22 வருஷத்துக்கு முன்னாடி விஜய் கூட நடிச்ச பிறகு காணாம போன நடிகையா இது! சொகுசு கார்ல வந்து இறங்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கார்னிவல் (Kia Carnival). இது பிரீமியம் எம்பிவி (Premium MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மிகவும் விலை உயர்ந்த கியா கார்னிவல் காரை, திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் வைத்துள்ளனர். இதில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina), பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே (Chunky Panday) மற்றும் பாலிவுட் பாடகர் சுனிதி சௌகான் (Sunidhi Chauhan) போன்றவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இந்த சூழலில் பிரபல நடிகை ஒருவர் கியா கார்னிவல் காரில் வந்து இறங்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த நடிகை விமான நிலையத்திற்கு (Airport) கியா கார்னிவல் காரில் வந்து இறங்கியபோது இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

Ameesha Patel

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்க்கும் நடிகை அமீஷா பட்டேல் (Ameesha Patel) ஆவார். இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியிலும் கூட ஒரு திரைப்படத்தில் அமீஷா பட்டேல் நடித்துள்ளார். அது புதிய கீதை (Pudhiya Geethai) ஆகும்.

கடந்த 2003ம் ஆண்டு வெளியான புதிய கீதை திரைப்படத்தில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) கட்சியின் தலைவருமான விஜய் (Vijay) மற்றும் மீரா ஜாஸ்மின் (Meera Jasmine) ஆகியோருடன் இணைந்து, அமீஷா பட்டேலும் நடித்திருந்தார். ஆனால் அதற்கு பிறகு அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Ameesha Patel Spotted In Kia Carnival

மாறாக ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். தற்போது அவருக்கு கிட்டத்தட்ட 50 வயதாகி விட்டது. ஆனால் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் அமீஷா பட்டேல் இன்னும் இளமையாகவே தென்படுகிறார் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அவர் பயன்படுத்திய கியா கார்னிவல் கார், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் மிகவும் விலை உயர்ந்தது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கியா கார்னிவல் கார் 63.90 லட்ச ரூபாயாக உள்ளது. இத்தனைக்கும் இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டும்தான்.

ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 80 லட்ச ரூபாய் வரும். ஆனால் அமீஷா பட்டேல் பயன்படுத்திய கியா கார்னிவல் காரின் விலை இவ்வளவு இருக்காது. ஏனெனில் இது கடந்த 2022ம் ஆண்டு வாங்கப்பட்ட முந்தைய தலைமுறை மாடல் ஆகும். கியா கார்னிவல் காரின் முந்தைய தலைமுறை மாடலின் விற்பனை கடந்த 2023ம் ஆண்டே நிறுத்தப்பட்டு விட்டது.

கியா கார்னிவல் காரின் முந்தைய தலைமுறை மாடலின் விலை அதிகம்தான் என்றாலும் கூட, இவ்வளவு அதிகம் எல்லாம் கிடையாது. ஆனால் கியா கார்னிவல் காரின் புதிய தலைமுறை மாடல், கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய தலைமுறை மாடல்தான் தற்போது ஒரே ஒரு வேரியண்ட்டில் சுமார் 80 லட்ச ரூபாய் என்ற ஆன்-ரோடு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கார்னிவல் பிரீமியம் எம்பிவி காரில் வந்து இறங்கிய நடிகை அமீஷா பட்டேல், இந்தியாவின் மற்ற நடிகைகளை போலவே மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர். அவரிடம் உள்ள சொகுசு கார்களே இதற்கு சாட்சி.

நடிகை அமீஷா பட்டேலிடம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் (Mercedes Benz S Class), ஆடி ஏ5 (Audi A5) மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) போன்ற விலை உயர்ந்த கார்கள் எல்லாம் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 1, 2025, 17:11 [IST]
English summary
Ameesha patel spotted in kia carnival premium mpv viral video full details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+