கும் வாகனங்களாக மாறும் ஓலா-ஊபர் காகள்.. எங்கு தெரியுமா..?

இதற்காக 100-க்கும் மேற்பட்ட கார்களை அது தயார் நிலையில் நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த சேவையை அவ்விரு நிறுவனங்களும் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவிற்கு மட்டுமே அறிவித்துள்ளன.

கர்நாடக அரசு முன்னெடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் ஓலா மற்றும் ஊபர் ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை தொடங்கியிருக்கின்றன. இதற்காக பிரத்யேக தொலைபேசி எண்களையும் அவை வெளியிட்டிருக்கின்றன.

கைவிடும் ஆம்புலன்ஸ்கள்.. தற்காலிக உயிர் காக்கும் வாகனங்களாக மாறும் ஓலா-ஊபர் காகள்.. எங்கு தெரியுமா..?

அவை 9154153917, 9154153918 ஆகிய இரு எண்கள் வாயிலாக தொடர்பு கொண்டோ அல்லது ஓலா மற்றும் ஊபர் செல்போன் ஆப்பின் மூலமாகவோ இந்த அவசர சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இதுமாதிரியான சூழ்நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வாகனங்களைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் பல தங்களின் சிறப்பு சேவைகள் மூலம் அரசுகளுக்கு உதவி வழங்கி வருகின்றன.

கைவிடும் ஆம்புலன்ஸ்கள்.. தற்காலிக உயிர் காக்கும் வாகனங்களாக மாறும் ஓலா-ஊபர் காகள்.. எங்கு தெரியுமா..?

அந்தவகையில், ஏற்கனவே சுகாதாரத்துறைச் சார்ந்து பணியாற்றுபவர்களுக்கு இலவச பயண சேவையை வாடகை கார் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. இதைத்தொடர்ந்து, கொரோனா அல்லாத உடல்நலம் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு உதவும் விதமாக சிறப்பு 108 ஆம்புலன்ஸ்களாக அவை மாறியிருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இந்த சேவை வருகின்ற ஏப்ரல் 15ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவிடும் ஆம்புலன்ஸ்கள்.. தற்காலிக உயிர் காக்கும் வாகனங்களாக மாறும் ஓலா-ஊபர் காகள்.. எங்கு தெரியுமா..?

இந்த வாகனங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை மற்றும் மருத்துவமனையில் இருந்து வீடு உள்ளிட்ட பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், இந்த சிறப்பு சேவைக்கு பயனர்களிடத்தில் இருந்து மிகக் குறைந்த கட்டணமே அவை வசூலிக்க இருக்கின்றன.

இந்த சிறப்பு வாகனங்களின் முன் மற்றும் பின் பக்கங்களில் கர்நாடக அரசின் முத்திரை மற்றும் அரசு அதிகாரிகளின் ஒப்புதல் அளித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும். இந்த வாகனங்களில் கோவிட்19 வைரசால் தாக்கப்படாத நபர்களுக்கு பயன்படுத்தப்பட்டாலும், பாதுகாப்பு கவசங்கள் அணிவது கட்டாயமாகியுள்ளது.

கைவிடும் ஆம்புலன்ஸ்கள்.. தற்காலிக உயிர் காக்கும் வாகனங்களாக மாறும் ஓலா-ஊபர் காகள்.. எங்கு தெரியுமா..?

மேலும், இந்த வாகனங்களில் நோயாளிகள் பயணிக்கும்போது ஏசி ஆஃப் செய்தல் மற்றும் ஜன்னல்கள் திறந்திருத்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகையால், பயனர் மற்றும் ஓட்டுநர் முகமூடி அணிவது மிக மிக கட்டாயமாகியுள்ளது.

தற்போது, கர்நாடாகவில் 175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை 62 பேருக்கு மட்டுமே அது உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கைவிடும் ஆம்புலன்ஸ்கள்.. தற்காலிக உயிர் காக்கும் வாகனங்களாக மாறும் ஓலா-ஊபர் காகள்.. எங்கு தெரியுமா..?

அதேசமயம், உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில், நேற்று வரை இந்த வைரஸ் பாதிப்பால் 82,005 உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பால் 1,942 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கைவிடும் ஆம்புலன்ஸ்கள்.. தற்காலிக உயிர் காக்கும் வாகனங்களாக மாறும் ஓலா-ஊபர் காகள்.. எங்கு தெரியுமா..?

இதுவரை 209 நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் 14,30,516 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதேசமயம், கொரோனாவால் பதிக்கப்படுவோர் குணமடைவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில், இதுவரை 3,01,828 பேர் குணமடைந்தனர். இந்தியாவிலும் இந்த வைரசின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த மாதத்தின் இறுதி வரை நூற்றுக் கணக்கில் மட்டுமே காணப்பட்ட பாதிப்பு எண்ணிக்கை, தற்போது ஆயிரக் கணக்கிற்கு முன்னேறியுள்ளது. ஆகையால், எதிர்காலத்தில் இது கூடுதல் எண்ணிக்கைப் பெறுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Due To Ambulance Shortage Uber & Ola Provide 100 Cabs For Non-Coronavirus Patients. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X