சாதாரண காரில் வந்து இறங்கிய அழகு பதுமை! அவங்களா இது! பாத்த உடனே எல்லாரும் ஐஸ் கட்டி மாதிரி ஒறஞ்சு போய்ட்டாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை (Price) 14.01 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.18 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்பட்டு வருகின்றன. அவை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும்.

Mahindra XUV 700

சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களுடன், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கருதப்படுகிறது.

சாதாரண மக்களுக்கு வேண்டுமானால் இது மிகவும் விலை உயர்ந்த காராக இருக்கலாம். ஆனால் திரைப்பட நடிகர், நடிகைகளை எல்லாம் பொறுத்தவரையில் இது மிகவும் சாதாரணமான ஒரு கார்தான். எனவே திரைத்துறையை சேர்ந்த ஒருவர் இந்த காரை வாங்கினால், அது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

Ameesha Patel Buys Mahindra XUV 700

இப்படிப்பட்ட சூழலில், அனைவருக்கும் நன்கு பரிட்சயமான பிரபலம் ஒருவர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்கியுள்ளார். அவர் அமீஷா பட்டேல் (Ameesha Patel) ஆவார். இவர் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்த சூழலில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு திரையரங்கத்திற்கு, தான் புதிதாக வாங்கியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் அமீஷா பட்டேல் வந்துள்ளார். அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் தற்போது கடார் 2 (Gadar 2) திரைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படத்தில் அமீஷா பட்டேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் வழங்கிய வரவேற்பிற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே, அமீஷா பட்டேல் தியேட்டருக்கு வந்தார்.

அமீஷா பட்டேல் வந்த நேரத்தில் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் கூடியிருந்தனர். அவர்களுக்கு காரில் நின்றபடியே, அமீஷா பட்டேல் நன்றி தெரிவித்தார். மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில், பனரோமிக் சன்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் வழியாக அமீஷா பட்டேல், ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது கிடைக்க கூடிய அதிநவீன மற்றும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 உள்ளது. இதன் காரணமாக அமீஷா பட்டேல், இந்த காரை தேர்வு செய்திருக்கலாம். டாடா சஃபாரி (Tata Safari) உள்ளிட்ட கார்களுக்கு மிக கடுமையான சவாலை மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் வழங்கி வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார், கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது நடந்து சுமார் 2 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இன்றளவும் கூட மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. இது இந்த காருக்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கு முக்கியமான சாட்சிகளில் ஒன்று!

Article Published On: Wednesday, August 16, 2023, 18:13 [IST]
English summary
Ameesha patel buys mahindra xuv 700 video all you need to know
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+